12/19/2013
11/01/2013
படங்களை பயன்படுத்தி எப்படி குகூலில் தேடுவது
இன்றைய உலகில் எந்த சந்தேகம் வந்தாலும் அல்லது எதனை பற்றி அறிந்து கொள்வதற்கும் நாம் பயன்படுத்தும் ஒரே கருவி குகூல் தான். குகூல் பல அம்சங்களை நமக்கு வழங்கி தேடலை எளிதாக மாற்றி வருகிறது . இதனை பற்றி எத்தனை பேருக்கு தெரியும் என்று எனக்கு தெரியவில்லை இருப்பினும் இந்த பதிவு உங்களுக்கு உதவும் என்ற நம்பிக்கையுடன் எழுதுகிறேன்....
குகூல் தேடல் இயந்திரம் சொற்களை மட்டும் வைத்து தகவல்களை தேடி தருவது போல் படங்களை வைத்தும் நமக்கு தேவையாண தகவலை பெற முடியும்..... உதாரணமாக நம்மிடம் இருக்கும் படம் எந்த இணையதளதில் உள்ளது எத்தனை விதங்களில் உள்ளது என்பதை இதனை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம் .... தேடும் முறையை விளக்குகிறேன்..... முதலாவது குகூல் பக்கத்திற்கு செல்லவும் இப்போது கீழே காட்டும் விண்டோ திறக்கும்
அதன் வலது மேல் பக்கத்தில் உள்ள சொடுக்குங்கள்(கிளிக்)
தற்போது மேலே குறியிட்டுள்ள படத்தை பதிவேற்ற என்றொரு லிங்க் இருக்கும் அதனை சொடுக்கவும்
தெரிந்தெடுக்கும் வாய்ப்பு திறக்கும் அதனை சொடுக்கவும்
தற்போது தேடல் முடிவுகளை பாருங்கள் நீங்கள் பதிவேற்றிய படத்திற்கு இணையான படங்கள் உள்ள லிங்க் காண்பிக்க படும் இதன் மூலம் அந்த படத்தின் தகவலை நீங்கள் எளிதில் அறிந்து கொள்ளலாம் .... இதில் ஏதாவது சந்தேகமோ அல்லது கேள்வியோ இருப்பின் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் என்னால் இயன்றவரை பதிலளிக்கிறேன்........
குகூல் தேடல் இயந்திரம் சொற்களை மட்டும் வைத்து தகவல்களை தேடி தருவது போல் படங்களை வைத்தும் நமக்கு தேவையாண தகவலை பெற முடியும்..... உதாரணமாக நம்மிடம் இருக்கும் படம் எந்த இணையதளதில் உள்ளது எத்தனை விதங்களில் உள்ளது என்பதை இதனை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம் .... தேடும் முறையை விளக்குகிறேன்..... முதலாவது குகூல் பக்கத்திற்கு செல்லவும் இப்போது கீழே காட்டும் விண்டோ திறக்கும்
அதன் வலது மேல் பக்கத்தில் உள்ள சொடுக்குங்கள்(கிளிக்)
இப்போது ஒரு தேடுவதற்காக உள்ள கட்டம் தோன்றும் அந்த கட்டத்தின்(பாக்ஸ்) உள்ளே வலது புறத்தில் உள்ள கேமரா போன்ற வடிவில் உள்ள படத்தை சொடுக்குங்கள்
தற்போது மேலே குறியிட்டுள்ள படத்தை பதிவேற்ற என்றொரு லிங்க் இருக்கும் அதனை சொடுக்கவும்
தெரிந்தெடுக்கும் வாய்ப்பு திறக்கும் அதனை சொடுக்கவும்
நீங்கள் எந்த படத்தை பயன்படுத்தி தேட விரும்புகிறிர்களோ அதனை தெரிவு செய்து கொள்க
தெரிவு செய்தவுடன் உங்கள் படம் பதிவேற சில வினாடிகள் எடுத்துக்கொள்ளும் . பதிவேற்றம் நிறைவடைந்த பின் மேலே காட்டப்பட்டுள்ளது போன்ற தேடும் இடத்தை அடைவிர்கள்
தற்போது தேடல் முடிவுகளை பாருங்கள் நீங்கள் பதிவேற்றிய படத்திற்கு இணையான படங்கள் உள்ள லிங்க் காண்பிக்க படும் இதன் மூலம் அந்த படத்தின் தகவலை நீங்கள் எளிதில் அறிந்து கொள்ளலாம் .... இதில் ஏதாவது சந்தேகமோ அல்லது கேள்வியோ இருப்பின் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் என்னால் இயன்றவரை பதிலளிக்கிறேன்........10/10/2013
இணையதள மையங்கள் மூலமாக வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய
சென்னை:
இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் வரும் அக்டோபர் 1ம் தேதி முதல்
இணையதள மையங்கள் மூலமாக வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய விரும்புவோர்
அதாவது பெயரை சேர்த்தல், திருத்துதல் மற்றும் தவறான பெயர்களை சரி செய்து
மாற்றுதல் ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்கும் முறை அமல்படுத்தப்படுகிறது.
இணையதளத்தை பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம்
செய்தல், மாற்றம் செய்தல் போன்றவற்றிற்கு விண்ணப்பிக்கும் முறை கடந்த
இரண்டு ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள போதும், போதிய விழிப்புணர்வு இல்லாத
காரணத்தால் இணைய தளத்தை பயன்படுத்துவதில் தமிழகம் பிற மாநிலங்களைக்
காட்டிலும் பின் தங்கிய நிலையிலேயே உள்ளது. இதனைக் களையும் வகையில் இணையதள
மையங்கள் மூலமாக வாக்காளர் பட்டியல் பணிக்கு இணையத்தை மக்கள் பயன்படுத்தும்
முறையை நடைமுறைப் படுத்த அரசு திட்டமிட்டது.
தமிழக வாக்காளர்கள் குறித்தும் தலைமை தேர்தல் அதிகாரி
பிரவீண் குமார் கூறியதாவது, ‘இந்தியாவில் கேரளா மாநிலத்தில் 75 சதவீத
பேரும், ஆந்திராவில் 40 சதவீத பேரும் இணையதளம் மூலம் வாக்காளர்
பட்டியலுக்கு விண்ணப்பித்துள்ளனர். தகவல் நுட்ப தொழிற்துறையில் முன்னணி
மாநிலங்களில் ஒன்றாக இருந்து வரும் தமிழகத்தில் இணையதளம் மூலமாக 7.8 சதவீத
பேர் மட்டுமே வாக்காளர் பட்டியலுக்கு விண்ணப்பித்துள்ளனர். இணையதளம் மூலம்
வாக்காளர் பட்டியலுக்கு விண்ணப்பிப்போரின் இல்லத்துக்கு தேர்தல் அலுவலர்கள்
வந்து பெயர், முகவரி உள்பட விவரங்களை சரிபார்ப்பார்கள். பணிகள் அனைத்தும்
முடிவடைந்தவுடன் 40 நாட்களுக்குள் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்'
எனத் தெரிவித்தார்.
இந்த இணைய தள மையங்கள் பெரிதும் உதவியாக
இருந்தாலும், கண்டிப்பாக ஒரு பெரிய தொகை வசூலிக்கப்படும், எனவே முடிந்தவரை
அனைவரும் அறிய பகிரவும்..
அறியாமையை போக்கிடுவோம்,
வாக்காளர் பட்டியலில் பதிவிடுவோம்,
கேடுகெட்ட அரசியல்வாதிகளை ஒழித்திடுவோம்..
இணையத்தில் விண்ணபிக்க, ஏதேனும் மாற்றம் செய்ய " http:// www.elections.tn.gov.in/ eregistration/ "
ஜிமெயிலில் டெலிட் செய்த Contacts-களை மீட்டெடுக்க
ஈமெயில் சேவையில் ஜிமெயில் தற்போது
முதன்மை நிறுவனமாக செயல்பட்டு வருகிறது, ஈ-மெயில் அனுப்பும் போதும் சரி
மற்றப்படி அனைத்துவிதமான முகவரி (Contact) -கள் அனைத்தையுமே நம்முடைய
ஈ-மெயிலில் தான் சேமித்து வைப்போம். குறிப்பாக இணைய நண்பர்களின் ஈ-மெயில்
முகவரிகள் அனைத்துமே ஈ-மெயிலில் தான் இருக்கும், ஒரு சிலரே தனியாக குறித்து
வைத்திருப்பார்கள். இந்த ஈ-மெயில் முகவரியை நாமே அறியாமலேயே டெலிட்
செய்திருப்போம். அல்லது வேறு செயல்பாட்டின் காரணத்தால் ஈ-மெயில்
முகவரிகள் டெலிட் செய்யப்பட்டிருக்கலாம். அவ்வாறு டெலிட் செய்யப்பட்ட
ஈ-மெயில் முகவரிகளை மீட்டெடுக்க முடியும்.
முதலில் உங்களுடைய ஈ-மெயில்
முகவரிக்குள் நுழைந்து கொள்ளவும், பின் Contacts என்பதை தேர்வு செய்து More
Actions என்னும் பட்டியை தேர்வு செய்து அதில் Restore Contacts என்பதை
தேர்வு செய்து எத்தனை நாள் என்பதை குறிப்பிட்டுவிட்டு, இழந்த Contact-களை
ரீஸ்டோர் செய்து கொள்ள முடியும்.


அதிகபட்சமாக
ஒருமாதத்திற்கு உள்ளாக டெலிட் செய்த முகவரிகளை மட்டுமே மீட்டெடுக்க
முடியும். அந்த குறிப்பிட்ட நாளில் உங்களுடைய ஈ-மெயில் முகவரியில் இருந்த
Contact-ள் மட்டுமே ரீஸ்டோர் செய்த பின்பு இருக்கும். மற்ற முகவரிகள்
இருக்காது, என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
MailBird - ஜிமெயில் மின்னஞ்சல் கிளையண்ட்
இணைய உலகில் இரகசியமாக தகவல்களை பரிமாறிக்கொள்ள பயன்படும் ஒரு வழி
மின்னஞ்சல் ஆகும். இந்த வகையில் மினனஞ்சல் சேவையினை பல்வேறு நிறுவனங்கள்
இலவசமாக வழங்கி வருகின்றன. அதில் முதன்மையானது கூகுள் நிறுவனத்தின்
மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் ஆகும். இந்த சேவையினை இன்று மின்னஞ்சல்
பயன்படுத்துபவர்களில் 70 சதவிகிதத்தினர் பயன்படுத்துவதாக ஆய்வுகள்
தெரிவிக்கிறன. இந்த மின்னஞ்சல் வசதியை நேரிடையாக உலாவில்யில் திறந்து
பயன்படுத்த முடியும். மேலும் கிளையண்ட்கள் பல உள்ளன அதில் முதன்மையானது
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அவுட்லுக் ஆகும். மேலும் பல இலவச அப்ளிகேஷன்கள்
உள்ளது அதில் ஒன்றுதான் MailBird ஆகும். இது ஜிமெயிலுக்கென
உருவாக்கப்பட்டது ஆகும்.
மென்பொருளை தரவிறக்க சுட்டி

சுட்டியில் குறிப்பிட்ட தளத்திலிருந்து மென்பொருளை பதிவிறக்கி கொள்ளவும்.
பின் இந்த MailBird அப்ளிகேஷனை கணினியில் நிறுவவும். கணினியில் நிறுவும்
போது இணைய இணைப்பு அவசியம் தேவை.

அப்ளிகேஷனை கணினியில் நிறுவிய பின் ஜிமெயிலின் பயனர் பெயர் மற்றும்
கடவுச்சொல்லை உள்ளிடவும். பின் புதியதாக மின்னஞ்சல் அனுப்புதல், ஏற்கனவே
வந்துள்ள மின்னஞ்சல்களை பார்வையிடுதல் போன்ற செயல்களை இலகுவாக செய்ய
முடியும்.
மறந்துபோன விண்டோஸ்-7 கடவுச்சொல்லை மாற்றியமைக்க
நான்கு நாட்களுக்கு முன்
வாசகர் ஒருவர் மறந்துபோன கடவுச்சொல்லை மாற்றியமைப்பு எவ்வாறு என கேட்டிருந்தார், இதோ அதற்கான பதில்.
பெரும்பாலான கணினி
பயன்பாட்டாளர்கள் தங்களுடைய கணினிக்கு கடவுச்சொல் கொண்டு பூட்டி வைத்திருப்பர். தீடிரென
கடவுச்சொல் தவறு என்று பிழைச்செய்தி வரும், நாம் எவ்வளவு தான் முட்டி மோதினாலும்
கணினியை திறக்க முடியாது. அதுபோன்ற சூழ்நிலையில் இதற்கு வழி என்னதான் என்று
பார்த்தால் கணினியை பற்றி அறியாதவர்கள் இயங்குதளத்தை நிறுவுதல் ஒன்றே வழி என்று
கூறுவார்கள். ஆனால் கணினியில் எந்தவித மாற்றமும் செய்யமல் கடவுச்சொல்லை
மாற்றியமைக்க எளிமையான வழி இருக்கிறது.

முதலில் நம்முடைய கணினியில்
என்ன இயங்குதளம் நிறுவியுள்ளோமோ அந்த இயங்குதளத்தை சீடி/டிவிடி யிலோ அல்லது
பெண்ட்ரைவிலோ
பூட் செய்து கொள்ளவும். பின்
பூட் செய்த சீடி/டிவிடி அல்லது பெண்ட்ரைவினை கணினியில் இட்டு, பயாஸ் சென்று First
Booting Device யை சீடி/டிவிடி அல்லது பெண்ட் இதில் ஒன்றில் ஏதாவது ஒன்றினை தேர்வு
செய்து பின் பயாஸினை சேமித்து பின் அதிலிருந்து பூட் செய்யவும். கணினி பூட்
ஆனவுடன் இயங்குதளத்தை நிறுவுவதற்கான தொடக்க விண்டோ தோன்றும் அதில் Repair your
computer என்பதை கிளிக் செய்யவும்.

உங்கள் கணினி உள்ள
இயங்குதளங்கள் பட்டியலிடப்படும். அதில் எந்த இயங்குதளத்தின் பயனர் கணக்கின்
கடவுச்சொல்லை மாற்ற வேண்டுமோ அதை தேர்வு செய்து Next என்ற பொத்தானை அழுத்தவும்.
இதில் நீங்கள் எந்த இயங்குதளத்தின் பயனர் கணக்கின் கடவுச்சொல்லை மாற்ற
நினைக்கிறீர்களோ அது எந்த கோலனில் நிறுவப்பட்டுள்ளது என்பதை குறித்து
வைத்துக்கொள்ளவும். இங்கு விண்டோஸ் 7 D: கோலனில் நிறுவப்பட்டுள்ளது.

அடுத்ததாக தோன்றும்
விண்டோவில் Command Prompt என்பதை கிளிக் செய்யவும்.

வரும் கட்டளை பலகையில்
கீழ்காணும் கட்டளைகளை உள்ளிடவும்.
copy
d:\windows\system32\sethc.exe d:\
மேலே குறிப்பிட்ட கட்டளையை
உள்ளிட்டு என்டர் கீயை அழுத்தியவும். 1 file(s) copied. என்ற செய்தி வரும்.
அடுத்து மீண்டும் மற்றொரு கட்டளையை உள்ளிடவும்.
copy
d:\windows\system32\cmd.exe d:\windows\system32\sethc.exe
கட்டளையை உள்ளிட்டு என்டர்
கீயை அழுத்தியவுடன் மீண்டும் அதன் மேலே பதியட்டுமா என்ற உங்களிடம் கணினி கேட்கும்.
நீங்கள் Yes என்று தட்டச்சு செய்து என்டர் கீயை அழுத்தவும். 1 file(s) copied.
என்ற செய்தி அடுத்த வரியில் தோன்றும்.

பின் கட்டளை பலகையினை
மூடிவிட்டு கணினியை மறுதொடக்கம் செய்யவும். பயனர்கணக்கு முகப்புபக்கம் தோன்றும்.
அப்போது Shift+Tab கீகளை ஒரு சேர ஐந்து முறை தொடர்ந்து அழுத்தவும். அப்போது ஒரு
கட்டளை பலகை தோன்றும். அதில் கீழ்காணும் கட்டளையை உள்ளிடவும்.
net user
TCINFO passwd

இதில் net user என்பது
இருப்பியல்பு கட்டளை ஆகும். TCINFO என்பது நீங்கள் மாற்ற இருக்கும் விண்டோஸ் பயனர்
கணக்கின் பெயர் ஆகும். Passwd என்பது நீங்கள் புதியதாக மாற்ற நினைக்கும்
கடவுச்சொல் ஆகும். அதை உங்கள் விருப்பபடி உள்ளிட்டுக்கொள்ளவும். அவ்வளவுதான் இனி
நீங்கள் புதிதாக மாற்றிய கடவுச்சொல்லே செயல்படும்.
10/04/2013
பென்டிரைவ் Speed
பென்டிரைவ் என்பது கணனி பயன்படுத்துவோர் மட்டுமல்லாமல், கிட்டத்தட்ட
அனைவருமே பயன்படுத்தும் ஒரு Removable Device ஆகும். இத்தகைய
பென்டிரைவ்கள்(pendrives) நாம் கணினியில் பயன்படுத்தும்போது சில வேளைகளில்
நம்முடைய பொறுமையைச் சோதிக்கும் அளவுக்கு மிகவும் மெதுவாக இயங்கும்.
அதிலுள்ள தரவுகளை பரிமாற்றம் செய்யும்போது நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும்.
இத்தகைய சூழ்நிலையைத் தவிர்ப்பது எப்படி?
உங்களுடைய பென்டிரைவ் வேகமாகச் செயல்பட என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.
1.உங்கள் கணினியில் பென்டிரைவை இணையுங்கள். (win+E)கொடுத்து MY COMPUTER செல்லவும்.
2.அங்கு பென்டிரைவிற்கான டிரைவை வலது கிளிக் செய்து Properties என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
3.தொடர்ந்து திறக்கும் விண்டோவில் HARDWARE என்னும் டேபை கிளிக் செய்யவும். பிறகு Name என்னும் தலைப்பின் கீழுள்ள உங்கள் பென்டிரைவைத்
தேரந்தெடுக்கவும்.
4.பிறகு கீழிருக்கும் Properties என்பதை கிளிக் செய்து Ok கொடுக்கவும்.
5.அடுத்து தோன்றும் விண்டோவில் change settings என்பதை கிளிக் செய்யவும்.
6.அதற்கு அடுத்துத் தோன்றும் பெட்டியில் Policies எனும் டேபிள் கிளிக் செய்து அதன் கீழிருக்கும் Better Performance என்பதைத் தேர்ந்தெடுத்து OK
கொடுக்கவும்.
இப்போது உங்கள் பென்டிரைவ் முன்பைக் காட்டிலும் வேகமாக இயங்கும். இதை நீங்கள் கண்கூடாக காண்பீர்கள். இந்த அனுபவம் எப்படி இருக்கிறது என்பதை கருத்துரையில் சொல்லுங்கள்.
மறக்காமல் ஒவ்வொரு முறையும் பென்டிரைவை கணினியிலிருந்து நீக்கும்போது Safely remove
hardware என்பதைக் கிளிக்செய்து பின்பு உங்கள் பென் டிரைவை கணினியிலிருந்து
நீக்கவும். இதை ஒரு தொடர் பழக்கமாக மாற்றிக்கொள்ளுங்கள். இதனால் உங்கள்
பென்டிரைவ் சேதமடையாமல் நீண்ட காலம் உழைக்கும்...!
உங்களுடைய பென்டிரைவ் வேகமாகச் செயல்பட என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.
1.உங்கள் கணினியில் பென்டிரைவை இணையுங்கள். (win+E)கொடுத்து MY COMPUTER செல்லவும்.
2.அங்கு பென்டிரைவிற்கான டிரைவை வலது கிளிக் செய்து Properties என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
3.தொடர்ந்து திறக்கும் விண்டோவில் HARDWARE என்னும் டேபை கிளிக் செய்யவும். பிறகு Name என்னும் தலைப்பின் கீழுள்ள உங்கள் பென்டிரைவைத்
தேரந்தெடுக்கவும்.
4.பிறகு கீழிருக்கும் Properties என்பதை கிளிக் செய்து Ok கொடுக்கவும்.
5.அடுத்து தோன்றும் விண்டோவில் change settings என்பதை கிளிக் செய்யவும்.
6.அதற்கு அடுத்துத் தோன்றும் பெட்டியில் Policies எனும் டேபிள் கிளிக் செய்து அதன் கீழிருக்கும் Better Performance என்பதைத் தேர்ந்தெடுத்து OK
கொடுக்கவும்.
இப்போது உங்கள் பென்டிரைவ் முன்பைக் காட்டிலும் வேகமாக இயங்கும். இதை நீங்கள் கண்கூடாக காண்பீர்கள். இந்த அனுபவம் எப்படி இருக்கிறது என்பதை கருத்துரையில் சொல்லுங்கள்.
மறக்காமல் ஒவ்வொரு முறையும் பென்டிரைவை கணினியிலிருந்து நீக்கும்போது Safely remove
hardware என்பதைக் கிளிக்செய்து பின்பு உங்கள் பென் டிரைவை கணினியிலிருந்து
நீக்கவும். இதை ஒரு தொடர் பழக்கமாக மாற்றிக்கொள்ளுங்கள். இதனால் உங்கள்
பென்டிரைவ் சேதமடையாமல் நீண்ட காலம் உழைக்கும்...!
பொறியியல் மாணவர்களுக்கான சிறந்த FOSS மென்பொருள்கள் :
வரும் காலங்களில் FOSS மென்பொருளின் பங்களிப்பு பொறியியல் துறையில் அதிகமாக காணப்படும். இந்த மென்பொருட்களின் குறைந்த கொள்ளடக்கம், சீரிய பணியாற்றல் மற்றும் வேகம் ஆகியவை இவற்றை பொறியியல் துறையில் ஒரு நிரந்திர இடத்தை பிடிக்க வைக்கும்.
தற்போது, ஏறக்குறைய அணைத்து இயந்திரப் பொறியாளர்களும் “MATLAB ” போன்ற உரிமைபெற்றுள்ள மென்பொருட்களையே பயன்படுத்தி வருகின்றனர். அந்த மென்பொருள் சுமார் 3GB அளவு கொண்டது. மேலும் அதனை பயன்படுத்த நீங்கள் Rs . 4000 வரை செலவு செய்ய நேரிடலாம். ஆனால் அதே காரியங்களை செய்யகூடிய பல FOSS மென்பொருட்கள் இருப்பது நம்முள் பலருக்கு தெரியாது.
இதோ, பொறியியல் மாணவர்களுக்கு உதவும் சில FOSS மென்பொருட்களை பற்றிய சிறு குறிப்புகள்.
1 . GNU Octave : நீங்கள் MATLAB இல் தொடங்கிய ஆவணங்களையும் இந்த GNU Octave இல் காண முடியும். MATLAB இல் உள்ள அணைத்து வசதிகளும் இந்த மென்பொருளில் உள்ளது. MATLAB போலவே வரைபடங்களை இந்த மென்பொருளில் முப்பரிமாணத்தில் காணலாம். இந்த மென்பொருள் MATLAB ஐ காட்டிலும் சுமார் மூன்று மடங்கு கம்மியான இடத்தை தான் அடைக்கும் (500 MB மட்டுமே).
இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்ய இங்கே செல்லவும் -
GNU octave இன் முப்பரிமான output
2 . OpenSCAD : இன்றைய தினத்தில் CAD பயன்படுத்தாத
பொறியியல் மாணவர்களை பார்ப்பது அரிது. இயந்திர பொறியாளர்கள் மட்டுமின்றி
மின்னியல் மற்றும் தொலைதொடர்பு பொறியாளர்களுக்கும் CAD ஒரு இன்றியமையாத மென்பொருளாக மாறி விட்டது.
OpenSCAD என்பது CAD வடிவமைப்பை துல்லியமாக, முப்பரிமாணத்தில் செய்ய கூடிய ஒரு மென்பொருள். நீங்கள் அளிக்கும் திட்ட செயலாக்கத்தை (script codes ) ஐ வைத்து OpenSCAD உங்களுக்கு முப்பரிமான வடிவமைப்பை தரும். இது Windows , Linux மற்றும் Mac ஆகிய அணைத்து இயக்கு தளங்களிலும் செயல்படும்.
இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்ய இங்கே செல்லவும் – http://www.openscad.org/
OpenSCAD இன் இயந்திர வடிவமைப்பு
3 . Genius Maths Tool - கடினமான, நெடிய கணக்குகளை தீர்க்க நம்முடிய scientific calculator களே தடுமாறும். அந்த நேரத்தில் நமக்கு உதவியாக இருப்பது தான் இந்த Genius Maths Tool . இது “உபுண்டு (ubuntu )” இயக்கு தளத்தின் “software center ” இல் கிடைக்கும்.
கடினமான integration , differentiation மட்டுமின்றி முப்பரிமான படங்கள் மற்றும் statistics ஆகியவற்றை இயக்கம் திறமை கூட இந்த மென்பொருளுக்கு உண்டு.
உங்கள் கணினித் திரையை ஒலியுடன் பதிவு செய்ய
Eidete – திரையினைப் படம் பிடிக்கும் ஒரு எளிமையான மென்பொருள்.
உபுண்டுவில் கணினியினுடைய திரையினை படம் பிடிக்க Desktop
Recorder, Istanbul Desktop Session Recorder போன்ற Application -கள்
இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே.
அது போல Eidete -ம் ஒரு திரையினை படம்பிடிக்கும் மென்பொருள். இதன் தற்போதைய அம்சங்கள்:
-
webm கோப்பு வடிவத்திற்கு சேமித்துக்கொள்ளலாம்
-
திரையில் ஒரு குறிப்பிட்ட பகுதியினை தேர்வு செய்து அந்தப் பகுதியினை மட்டும் பதிவு செய்தல்
-
அழுத்தப்பட்ட பொத்தானைக் காண்பித்தல், மற்றும் பதிவு செய்தல்
-
ஒலியோடு பதிவு செய்தல் அதாவது திரையோடு சேர்த்து ஒலியினையும் பதிவு செய்யும் வசதி.
- உபுண்டு 11.10/12.04 -ல் Eidete னை நிறுவுவது எப்படி:
கீழ்காணும் கட்டளைகளை முனையத்தில் கொடுக்கவும் (கணினி இணைய இணைப்பில் இருக்க வேண்டியது அவசியம்)
sudo add-apt-repository ppa:shnatsel/eidete-daily
sudo apt-get update
sudo apt-get install eidete
பார்ட்டிசியன் உருவாக்குதலும் கோப்பு முறைமையும் -2
பார்ட்டிசியன் பிரித்தல்:
ஒரு வன்வட்டினை பார்ட்டிசியன் பிரிப்பதற்கு பல்வேறு
வகையான கருவிகள் உள்ளன. உதாரணமாக fdisk, Gparted, போன்றவைகள். விண்டோஸ்
எக்ஸ்.பி இயங்குதள வட்டினைக் கூட வைத்து பிரிக்கலாம் ஆனால் நாம் இங்கு
அதைப் பற்றி பார்க்கப் போவதில்லை. fdisk மற்றும் Gparted இரண்டினைப்
பற்றியும் பார்ப்போம்.
fdisk Tool: (லினக்ஸிற்கு புதிய பயனாளர்கள் யாரும் இதை செய்து பார்க்க வேண்டாம். தகவல் இழப்பிற்கு நிறைய வாய்ப்பிருக்கு.)
இது ஒரு Command Line Tool ஆகும். பெரும்பாலும் அனைத்து
லினக்ஸ் வழங்கல்களுடனும் நிறுவப்பட்டே வருகின்றது. நாம் தனியாக நிறுவ
வேண்டிய அவசியமில்லை. fdisk கட்டளையினை இயக்குவதற்கு root அனுமதி வேண்டும்.
root (or) superuser அனுமதியில்லாமல் fdisk கட்டளையினை இயக்க முடியாது.
உபுண்டு இயங்குதளத்தை அடிப்படியாக கொண்டு பயன்படுத்துபவர்கள் sudo வை
பயன்படுத்திக் கொள்ளலாம்.
fdisk பயன்படுத்துதல்:
fdisk கட்டளையினைப் பயன்படுத்தி நாம்
வன்வட்டில் பார்ட்டிசியன்களை உருவாக்கலாம், நீக்கலாம் மற்றும் மாற்றம்
செய்யலாம். முனையத்தை(Terminall) திறந்து,
sudo fdisk /dev/sda
எனக் கொடுத்து Enter Key -னை அழுத்தவும்.
பார்க்க படம் -1
படம் – 1
fdisk கட்டளையானது ஒரு எழுத்தை மட்டும்
பயனாளரிடமிருந்து பெற்றுக்கொள்கிறது. என்னென்ன கட்டளைகள் உள்ளன என்பதை
தெரிந்து கொள்ள m -ஐ அழுத்தி Enter Key -யினை அழுத்தவும்.
பார்க்க படம் – 2
-
வன்வட்டில் ஏற்கனவே என்னென்ன பார்ட்டிசியன்கள் உள்ளது என பார்ப்பதற்கு p -யினை அழுத்தி Enter Key அழுத்தவும். பார்க்க படம் -3
படம் – 3
-
fdisk Command -னை விட்டு வெளியேற q-ஐ அழுத்தவும்.
-
வன்வட்டில் பார்ட்டிசியன்கள் மீது செய்து மாற்றங்களை சேமிக்க w – ஐ அழுத்தவும்.
புதிய பார்ட்டிசியன்களை உருவாக்குதல்:-
புதிய பார்ட்டிசியன்களை உருவாக்க n -ஐ அழுத்தவும்.
Primary, Extended or Logical இவைகளில் எவற்றை உருவாக்கப் போகிறமோ அதை தேர்வு செய்யவும்.
→ புதிய பார்ட்டிசியன் எங்கிருந்து தொடங்க வேண்டும் முடிய வேண்டும் என்பதைக் கேட்கும். தேவையான அளவினை உள்ளிடவும்.
→ Default ஆக மீதமிருக்கும் இடங்களை அப்படியே Assign செய்து வைத்திருக்கும்.
→ உதாரணமாக 80 GB Hard Disk -ல் ஒரு புதிய
பார்ட்டிசியன் உருவாக்குகிறமென்றால் 80 GB னை அப்படியே காட்டும். நாம்தான்
தேவையான அளவினை கொடுத்துக் கொள்ள வேண்டும்.
→ புதிய பார்ட்டிசியன்கள் அளவினை நாம் MB கணக்கிலும் கொடுக்க முடியும்.
புதிய பார்ட்டிசியனை உருவாகிய பிறகு, மாற்றங்களை சேமிக்க w – அழுத்தி Enter Key -னை அழுத்தவும்.
Gparted: (அனைத்துப் பயனாளர்களும் இதைப் பயன்படுத்தலாம், மிகவும் எளிமையானது)
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
.jpg)
.jpg)
.jpg)