என்னுடைய ஆங்கில வலைப்பக்கத்திற்கு செல்ல இங்கே அழுத்தவும் இப்படிக்கு உங்கள் தோழன் ஷாஜஹான் சார்லஸ்

9/09/2013

அண்ராய்டு PDF Creator

எந்த ஒரு கோப்பையும் பிடிஎப் மாற்ற நிறைய மென்பொருட்களை நான் தந்திருக்கிறேன்.  இப்பொழுது அறிமுகப்படுத்த போகின்ற மென்பொருள் விண்டோஸ், மேக், மற்றும் ஆன்ட்ராய்டு மொபைல்,  ஐஓஎஸ் மொபைல் போன்ற சாதனங்களிலும் வேலை செய்யும் ஒரு பிடிஎப் மாற்றி மென்பொருள் ஆகும். 




இந்த பிடிஎப் மாற்றி மென்பொருளின் பெயர் Sonic PDF Creator Mobile இந்த மென்பொருளை தரவிறக்க கீழே செல்லுங்கள். இந்த மென்பொருள் ஒரு ஒபன் சோர்ஸ் மென்பொருள் என்பதே இதன் தனிச்சிறப்பாகும். இந்த மென்பொருளின் விண்டோஸ் பதிப்பினை தரவிறக்க சுட்டி  விண்டோஸ் மென்பொருள் ஒரு ட்ரையல் வெர்சன் மட்டுமே!

ஆன்ட்ராய்டு மொபைல் மற்று டேப்லட்டுகளுக்கான சுட்டி

 ஐபோன்களுக்கான மென்பொருள் தரவிறக்க சுட்டி

8/29/2013

அன்ராய்டு போன்களை ​​ஜெல்லிபீன் க்கு மாற்றும் வழிமு​றை

இன்​றைக்கு அ​னைவரது ​கையிலும் ஸ்மார்ட் ​போன்கள் வலம் வருகின்றன. அ​​வை வாங்கி சில காலம் ஆன பின்னர் அவற்றுக்கான பதிய ​மென் ​பொருள் பதிப்புகள் வருவதால் அ​வை ப​ழைய​வை ​போல ​தோற்றம் அளிக்கிறது. 
​அன்​ராய்டூ பதிப்புக​ளை பயன்படுத்தும் ​செல்​பேசிகளுக்கு அவ்வப்​போது புதிய பதிப்புக​ளை பதிப்பித்து வருகிறது. கணிணி​யை ​​பொருத்தவ​ரை புதிய இயங்குதளம் வந்தால் அவற்​றை நாமாக​வே நிருவிக் ​​கொள்ளலாம் .  ஆனால் இந்த ​செல்​பேசிகள் சற்று சிக்கலான மு​றையில் தான் அவற்​றை அப்​டேட் ​செய்யப்படும். அ​வைகள் ROM - களில் இயங்குதளங்க​ளை பதிந்து ​ ​​கொண்டு இயங்குகின்றன.  இந்த வ​​கையான ​செல்​பேசிக​ளையும்சில மு​றைக​ளை பயன்படுத்தி நாம் அவற்றின் இயங்குதளத்​தை புதுப்பிக்கலாம். 
இங்​கே MICROMAX A110 CANVAS 2 க்கு அப்​டேட் ​செய்வது பற்றி  விளக்கப்பட்டுள்ளது. ​வேறு வ​கையான மாடல்கள் அப்​டேட் விவரங்கள் ​வேண்டும் என்றால் பின்னூட்டத்தில் ​தெரிவிக்கவும். ​​கை​பேசி நிறுவனம் மற்றும் வ​கை எண்​ணை மறக்காமல் குறிப்பிடவும்.
ஸ்மார்ட் ​போன் க​ளை ​பொறுத்தவ​ரை MICROMAX முன்னனியில் இருக்கும் நிறுவனம் ஆகும். அவர்களு​டைய பதிப்பான MICROMAX A110 CANVAS 2 ​போன் ICE-CREAM SAN-WITCH பதிப்பை ​பெற்றது ஆகும் இந்த ஸ்மார்ட் ​போனின் ​மென்​பொரு​ளை அப்​டேட் ​செய்வது பற்றி ​தெளிவாக அறிந்து ​கொள்ளலாம் . 
இந்த  MICROMAX A110 CANVAS 2 ​​​செல்​பேசியானது MTK6577 ​மைக்​ரோசிப் ​பொருத்தப்பட்டு உள்ளது.  இது ​​ஜெல்லிபீன் பதிப்பிற்கு ​தே​வையான வசதிக​ளை அளிப்பதாக உள்ளதால் எளி​மையாக அப்​டேட் ​செய்யலாம் . இதற்காக 
 சர்வீஸ் ​சென்டர்க​ளை நாட​வேண்டியது இல்​லை. ​அன்ராய்டு இயங்குதளத்​தை பதிவிறக்கம் ​செய்ய அகன்றவரி​​சை இ​ணைப்​பை பயன்படுத்துதல் நலம். அ​வை ​பெரிய அளவிலான ​​கோப்பாக உள்ளது. 
கீழ்கண்ட  ​பைல்க​ளை பதிவிறக்கம் ​செய்ய ​வேண்டும்
​மேற்கண்ட ​பைல்க​​ளை பதிவிறக்கம் ​செய்து அவற்​றை தனியாக ஒரு இடத்தில் ​​வைத்துக்​கொள்ளவும். 
1. முதலில் MICROMAX DRIVER ​ ஐ கணிப்​பொறியில் நிறுவிக் ​கொள்ளவும் . 
2.. பின்னர் SP tool ல் காணப்படும் Flash_Tool.exe ஐ கிளிக் ​செய்து ஓப்பன் ​செய்யவும். 
3. இந்த ​​மென்​பொருள் இயங்க ​தொடங்கியவுடன் scatter-loading கிளிக் ​​செய்து ஓப்பன் ​செய்யவும். 
4.    MICROMAX A110 CANVAS 2 க்கு உண்டான இயங்குதள ​ஜிப் ஐ ​வெளி தள்ளி அவற்றில் உள்ள MT6577_android_scatter_emmc என்ற ​டெக்ஸ்ட் ​பை​லை  ​​தெரிவிக்கவும். அவ்வாறு ​தெரிவித்தவுடன் இயங்குதள ​பைல்கள் தானாக​வே ​​தேர்வாகின்றன. 
5. பிறகு Flash_tool ல் உள்ள frimware->upgrade  ஐகிளிக் ​​செய்யவும் 
அவ்வாறு ​செய்த பின்னர் இயங்குதளம் ​போனில் பதிய ​தொடங்கும் . நீல நிற ப்ராகரஸ் பட்​டை ​​கொண்டு அறிந்து ​​கொள்ளலாம். அ​வை சரியாக முடிந்தவுடன் கணிணி தி​ரையில் பச்​சைநிற வண்ணம் ​கொண்ட வட்டம் காணப்படும். பச்​சை நிற வட்டம் ​தென்பட்ட பிறகு தான் ​போ​னை கணிணியில் இருந்து நீக்க ​வேண்டும். தவறு ​நேர்ந்தால் ​​போன் ஆன் ஆகாது. 


சரியாக ​செய்து முடிக்கும் பட்சத்தில் சிறப்பான ​ஜெல்லிபீன் ​போன் ​பெறலாம். 

உங்களு​டைய ​சொந்த முயற்சியில் முயற்சிக்கவும். ​செல்​பேசி பழுதுபட வாய்ப்பு உள்ளது.

கம்ப்யூட்டர் வேகமாக இயங்க msconfig

 

யதேச்சையாக நேற்று பழைய பாட புத்தகத்தை திரும்ப பார்த்துக் கொண்டு இருந்தேன் அதில் இருந்த msconfig விஷயம் ஆச்சர்யப்பட வைத்தது. நம் கம்ப்யூட்டரில் தேவை இல்லாமல் ஸ்டார்ட் ஆகும் ப்ரோக்ராம்களை நிறுத்த இது உதவுகிறது. வாருங்கள் என்ன விஷயம் என்று பார்க்கலாம்.
எதற்கு இந்த msconfig?
உங்கள் கணினியில் நிறைய சாஃப்ட்வேர்கள் நீங்கள் இன்ஸ்டால் செய்து இருப்பீர்கள். அவற்றில் சில கம்ப்யூட்டர் ON ஆன உடன் உங்கள் விண்டோவில் வந்து நிற்கும். சில உங்களுக்கு தெரியமாலயே ஸ்டார்ட் ஆகி இருக்கும். ஒவ்வொரு முறையும் இவற்றை நாம் close செய்வதற்க்கு பதிலாக அவை automatic ஆக ஸ்டார்ட் ஆவதை நிறுத்தி தேவையான போது மட்டும் எடுத்து பயன்படுத்த இது உதவும்.
இதனால் கம்ப்யூட்டர் ஸ்பீட் ஆனது அதிகரிக்கும். RAM ஆனது இடைஞ்சல் எதுவும் இன்றி வேலை செய்யும்.
இது XP, Vista, Windows 7  வேறு விதமாக உள்ளதால் மூன்றையும் தருகிறேன்.
XP பயனர்களுக்கு
இதில் Run–> msconfig
இப்போது கீழே உள்ள விண்டோ வரும். அதில் Start Up என்பதை தெரிவு செய்யவும்

இதில் உங்கள் கம்ப்யூட்டர் ON ஆனவுடன் என்ன ப்ரோக்ராம்கள் ஸ்டார்ட் ஆகின்றன என்பது கொடுக்கப்பட்டு இருக்கும். இதில் உங்களுக்கு அடிக்கடி தேவை இல்லாத ப்ரோக்ராம் இருந்தால் அதனை Uncheck செய்து இப்போது OK கொடுத்து விடவும்.
இப்போது restart செய்ய சொல்லி வரும். செய்து விட்டு பாருங்கள் அவை இப்போது Automatic ஆக ஸ்டார்ட் ஆகாது.
Vista பயனர்களுக்கு
இது இப்போது கைவசம் இல்லாத காரணத்தால் run இல் கொடுத்து முயற்சி செய்யவும். அல்லது start menu வில் search செய்யும் இடத்தில் முழுவதுமாக msconfig என டைப் செய்தால் இந்த விண்டோ கிடைக்கும். அதற்கு பின் செய்முறையில் Windows 7 க்கும் இதற்கும் ஏதேனும் வித்தியாசம் இருப்பின் கீழே comment இல் சொல்லவும்.
Windows 7 பயனர்களுக்கு
இதிலும் Run–> msconfig
இதில் வரும் புதிய விண்டோவில் Start up என்பது கடைசிக்கு முந்தையதாகவே இருப்பதை கவனிக்கவும். இனி மேலே XP க்கு உள்ளது போல அடிக்கடி பயன்படுத்தாத ப்ரோக்ராம்களை Uncheck செய்து விடவும். பின்னர் OK கொடுத்து விட்டு ரீஸ்டார்ட் செய்யவும்.
எந்த அளவுக்கு நீங்கள் Uncheck செய்கிறீர்களோ அது உங்கள் கம்ப்யூட்டரின் RAM வேகத்தை அதிகமாக்கும். முயற்சி செய்து விட்டு சொல்லுங்கள்.

பேட்டரி நிற்காத அன்ராய்டு போன்களை என்ன செய்யலாம்?

     அன்ராய்டு போன்களை பொறுத்தவரை அவற்றுக்கு பேட்டரி நீடித்து நிற்பது தான் தலையாய பிரச்சனை ஆகிறது. காலை பேட்டரி முழுவதும் நிரப்பிக்கொண்டு சென்றால் மாலைக்குள் தீர்ந்து நின்று விடுகிறது. அதற்கு பிறகு வீட்டிற்கு வரும் வரை தொல்லைதான் சாதாரண எம்டிகே 6217, 6215 போன்கள் கூட 3 நாளைக்கு பேட்டரி தாங்கும் போது 10000 மதிப்புள்ள ஜெல்லிபீன் போன்கள்  சார்ஜ் நிற்காமல் போவதற்கான காரணத்தை ஆராய்ந்த போது எளிமையான சில விஷயங்களே இவ்வாறு பேட்டரியை காலி செய்கின்றன. அவற்றை விரிவாக காணலாம்


1. முதலில் பேட்டரி பயன்படுத்தும் மென் பொருட்களை கண்டறிந்து அவற்றை நிறுத்தி வைக்கும் மென் பொருட்களை
அன்ராய்டில் நிறுவ வேண்டும். எடுத்துக்காட்டாக Battery Booster மென் பொருளை நிறுவலாம்.இவ்வகை மென்பொருட்கள் பேட்டரி குறைக்கும் அப்ளிகேசன்களை அவற்றை பயன்படுத்தாத போது நிறுத்தி வைக்கும். வைபை, புளூடுத் ஆகிய அப்ளிகேசன்களை அவற்றை பயன்படுத்தாத போது நிறுத்தி வைக்கிறது. 

2. மார்கெட்டில் அப்ளிகேசன்களை பதிவிறக்கம் செய்யும் போது அவற்றுக்கு கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை முழுமையாக படித்து அதனுடைய மெமரி கொள்ளளவு, பேட்டரி பயன்படுத்தும் விதம் ஆகியவற்றினை அறிந்து கொள்ள வேண்டும். 

 3. பேட்டரி பயன்பாட்டியல் அப்ளிகேசனை கொண்டு எந்த அப்ளிகேசன் எவ்வளவு பேட்டரி சாப்பிட்டு இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளவும், தேவையற்ற அப்ளிகேசன்களை நிறுத்தி வைக்கவும் இவ்வகையான பயன்பாட்டியல் மென்பொருள் அன்ராய்டிலேயே இணைக்கப்பட்டுள்ளது.



4. பேட்டரியை அதிகம் உறிஞ்சும் அதிகம் பயன்படுத்தாத அப்ளிகேசன்களை டிசேபிள் செய்து கொள்ளலாம். இதன் வாயிலாக எளிமையாக அன்ராய்டு போன்களின் பேட்டரியை நீண்ட நேரம் நீடித்து வைக்க முயற்சிக்கலாம். பதிவு பயனுள்ளதாக இருப்பின் பின்னுாட்டம் இடவும்.

அன்ராய்டு பயனீட்டார்கள் கவனிக்க! போன் கால்களை பதிவு செய்யும் டார்சன் மென்பொருள்



எல்லா வ​கையான ​மொ​பைல் ஆப்​ரேடிங் சிஸ்டம்க​ளையும் தற்​போது ​வைரஸ்கள், மால்​வேர்கள், டார்சன்கள் ஆகியன தாக்குகின்றன. அன்ராய்டும் தற்​போது அதற்கு விதிவிலக்கு அல்ல. அன்ராய்டு போன்களை தாக்கும் புதிய வ​கையான APP / BOT தற்​போது பரவி வருகின்றது. இந்த வ​கையான அப்ளி​கேசன்கள் ​பெரும்பாலும் UNKNOWN APK மூலம் பரவி வருகின்றன.இந்த வ​கை அப்ளி​கேசன்கள் ​CALL க​ளை ​ரெக்கார்ட் ​​செய்து ரி​மோட் சர்வர்க்கு அனுப்பப்படுகின்றன. இந்த வ​கை டார்சன் ​மென்​​பொருட்கள் இருப்ப​தை CA Technologies கண்டறிந்து  உள்ளது. அடுத்த மு​றை APK ​பைல்  க​ளை நிறுவும் ​போது அவற்றுக்கான பர்மிஷன்கள் என்​னென்ன என்ப​தை படித்து பார்த்த பின்னர் நிறுவவும்.


சிறிய பதிவு ஆயினும் மதிப்பு ​பெற்றது.

அன்ராய்டு ​வைரஸ் எதர்ப்பு ​​மென்​பொருள் - Android Free Virus

அன்ராய்டு ​வைரஸ் எதர்ப்பு ​​மென்​பொருள் - Android Free Virus

Smart Phone களின் ஆதிக்கமும்,  ​தொழில்நுட்பத்தின் வளர்ச்சியும் இன்​றைய சூழ்நி​லையில் அதிகமாக காணப்படுகிறது. நன்​மைகள் அதிகரித்து  காணப்படும் அ​​தே ​வே​ளையில் தான் ​தொழில் நுட்பத்​தை பயன்படுத்தும் தீய மு​றைகளும் வளர்ந்து ​கொண்​​டே வருகின்றன.  முன்​பெல்லாம் கணிப்​பொறி​யை  குறி​வைத்து warm களும் ​Virus களும் உருவாக்கப்பட்டன. ஏறக்கு​றைய 60 சதவீததினர் (​பெரும்பாலும் என்ப​தே சரியானது) இன்​றைக்கு கணிப்​பொறி ​வைரஸ்கள் எதிர்த்து கணிணி​​யை பயன்படுத்தும் அறிவி​​னை ​பெற்றுவிட்டன​ர். அடிப்ப​டையாக கணிணியில் ​வைரஸ் எதிர்ப்பு ​மென்​பொருள் பதியப்பட்டு இருக்க ​வேண்டும் என்பது அ​னைவருக்கும் ​​தெரிந்த ஒன்றாக ஆகிவிட்டது. 


இத்​த​கைய சூழலில் ​வைரஸ் நிரலர்கள் Smart phone க​ளை​யே குறி​வைக்க ​தொடங்கி உளளன​ர்.​பெரும்பாலும் இன்​றைக்கு ​​செல்​பேசியி​லே​யே தான் அதிகமான இ​ணைய பயன்பாட்​டை பயன்படுத்துகி​றோம். Android உள் புகுந்தபின் இன்​றைக்கு இது அதிகமாக ஆகி வருகிறது. கணிணியின் கீலாகர் ​​ ​மென் ​பொரு​ளை ​வைத்து கீ​பேர்டில் ​அடிக்கும் கடவு​​​சொல்​லை திருடுவது ​பொன்று அன்ராய்டிலும் Key logger ​​வைரஸ்கள் பரவுவதாக ​​கேள்விபட்ட​போது ​கொஞ்சம் புளி​​யை க​ரைத்தது. 

Android Linux கர்னர் (karnal) என்பதால் ​வைரஸ் தாக்கம் கு​றைவாக இருக்கும் . ஆனால் எத்தனுக்கு எத்தன் உலகில் உண்டல்லவா? எந்த ​​​செக்யூரிட்டி ​மென்​பொருள் அன்ராய்டுக்கு சரியாக வரும் என ஆராய்ச்சி ​செய்த​போது கி​டைத்த முடிவுகள். மற்றவர்களும் பயன் ​பெறட்டும் என பார்​வைக்கு ​வைக்கப்படுகிறது.  அன்ராய்டு மட்டுமல்லாமல் மற்ற ஸ்மார் ​போன்களுக்கும் சிறப்பான ​மென்​பெருட்கள் ​வைக்கப்படுகின்றன. 
(எனக்கு சிறப்பாக ​தோன்றிய ​பொருட்கள்,  உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு பயன்படுத்தவும்)
டி​ரையல் ​மென்​பொருட்கள் 
1. ESET Mobile Security

2. Kaspersky Mobile Security 9

3. McAfee Mobile Security

4. Norton Smartphone Security

5. Bitdefender Mobile Security (Android Only)

6. Trend Micro Mobile Security 7.0

7. F-Secure Mobile Security

8. BullGuard Mobile Security 10

9. AhnLab V3 Mobile 2.0

10. Dr.Web Mobile Security Suite
இலவச ​மென்​பொருட்கள் 
 1. AVG Mobilation

2. NetQin Mobile Security

3. Lookout Mobile Security

4. SmrtGuard Mobile Security (BlackBerry Only)

கட்டாயம் வைத்திருக்க வேண்டிய ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷன்கள்

இங்கே சொல்லி உள்ள அனைத்து அப்ளிகேஷன்களும் இலவசமானவை. 

1. Barcode Scanner 
பார்கோட் என்பது நாம் கேள்வி பட்டு இருப்போம். iPhone & Android வந்த பிறகு பிரபலம் ஆன ஒன்று QR Code. இதன் பலன்கள் பல உண்டு.இது பற்றி ஒரு பதிவே எழுதலாம்.  இப்போதைக்கு நான் சொல்லும் பலன், இதை வைத்து இருந்தால் நீங்கள் மற்ற அப்ளிகேஷன்களை Android Market சென்று தேடாமல், இதை பயன்படுத்தி குறிப்பிட்ட அப்ளிகேஷன் ஒன்றின் QR Code தனை Scan செய்தால் நேரடியாக அப்ளிகேஷன் பக்கத்துக்கு செல்லலாம்.  இந்த அப்ளிகேஷன் மூலம் இரண்டு வகையான கோட்களையும் Scan செய்யலாம். 
ஒரு sample கோட் கீழே உள்ளது. 
2. Android Lost 
ஆன்ட்ராய்ட் போன்களின் விலை கிட்டதட்ட 8000(நல்ல மாடல் ) ரூபாயில் இருந்து ஆரம்பிக்கிறது. அப்படி பட்ட ஃபோன் தொலைந்து போனால்? அப்படி போனால் எளிதாக கண்டுபிடிக்கவே இந்த அப்ளிகேஷன். இதை இன்ஸ்டால் செய்து விட்டு, அவர்கள் தளத்தில் நமது தகவல்களை ரிஜிஸ்டர் செய்து விட்டால் போதும்.
அந்தத் தளத்தில் கேட்கப்படும் SMS notification number என்ற எண்ணுக்கு உங்கள் என்னை தராமல், மொபைல் தொலைந்து போனால் அதற்கு SMS வரும்படியாக உங்கள் நண்பர், வீட்டில் உள்ளோரின் எண் தரலாம். 
அல்லது இந்த கோடை Bar Code Scanner மூலம் Scan செய்யவும். 
3.APP 2 SD FREE
சில சமயங்களில் ஃபோன் மெமரி குறைவாக உள்ள Android மொபைல் வாங்கும் போது நிறைய அப்ளிகேஷன்களை உங்களால் இயக்க முடியாது. அதை தவிர்க்க, சில அப்ளிகேஷன்களை மெமரி கார்டுக்கு மாற்ற வேண்டும். அதற்கு இது உதவுகிறது.
இதை தரவிறக்கம் செய்ய. இங்கே கிளிக் செய்யவும்
அல்லது இந்த கோடை Bar Code Scanner மூலம் Scan செய்யவும். 
4. App Backup & Restore
நீங்கள் உங்கள் போனில் பயன்படுத்தும் Android அப்ளிகேஷன்களை Backup எடுத்து வைக்க இது பயன்படுகிறது.
அல்லது இந்த கோடை Bar Code Scanner மூலம் Scan செய்யவும்.
5. Android System Cleaner
Android போனும் உங்கள் கணினி போலவே, தேவை இல்லாத அப்ளிகேஷன்கள் ரன் ஆகிக் கொண்டு இருந்தாலோ அல்லது, நாம் எதையும் குளோஸ் செய்யா விட்டாலோ மெதுவாக இயங்கும். இதை தவிர்த்து தேவை இல்லாமல் இயங்கும் வசதிகளை நிறுத்த இது பயன்படுகிறது.
அல்லது இந்த கோடை Bar Code Scanner மூலம் Scan செய்யவும்.
6. Opera Mini Browser
எத்தனையோ உலவிகள் இருந்தாலும் opera வுக்கு இன்னும் மவுசு போகவில்லை. சிற்சில குறைபாடுகள் இருந்தாலும். Android மூலம் இணையத்தை பயன்படுத்த சிறந்த உலவி இதுதான்.
அல்லது இந்த கோடை Bar Code Scanner மூலம் Scan செய்யவும்.
மற்றபடி இணையத்தில் தான் நீங்கள் விழிப்பவர் என்றால் உங்களுக்காகவே 1. Facebook
2. Twitter
3. Blogger
போன்றவையும் இலவசமாகவே கிடைக்கிறது. மேலும் பல வசதிகளை வரும் பதிவுகளில் அறிமுகம் செய்கிறேன்.

Android Rooting பற்றி



Android Rooting பற்றி பதில் தளத்தில் நண்பர் ஒருவர் வினா எழுப்பி இருந்தார். ஏற்கனவே அது குறித்து பதிவு எழுத நினைத்து இருந்தாலும் அதன் பாதுகாப்பு காரணங்கள் கருதி எழுதவில்லை. நிறைய பேருக்கு அது குறித்த கேள்விகள் இருப்பதால் அது பற்றிய நிறை, குறைகளை சொல்லி விட்டு எப்படி Root செய்வது என்று சொல்கிறேன். அதன் பிறகு உங்கள் விருப்பம் :-)
Android Rooting என்றால் என்ன?
Android Rooting என்பது உங்கள் போனுக்கு நீங்கள் Super User Access பெறுவதற்கு உதவுகிறது. இதன் மூலம் நீங்கள் இதுவரை உங்கள் போன் மூலம் என்ன செய்ய முடியாது என்று நினைத்தீர்களோ அவை அனைத்தையும் செய்யலாம். custom software (ROM’s) வசதி, Custom Themes, வேகமான செயல்பாடு, அதிகரிக்கும் Battery Life, OS Upgrade மற்றும் பல. 
எளிதாக சொல்ல வேண்டும் என்றால் உங்கள் போனை நீங்கள் ஹாக் செய்து விட்டீர்கள் என்று அர்த்தம். 
பலன்கள்: 
Custom Software (ROM’s):
ROM (Read Only Memory) ஆனது Android போனை இயக்க உதவுகிறது. போனில் Default ஆக இருக்கும் ROM -ஐ மாற்றும் வசதி சாதரணமாக கிடைக்காது. Root செய்வதன் மூலம் Custom ROM வசதி நமக்கு கிடைக்கும். இதன் பெரிய பலன் இதன் மூலம் Android OS Upgrade வசதி நமக்கு கிடைக்கும். 
Custom Themes:
Android Theme – ஐ நீங்கள் மற்றும் வசதி இதன் மூலம் கிடைக்கிறது. 
Speed and Battery:
முன்னமே சொன்னது போல போனின் Speed மற்றும் Battery Life அதிகரிக்கும். ஆனால் இரண்டும் சேர்ந்து கிடைக்காது. Speed அதிகம் வேண்டும் என்றால் Battery Life குறையும். Battery life அதிகம் வேண்டும் என்றால் Speed குறையும்.  [தகவலைமின்னஞ்சல் மூலம் சொன்ன நண்பர் விக்னேஷ்க்கு நன்றி]
Android OS Upgrade:
மேலே சொன்னது போல Custom ROM உங்களுக்கு Android OS Upgrade வசதியை பெற முடியும். 
இவை மட்டுமின்றி WiFi and USB tethering, Simple Backup Solution போன்ற வசதிகள் கிடைக்கும். 
குறைபாடுகள்: 
பிரச்சினை என்றால் சில Applications உங்கள் போனில் இயங்க மறுக்கும், இதனால் புது போன் வாங்கும் நிலைக்கு கூட கொண்டு செல்லும். 
Android Market அல்லாத Applications அல்லது இணையம் மூலம் Virus வரும் வாய்ப்பு உள்ளது. இது நீங்கள் மிகவும் கவனிக்க வேண்டிய ஒன்று. இப்படி ரூட் செய்து உங்கள் போனில் ஏதேனும் பிரச்சினை வந்தால் வாரண்டி கிளைம் செய்ய முடியாது.
Android Phone – ஐ Root செய்வது எப்படி? 
முதலில் உங்கள் போனில் உள்ள முக்கிய தகவல்களை Backup எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். போன் மெமெரியில் 25MB Space இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். 
1இப்போது SuperOneClick என்ற மென்பொருளை உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். 
2. இப்போது உங்கள் Android போனை உங்கள் கணினியில் USB Data Cable மூலம் இணைத்து விட்டு, Settings>> Applications >> Development என்பதில் “USB Debugging” என்பதை enable செய்யவும். 
3. இப்போது கணினியில் SuperOneClick மென்பொருளை ஓபன் செய்யுங்கள்.
4. Samsung Capacitive என்கிற போன் மாடல் தவிர மற்றவற்றை பயன்படுத்துபவர்கள் Universal என்பதை கிளிக் செய்து Root என்பதை கிளிக் செய்யவும். 
5. இப்போது சிறிது நேரத்தில் உங்கள் Phone Root ஆகி விடும். அதன் பின்னர் Allow Non Market Apps என்பதை கிளிக் செய்யுங்கள் (தேவைப்பட்டால்).
அவ்வளவு தான் உங்கள் போன் Root ஆகி விட்டது. ஆனால் போனின் பாதுகாப்பு இனி உங்கள் கையில்.  
Android Phone – இல் இருந்தே Root செய்ய உதவும் Applications:  
2. z4root

7/27/2013

IRCTC இல் SMS மூலமாக TRAIN TICKET BOOKING செய்யலாம்




IRCTC-யில் ஆன்லைன் மூலம் டிக்கெட் புக் செய்ய விரும்புவர்களுக்கு பெரிய தொல்லை அதன் வேகம்.  அனைத்து இந்தியர்களுக்கும் ஒரே சர்வர் மூலம் டிக்கெட் புக் செய்யும் வசதி வழங்கப்படுவதால் மெதுவாக இருக்கும் புக்கிங் சேவையை வேகமாக்க இன்னொரு வசதியை கொடுத்துள்ளது IRCTC. தற்போது நீங்கள் உங்கள் போனில் இரண்டே இரண்டு SMS மூலம் டிக்கெட் புக் செய்து விடலாம்.



தேவையானவை: 


  1. மிக முக்கியமாக வங்கிக்கணக்கு மற்றும் IRCTC Account இருக்க வேண்டும்
  2. நீங்கள் புக் செய்ய பயன்படுத்தும் மொபைல் நம்பர் IRCTC & Bank இரண்டிலும் Register செய்யப்பட்டிருக்க வேண்டும். 
  3. பேங்க்கில் இருந்து MMID, OTP (One Time Password) போன்ற தகவல்களை நீங்கள் பெற வேண்டும்.

OTP என்பது One Time Password என்பதால் ஒரு முறை மட்டுமே இதை நீங்கள் பயன்படுத்த முடியும். எனவே இதை எப்படி தொடர்ந்து பெறுவது என்பதை உங்கள் வங்கியில் கேட்டுக் கொள்ளுங்கள். சில வங்கிகள் சில வழிமுறைகளை பின்பற்றுகின்றன.

இவையே தேவையானவை. இதில் ஒன்று இல்லை என்றாலும் உங்களால் டிக்கெட் புக் செய்ய இயலாது.

தற்போது எப்படி டிக்கெட் புக் செய்வது என்று பார்ப்போம்.

     1.  முதலில் கீழே உள்ளது போன்ற SMS – ஐ 139 அல்லது 5676714 என்ற                     எண்ணுக்கு அனுப்ப வேண்டும்.

 BOOK <TrainNo> <FromCity> <ToCity> <TravelDate(DDMM)> <Class> <Passenger1-Name> <Age> <Gender> <Passenger2-Name> <Age> <Gender> (Upto 6 passengers)
உதாரணம்:

BOOK 12661 CHN TEN 2707 SL masilamani charles 21 M

    2.  நீங்கள் மேலே உள்ளது போன்று சரியான பட்சத்தில் அனுப்பினால்                    உங்களுக்கு 139 இல் இருந்து ஒரு SMS வரும்.

Trans Id: 12345678 Ticket Amount: 590 IRCTC SC: 11.24 Total Amount: 600 Seat: AVAILABLE-240. For Payment SMS PAY <34004567> IMPS <MMID> <OTP> IRCTCUserID to 139 to book ticket.
     3.  இப்போது டிக்கெட்க்கு பணம் செலுத்த வேண்டும். இதற்கு கீழே உள்ள             வழிமுறையை பின்பற்றவும்.

 PAY <Transaction ID as received> IMPS <MMID as received from bank> <OTP as received from bank for this transaction> <IRCTCUserID>
உதாரணம்:

PAY 12345678 IMPS 750210 3009 Masilamani charles

     4.  இதையும் சரியாக அனுப்பும் பட்சத்தில் உங்களுக்கு பின் வரும் SMS        வரும்.

Your ticket booked successfully. PNR is: 10101010 Ticket No: :1234567890  Booking Status:  CONFIRM S7 1 WS Masilamani charles CONFIRM S7 4 WS Ticket Amt: 600.0 SC: 11.24 Src: Chennai  JN Dst: Tirunelveli Date of Journey: 27/07/2013 Sch Dep 20:05 hrs

3/09/2013

ஆன்ராய்ட் மொபைல்களுக்கு பல்வேறு வசதிகளுடன் கூடிய புதிய இலவச Avast Anti Virus மென்பொருள்


அவாஸ்ட் ஆண்டிவைரஸ் மென்பொருளை பற்றி பெரும்பாலானவர்கள் அறிந்திருப்பீர்கள். கணினிகளை வைரஸ் மற்றும் மால்வேர்களில் இருந்து கணினியை பாதுகாக்க உதவும் மிகச்சிறந்த இலவச ஆன்டிவைரஸ் மென்பொருளாகும். கணினி உலகில் சிறந்த இடத்தை தக்க வைத்துள்ள இந்த ஆன்டிவைரஸ் மென்பொருள் இப்பொழுது மொபைல் உலகிலும் கால் வைத்துள்ளது. முதலாவதாக பல்வேறு வசதிகளுடன் கூடிய இலவச ஆன்டிவைரஸ் மென்பொருளை ஆன்ராய்ட் மொபைல்களுக்காக வெளியிட்டுள்ளது அவாஸ்ட் நிறுவனம். இந்த புதிய ஆன்ராய்ட் ஆன்டிவைரஸ் மென்பொருளில் பல்வேறு வசதிகள் உள்ளது.


மென்பொருளில் உள்ள வசதிகள்:
  • Antivirus Production- Real time Production, Custom Updates
  • Web Shield
  • Call / SMS filter
  • Anti-Theft Features - Remote Lock, Remote memory wipe, sim card change notification, Remote siren
  • Firewall
  • Application Manager
இது போன்ற மேலும் பல வசதிகள் உள்ளது அனைத்தும் இலவசமாகவே உபயோகித்து கொள்ளலாம். 
கீழே மற்ற மென்பொருட்களுக்கும் அவாஸ்ட் மென்பொருளுக்கும் உள்ள வித்தியாசத்தை பாருங்கள்.
பணம் கொடுத்து வாங்கும் மென்பொருளில் இல்லாத வசதிகள் கூட இந்த ஆன்ராய்ட் அவாஸ்ட் ஆன்ட்டி வைரஸ் மென்பொருளில் உள்ளது. இந்த மென்பொருள் செயல் படும் விதத்தை விளக்கும் கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.

இந்த மென்பொருளை Avast for android இந்த லிங்கில் சென்று டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். கணினியில் இந்த மென்பொருளை டவுன்லோட் செய்யும் பொழுது உங்கள் கணினியோடு உங்கள் ஆன்ராய்ட் மொபைல் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
அல்லது உங்கள் மொபைலில் www.avast.com/android என்ற தளத்திற்கு சென்று டவுன்லோட் செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.