12/19/2013
11/01/2013
படங்களை பயன்படுத்தி எப்படி குகூலில் தேடுவது
இன்றைய உலகில் எந்த சந்தேகம் வந்தாலும் அல்லது எதனை பற்றி அறிந்து கொள்வதற்கும் நாம் பயன்படுத்தும் ஒரே கருவி குகூல் தான். குகூல் பல அம்சங்களை நமக்கு வழங்கி தேடலை எளிதாக மாற்றி வருகிறது . இதனை பற்றி எத்தனை பேருக்கு தெரியும் என்று எனக்கு தெரியவில்லை இருப்பினும் இந்த பதிவு உங்களுக்கு உதவும் என்ற நம்பிக்கையுடன் எழுதுகிறேன்....
குகூல் தேடல் இயந்திரம் சொற்களை மட்டும் வைத்து தகவல்களை தேடி தருவது போல் படங்களை வைத்தும் நமக்கு தேவையாண தகவலை பெற முடியும்..... உதாரணமாக நம்மிடம் இருக்கும் படம் எந்த இணையதளதில் உள்ளது எத்தனை விதங்களில் உள்ளது என்பதை இதனை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம் .... தேடும் முறையை விளக்குகிறேன்..... முதலாவது குகூல் பக்கத்திற்கு செல்லவும் இப்போது கீழே காட்டும் விண்டோ திறக்கும்
அதன் வலது மேல் பக்கத்தில் உள்ள சொடுக்குங்கள்(கிளிக்)

இப்போது ஒரு தேடுவதற்காக உள்ள கட்டம் தோன்றும் அந்த கட்டத்தின்(பாக்ஸ்) உள்ளே வலது புறத்தில் உள்ள கேமரா போன்ற வடிவில் உள்ள படத்தை சொடுக்குங்கள்
தற்போது மேலே குறியிட்டுள்ள படத்தை பதிவேற்ற என்றொரு லிங்க் இருக்கும் அதனை சொடுக்கவும்
தெரிந்தெடுக்கும் வாய்ப்பு திறக்கும் அதனை சொடுக்கவும்
நீங்கள் எந்த படத்தை பயன்படுத்தி தேட விரும்புகிறிர்களோ அதனை தெரிவு செய்து கொள்க
தெரிவு செய்தவுடன் உங்கள் படம் பதிவேற சில வினாடிகள் எடுத்துக்கொள்ளும் . பதிவேற்றம் நிறைவடைந்த பின் மேலே காட்டப்பட்டுள்ளது போன்ற தேடும் இடத்தை அடைவிர்கள்
தற்போது தேடல் முடிவுகளை பாருங்கள் நீங்கள் பதிவேற்றிய படத்திற்கு இணையான படங்கள் உள்ள லிங்க் காண்பிக்க படும் இதன் மூலம் அந்த படத்தின் தகவலை நீங்கள் எளிதில் அறிந்து கொள்ளலாம் .... இதில் ஏதாவது சந்தேகமோ அல்லது கேள்வியோ இருப்பின் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் என்னால் இயன்றவரை பதிலளிக்கிறேன்........
10/10/2013
இணையதள மையங்கள் மூலமாக வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய
சென்னை:
இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் வரும் அக்டோபர் 1ம் தேதி முதல்
இணையதள மையங்கள் மூலமாக வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய விரும்புவோர்
அதாவது பெயரை சேர்த்தல், திருத்துதல் மற்றும் தவறான பெயர்களை சரி செய்து
மாற்றுதல் ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்கும் முறை அமல்படுத்தப்படுகிறது.
இணையதளத்தை பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம்
செய்தல், மாற்றம் செய்தல் போன்றவற்றிற்கு விண்ணப்பிக்கும் முறை கடந்த
இரண்டு ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள போதும், போதிய விழிப்புணர்வு இல்லாத
காரணத்தால் இணைய தளத்தை பயன்படுத்துவதில் தமிழகம் பிற மாநிலங்களைக்
காட்டிலும் பின் தங்கிய நிலையிலேயே உள்ளது. இதனைக் களையும் வகையில் இணையதள
மையங்கள் மூலமாக வாக்காளர் பட்டியல் பணிக்கு இணையத்தை மக்கள் பயன்படுத்தும்
முறையை நடைமுறைப் படுத்த அரசு திட்டமிட்டது.
தமிழக வாக்காளர்கள் குறித்தும் தலைமை தேர்தல் அதிகாரி
பிரவீண் குமார் கூறியதாவது, ‘இந்தியாவில் கேரளா மாநிலத்தில் 75 சதவீத
பேரும், ஆந்திராவில் 40 சதவீத பேரும் இணையதளம் மூலம் வாக்காளர்
பட்டியலுக்கு விண்ணப்பித்துள்ளனர். தகவல் நுட்ப தொழிற்துறையில் முன்னணி
மாநிலங்களில் ஒன்றாக இருந்து வரும் தமிழகத்தில் இணையதளம் மூலமாக 7.8 சதவீத
பேர் மட்டுமே வாக்காளர் பட்டியலுக்கு விண்ணப்பித்துள்ளனர். இணையதளம் மூலம்
வாக்காளர் பட்டியலுக்கு விண்ணப்பிப்போரின் இல்லத்துக்கு தேர்தல் அலுவலர்கள்
வந்து பெயர், முகவரி உள்பட விவரங்களை சரிபார்ப்பார்கள். பணிகள் அனைத்தும்
முடிவடைந்தவுடன் 40 நாட்களுக்குள் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்'
எனத் தெரிவித்தார்.
இந்த இணைய தள மையங்கள் பெரிதும் உதவியாக
இருந்தாலும், கண்டிப்பாக ஒரு பெரிய தொகை வசூலிக்கப்படும், எனவே முடிந்தவரை
அனைவரும் அறிய பகிரவும்..
அறியாமையை போக்கிடுவோம்,
வாக்காளர் பட்டியலில் பதிவிடுவோம்,
கேடுகெட்ட அரசியல்வாதிகளை ஒழித்திடுவோம்..
இணையத்தில் விண்ணபிக்க, ஏதேனும் மாற்றம் செய்ய " http:// www.elections.tn.gov.in/ eregistration/ "
ஜிமெயிலில் டெலிட் செய்த Contacts-களை மீட்டெடுக்க
ஈமெயில் சேவையில் ஜிமெயில் தற்போது
முதன்மை நிறுவனமாக செயல்பட்டு வருகிறது, ஈ-மெயில் அனுப்பும் போதும் சரி
மற்றப்படி அனைத்துவிதமான முகவரி (Contact) -கள் அனைத்தையுமே நம்முடைய
ஈ-மெயிலில் தான் சேமித்து வைப்போம். குறிப்பாக இணைய நண்பர்களின் ஈ-மெயில்
முகவரிகள் அனைத்துமே ஈ-மெயிலில் தான் இருக்கும், ஒரு சிலரே தனியாக குறித்து
வைத்திருப்பார்கள். இந்த ஈ-மெயில் முகவரியை நாமே அறியாமலேயே டெலிட்
செய்திருப்போம். அல்லது வேறு செயல்பாட்டின் காரணத்தால் ஈ-மெயில்
முகவரிகள் டெலிட் செய்யப்பட்டிருக்கலாம். அவ்வாறு டெலிட் செய்யப்பட்ட
ஈ-மெயில் முகவரிகளை மீட்டெடுக்க முடியும்.
முதலில் உங்களுடைய ஈ-மெயில்
முகவரிக்குள் நுழைந்து கொள்ளவும், பின் Contacts என்பதை தேர்வு செய்து More
Actions என்னும் பட்டியை தேர்வு செய்து அதில் Restore Contacts என்பதை
தேர்வு செய்து எத்தனை நாள் என்பதை குறிப்பிட்டுவிட்டு, இழந்த Contact-களை
ரீஸ்டோர் செய்து கொள்ள முடியும்.
அதிகபட்சமாக
ஒருமாதத்திற்கு உள்ளாக டெலிட் செய்த முகவரிகளை மட்டுமே மீட்டெடுக்க
முடியும். அந்த குறிப்பிட்ட நாளில் உங்களுடைய ஈ-மெயில் முகவரியில் இருந்த
Contact-ள் மட்டுமே ரீஸ்டோர் செய்த பின்பு இருக்கும். மற்ற முகவரிகள்
இருக்காது, என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
MailBird - ஜிமெயில் மின்னஞ்சல் கிளையண்ட்
இணைய உலகில் இரகசியமாக தகவல்களை பரிமாறிக்கொள்ள பயன்படும் ஒரு வழி
மின்னஞ்சல் ஆகும். இந்த வகையில் மினனஞ்சல் சேவையினை பல்வேறு நிறுவனங்கள்
இலவசமாக வழங்கி வருகின்றன. அதில் முதன்மையானது கூகுள் நிறுவனத்தின்
மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் ஆகும். இந்த சேவையினை இன்று மின்னஞ்சல்
பயன்படுத்துபவர்களில் 70 சதவிகிதத்தினர் பயன்படுத்துவதாக ஆய்வுகள்
தெரிவிக்கிறன. இந்த மின்னஞ்சல் வசதியை நேரிடையாக உலாவில்யில் திறந்து
பயன்படுத்த முடியும். மேலும் கிளையண்ட்கள் பல உள்ளன அதில் முதன்மையானது
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அவுட்லுக் ஆகும். மேலும் பல இலவச அப்ளிகேஷன்கள்
உள்ளது அதில் ஒன்றுதான் MailBird ஆகும். இது ஜிமெயிலுக்கென
உருவாக்கப்பட்டது ஆகும்.
மென்பொருளை தரவிறக்க சுட்டி
சுட்டியில் குறிப்பிட்ட தளத்திலிருந்து மென்பொருளை பதிவிறக்கி கொள்ளவும்.
பின் இந்த MailBird அப்ளிகேஷனை கணினியில் நிறுவவும். கணினியில் நிறுவும்
போது இணைய இணைப்பு அவசியம் தேவை.
அப்ளிகேஷனை கணினியில் நிறுவிய பின் ஜிமெயிலின் பயனர் பெயர் மற்றும்
கடவுச்சொல்லை உள்ளிடவும். பின் புதியதாக மின்னஞ்சல் அனுப்புதல், ஏற்கனவே
வந்துள்ள மின்னஞ்சல்களை பார்வையிடுதல் போன்ற செயல்களை இலகுவாக செய்ய
முடியும்.
மறந்துபோன விண்டோஸ்-7 கடவுச்சொல்லை மாற்றியமைக்க
நான்கு நாட்களுக்கு முன்
வாசகர் ஒருவர் மறந்துபோன கடவுச்சொல்லை மாற்றியமைப்பு எவ்வாறு என கேட்டிருந்தார், இதோ அதற்கான பதில்.
பெரும்பாலான கணினி
பயன்பாட்டாளர்கள் தங்களுடைய கணினிக்கு கடவுச்சொல் கொண்டு பூட்டி வைத்திருப்பர். தீடிரென
கடவுச்சொல் தவறு என்று பிழைச்செய்தி வரும், நாம் எவ்வளவு தான் முட்டி மோதினாலும்
கணினியை திறக்க முடியாது. அதுபோன்ற சூழ்நிலையில் இதற்கு வழி என்னதான் என்று
பார்த்தால் கணினியை பற்றி அறியாதவர்கள் இயங்குதளத்தை நிறுவுதல் ஒன்றே வழி என்று
கூறுவார்கள். ஆனால் கணினியில் எந்தவித மாற்றமும் செய்யமல் கடவுச்சொல்லை
மாற்றியமைக்க எளிமையான வழி இருக்கிறது.
முதலில் நம்முடைய கணினியில்
என்ன இயங்குதளம் நிறுவியுள்ளோமோ அந்த இயங்குதளத்தை சீடி/டிவிடி யிலோ அல்லது
பெண்ட்ரைவிலோ
பூட் செய்து கொள்ளவும். பின்
பூட் செய்த சீடி/டிவிடி அல்லது பெண்ட்ரைவினை கணினியில் இட்டு, பயாஸ் சென்று First
Booting Device யை சீடி/டிவிடி அல்லது பெண்ட் இதில் ஒன்றில் ஏதாவது ஒன்றினை தேர்வு
செய்து பின் பயாஸினை சேமித்து பின் அதிலிருந்து பூட் செய்யவும். கணினி பூட்
ஆனவுடன் இயங்குதளத்தை நிறுவுவதற்கான தொடக்க விண்டோ தோன்றும் அதில் Repair your
computer என்பதை கிளிக் செய்யவும்.
உங்கள் கணினி உள்ள
இயங்குதளங்கள் பட்டியலிடப்படும். அதில் எந்த இயங்குதளத்தின் பயனர் கணக்கின்
கடவுச்சொல்லை மாற்ற வேண்டுமோ அதை தேர்வு செய்து Next என்ற பொத்தானை அழுத்தவும்.
இதில் நீங்கள் எந்த இயங்குதளத்தின் பயனர் கணக்கின் கடவுச்சொல்லை மாற்ற
நினைக்கிறீர்களோ அது எந்த கோலனில் நிறுவப்பட்டுள்ளது என்பதை குறித்து
வைத்துக்கொள்ளவும். இங்கு விண்டோஸ் 7 D: கோலனில் நிறுவப்பட்டுள்ளது.
அடுத்ததாக தோன்றும்
விண்டோவில் Command Prompt என்பதை கிளிக் செய்யவும்.
வரும் கட்டளை பலகையில்
கீழ்காணும் கட்டளைகளை உள்ளிடவும்.
copy
d:\windows\system32\sethc.exe d:\
மேலே குறிப்பிட்ட கட்டளையை
உள்ளிட்டு என்டர் கீயை அழுத்தியவும். 1 file(s) copied. என்ற செய்தி வரும்.
அடுத்து மீண்டும் மற்றொரு கட்டளையை உள்ளிடவும்.
copy
d:\windows\system32\cmd.exe d:\windows\system32\sethc.exe
கட்டளையை உள்ளிட்டு என்டர்
கீயை அழுத்தியவுடன் மீண்டும் அதன் மேலே பதியட்டுமா என்ற உங்களிடம் கணினி கேட்கும்.
நீங்கள் Yes என்று தட்டச்சு செய்து என்டர் கீயை அழுத்தவும். 1 file(s) copied.
என்ற செய்தி அடுத்த வரியில் தோன்றும்.
பின் கட்டளை பலகையினை
மூடிவிட்டு கணினியை மறுதொடக்கம் செய்யவும். பயனர்கணக்கு முகப்புபக்கம் தோன்றும்.
அப்போது Shift+Tab கீகளை ஒரு சேர ஐந்து முறை தொடர்ந்து அழுத்தவும். அப்போது ஒரு
கட்டளை பலகை தோன்றும். அதில் கீழ்காணும் கட்டளையை உள்ளிடவும்.
net user
TCINFO passwd
இதில் net user என்பது
இருப்பியல்பு கட்டளை ஆகும். TCINFO என்பது நீங்கள் மாற்ற இருக்கும் விண்டோஸ் பயனர்
கணக்கின் பெயர் ஆகும். Passwd என்பது நீங்கள் புதியதாக மாற்ற நினைக்கும்
கடவுச்சொல் ஆகும். அதை உங்கள் விருப்பபடி உள்ளிட்டுக்கொள்ளவும். அவ்வளவுதான் இனி
நீங்கள் புதிதாக மாற்றிய கடவுச்சொல்லே செயல்படும்.
10/04/2013
பென்டிரைவ் Speed
பென்டிரைவ் என்பது கணனி பயன்படுத்துவோர் மட்டுமல்லாமல், கிட்டத்தட்ட
அனைவருமே பயன்படுத்தும் ஒரு Removable Device ஆகும். இத்தகைய
பென்டிரைவ்கள்(pendrives) நாம் கணினியில் பயன்படுத்தும்போது சில வேளைகளில்
நம்முடைய பொறுமையைச் சோதிக்கும் அளவுக்கு மிகவும் மெதுவாக இயங்கும்.
அதிலுள்ள தரவுகளை பரிமாற்றம் செய்யும்போது நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும்.
இத்தகைய சூழ்நிலையைத் தவிர்ப்பது எப்படி?
உங்களுடைய பென்டிரைவ் வேகமாகச் செயல்பட என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.
1.உங்கள் கணினியில் பென்டிரைவை இணையுங்கள். (win+E)கொடுத்து MY COMPUTER செல்லவும்.
2.அங்கு பென்டிரைவிற்கான டிரைவை வலது கிளிக் செய்து Properties என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
3.தொடர்ந்து திறக்கும் விண்டோவில் HARDWARE என்னும் டேபை கிளிக் செய்யவும். பிறகு Name என்னும் தலைப்பின் கீழுள்ள உங்கள் பென்டிரைவைத்
தேரந்தெடுக்கவும்.
4.பிறகு கீழிருக்கும் Properties என்பதை கிளிக் செய்து Ok கொடுக்கவும்.
5.அடுத்து தோன்றும் விண்டோவில் change settings என்பதை கிளிக் செய்யவும்.
6.அதற்கு அடுத்துத் தோன்றும் பெட்டியில் Policies எனும் டேபிள் கிளிக் செய்து அதன் கீழிருக்கும் Better Performance என்பதைத் தேர்ந்தெடுத்து OK
கொடுக்கவும்.
இப்போது உங்கள் பென்டிரைவ் முன்பைக் காட்டிலும் வேகமாக இயங்கும். இதை நீங்கள் கண்கூடாக காண்பீர்கள். இந்த அனுபவம் எப்படி இருக்கிறது என்பதை கருத்துரையில் சொல்லுங்கள்.
மறக்காமல் ஒவ்வொரு முறையும் பென்டிரைவை கணினியிலிருந்து நீக்கும்போது Safely remove
hardware என்பதைக் கிளிக்செய்து பின்பு உங்கள் பென் டிரைவை கணினியிலிருந்து
நீக்கவும். இதை ஒரு தொடர் பழக்கமாக மாற்றிக்கொள்ளுங்கள். இதனால் உங்கள்
பென்டிரைவ் சேதமடையாமல் நீண்ட காலம் உழைக்கும்...!

பொறியியல் மாணவர்களுக்கான சிறந்த FOSS மென்பொருள்கள் :
வரும் காலங்களில் FOSS மென்பொருளின் பங்களிப்பு பொறியியல் துறையில் அதிகமாக காணப்படும். இந்த மென்பொருட்களின் குறைந்த கொள்ளடக்கம், சீரிய பணியாற்றல் மற்றும் வேகம் ஆகியவை இவற்றை பொறியியல் துறையில் ஒரு நிரந்திர இடத்தை பிடிக்க வைக்கும்.
தற்போது, ஏறக்குறைய அணைத்து இயந்திரப் பொறியாளர்களும் “MATLAB ” போன்ற உரிமைபெற்றுள்ள மென்பொருட்களையே பயன்படுத்தி வருகின்றனர். அந்த மென்பொருள் சுமார் 3GB அளவு கொண்டது. மேலும் அதனை பயன்படுத்த நீங்கள் Rs . 4000 வரை செலவு செய்ய நேரிடலாம். ஆனால் அதே காரியங்களை செய்யகூடிய பல FOSS மென்பொருட்கள் இருப்பது நம்முள் பலருக்கு தெரியாது.
இதோ, பொறியியல் மாணவர்களுக்கு உதவும் சில FOSS மென்பொருட்களை பற்றிய சிறு குறிப்புகள்.
1 . GNU Octave : நீங்கள் MATLAB இல் தொடங்கிய ஆவணங்களையும் இந்த GNU Octave இல் காண முடியும். MATLAB இல் உள்ள அணைத்து வசதிகளும் இந்த மென்பொருளில் உள்ளது. MATLAB போலவே வரைபடங்களை இந்த மென்பொருளில் முப்பரிமாணத்தில் காணலாம். இந்த மென்பொருள் MATLAB ஐ காட்டிலும் சுமார் மூன்று மடங்கு கம்மியான இடத்தை தான் அடைக்கும் (500 MB மட்டுமே).
இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்ய இங்கே செல்லவும் -
GNU octave இன் முப்பரிமான output
2 . OpenSCAD : இன்றைய தினத்தில் CAD பயன்படுத்தாத
பொறியியல் மாணவர்களை பார்ப்பது அரிது. இயந்திர பொறியாளர்கள் மட்டுமின்றி
மின்னியல் மற்றும் தொலைதொடர்பு பொறியாளர்களுக்கும் CAD ஒரு இன்றியமையாத மென்பொருளாக மாறி விட்டது.
OpenSCAD என்பது CAD வடிவமைப்பை துல்லியமாக, முப்பரிமாணத்தில் செய்ய கூடிய ஒரு மென்பொருள். நீங்கள் அளிக்கும் திட்ட செயலாக்கத்தை (script codes ) ஐ வைத்து OpenSCAD உங்களுக்கு முப்பரிமான வடிவமைப்பை தரும். இது Windows , Linux மற்றும் Mac ஆகிய அணைத்து இயக்கு தளங்களிலும் செயல்படும்.
இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்ய இங்கே செல்லவும் – http://www.openscad.org/
OpenSCAD இன் இயந்திர வடிவமைப்பு
3 . Genius Maths Tool - கடினமான, நெடிய கணக்குகளை தீர்க்க நம்முடிய scientific calculator களே தடுமாறும். அந்த நேரத்தில் நமக்கு உதவியாக இருப்பது தான் இந்த Genius Maths Tool . இது “உபுண்டு (ubuntu )” இயக்கு தளத்தின் “software center ” இல் கிடைக்கும்.
கடினமான integration , differentiation மட்டுமின்றி முப்பரிமான படங்கள் மற்றும் statistics ஆகியவற்றை இயக்கம் திறமை கூட இந்த மென்பொருளுக்கு உண்டு.
உங்கள் கணினித் திரையை ஒலியுடன் பதிவு செய்ய
Eidete – திரையினைப் படம் பிடிக்கும் ஒரு எளிமையான மென்பொருள்.
உபுண்டுவில் கணினியினுடைய திரையினை படம் பிடிக்க Desktop
Recorder, Istanbul Desktop Session Recorder போன்ற Application -கள்
இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே.
அது போல Eidete -ம் ஒரு திரையினை படம்பிடிக்கும் மென்பொருள். இதன் தற்போதைய அம்சங்கள்:
-
webm கோப்பு வடிவத்திற்கு சேமித்துக்கொள்ளலாம்
-
திரையில் ஒரு குறிப்பிட்ட பகுதியினை தேர்வு செய்து அந்தப் பகுதியினை மட்டும் பதிவு செய்தல்
-
அழுத்தப்பட்ட பொத்தானைக் காண்பித்தல், மற்றும் பதிவு செய்தல்
-
ஒலியோடு பதிவு செய்தல் அதாவது திரையோடு சேர்த்து ஒலியினையும் பதிவு செய்யும் வசதி.
- உபுண்டு 11.10/12.04 -ல் Eidete னை நிறுவுவது எப்படி:
கீழ்காணும் கட்டளைகளை முனையத்தில் கொடுக்கவும் (கணினி இணைய இணைப்பில் இருக்க வேண்டியது அவசியம்)
sudo add-apt-repository ppa:shnatsel/eidete-daily
sudo apt-get update
sudo apt-get install eidete
பார்ட்டிசியன் உருவாக்குதலும் கோப்பு முறைமையும் -2
பார்ட்டிசியன் பிரித்தல்:
ஒரு வன்வட்டினை பார்ட்டிசியன் பிரிப்பதற்கு பல்வேறு
வகையான கருவிகள் உள்ளன. உதாரணமாக fdisk, Gparted, போன்றவைகள். விண்டோஸ்
எக்ஸ்.பி இயங்குதள வட்டினைக் கூட வைத்து பிரிக்கலாம் ஆனால் நாம் இங்கு
அதைப் பற்றி பார்க்கப் போவதில்லை. fdisk மற்றும் Gparted இரண்டினைப்
பற்றியும் பார்ப்போம்.
fdisk Tool: (லினக்ஸிற்கு புதிய பயனாளர்கள் யாரும் இதை செய்து பார்க்க வேண்டாம். தகவல் இழப்பிற்கு நிறைய வாய்ப்பிருக்கு.)
இது ஒரு Command Line Tool ஆகும். பெரும்பாலும் அனைத்து
லினக்ஸ் வழங்கல்களுடனும் நிறுவப்பட்டே வருகின்றது. நாம் தனியாக நிறுவ
வேண்டிய அவசியமில்லை. fdisk கட்டளையினை இயக்குவதற்கு root அனுமதி வேண்டும்.
root (or) superuser அனுமதியில்லாமல் fdisk கட்டளையினை இயக்க முடியாது.
உபுண்டு இயங்குதளத்தை அடிப்படியாக கொண்டு பயன்படுத்துபவர்கள் sudo வை
பயன்படுத்திக் கொள்ளலாம்.
fdisk பயன்படுத்துதல்:
fdisk கட்டளையினைப் பயன்படுத்தி நாம்
வன்வட்டில் பார்ட்டிசியன்களை உருவாக்கலாம், நீக்கலாம் மற்றும் மாற்றம்
செய்யலாம். முனையத்தை(Terminall) திறந்து,
sudo fdisk /dev/sda
எனக் கொடுத்து Enter Key -னை அழுத்தவும்.
பார்க்க படம் -1
படம் – 1
fdisk கட்டளையானது ஒரு எழுத்தை மட்டும்
பயனாளரிடமிருந்து பெற்றுக்கொள்கிறது. என்னென்ன கட்டளைகள் உள்ளன என்பதை
தெரிந்து கொள்ள m -ஐ அழுத்தி Enter Key -யினை அழுத்தவும்.
பார்க்க படம் – 2
படம் -2
-
வன்வட்டில் ஏற்கனவே என்னென்ன பார்ட்டிசியன்கள் உள்ளது என பார்ப்பதற்கு p -யினை அழுத்தி Enter Key அழுத்தவும். பார்க்க படம் -3
படம் – 3
-
fdisk Command -னை விட்டு வெளியேற q-ஐ அழுத்தவும்.
-
வன்வட்டில் பார்ட்டிசியன்கள் மீது செய்து மாற்றங்களை சேமிக்க w – ஐ அழுத்தவும்.
புதிய பார்ட்டிசியன்களை உருவாக்குதல்:-
புதிய பார்ட்டிசியன்களை உருவாக்க n -ஐ அழுத்தவும்.
Primary, Extended or Logical இவைகளில் எவற்றை உருவாக்கப் போகிறமோ அதை தேர்வு செய்யவும்.
→ புதிய பார்ட்டிசியன் எங்கிருந்து தொடங்க வேண்டும் முடிய வேண்டும் என்பதைக் கேட்கும். தேவையான அளவினை உள்ளிடவும்.
→ Default ஆக மீதமிருக்கும் இடங்களை அப்படியே Assign செய்து வைத்திருக்கும்.
→ உதாரணமாக 80 GB Hard Disk -ல் ஒரு புதிய
பார்ட்டிசியன் உருவாக்குகிறமென்றால் 80 GB னை அப்படியே காட்டும். நாம்தான்
தேவையான அளவினை கொடுத்துக் கொள்ள வேண்டும்.
→ புதிய பார்ட்டிசியன்கள் அளவினை நாம் MB கணக்கிலும் கொடுக்க முடியும்.
புதிய பார்ட்டிசியனை உருவாகிய பிறகு, மாற்றங்களை சேமிக்க w – அழுத்தி Enter Key -னை அழுத்தவும்.
Gparted: (அனைத்துப் பயனாளர்களும் இதைப் பயன்படுத்தலாம், மிகவும் எளிமையானது)
9/21/2013
கம்ப்யூட்டரில் மெமோரி&பெண்டிரைவ் இயங்க மருகின்றதா?
பொதுவாக நாம் கணினியில் பெண்ட்ரைவ்வோ மேமோரியோ கணினியில் சொரிகியவுடன் இயக்காமல் முதலில் அண்டி வைரசால் சோதனை செய்த பிறகே இயக்க வேண்டும் அப்போதுதான் இது போன்ற பிரசினைகள் நமது கணினியில் வராமல் தவிர்க்க வேண்டும்
9/18/2013
மவுஸ் கர்சரை மவுஸ் இல்லாமல் நகர்த்த
சில வேளைகளில் மவுஸ் மயக்க மருந்து சாப்பிட்டது போல என்ன செய்தாலும்
நகராது. கர்சர் ஒரே இடத்தில் அப்படியே இருக்கும். வெகுநாட்கள் மவுஸைச்
சுத்தம் செய்யாமல் விட்டாலோ அல்லது வேறு ஏதேனும் சிறிய பாகங்கள் மவுஸினுள்
மோசமாகிப் போனாலோ அல்லது மவுஸ் சார்ந்த சாப்ட்வேரில் பிரச்னை ஏற்பட்டாலோ
இந்த நிலை ஏற்படலாம். அப்போது மவுஸ் கர்சரின் நகர்த்தலை கீ போர்டு மூலம்
மேற்கொள்ளலாம். இந்த கீ போர்டு மவுஸ் மூலம் அனைத்து வேலைகளையும்
மேற்கொள்ளலாம். கீ போர்டு மவுஸை இயக்கத்திற்குக் கொண்டு வரக் கீழ்க்காணும்
செயல்முறைகளை மேற்கொள்ளவும்.
முதலில் இந்த மாற்றங்களை மேற்கொள்ள அட்மினிஸ்ட்ரேட்டராக நீங்கள் கம்ப்யூட்டருக்குள் நுழைய வேண்டும். அதன்பின் கீ போர்டு மவுஸ் செட் செய்வதற்கு Alt+Shift+NumLock கீகளை ஒரு சேர அழுத்தவும். உடன் ஒரு சிறிய மவுஸ்கீஸ் என்ற பெட்டி கிடைக்கும். இதில் மவுஸ் கீகளை செயல்படுத்த ஓகே பட்டன் அழுத்தவும். கீகளை மவுஸ் கர்சர் இயக்கத்திலிருந்து விடுவிக்க கேன்சல் பட்டன் அழுத்த வேண்டும். செட் செய்வதற்கு செட்டிங்ஸ் பட்டன் அழுத்தவும். செட்டிங்ஸ் கட்டத்தின் மூலம் மவுஸ் கர்சரை இன்னும் கொஞ்சம் விரிவாக செட் செய்திடலாம். எடுத்துக் காட்டாக மவுஸ் கர்சரின் வேகம், துடிப்பு, இப்போது செட்டிங்ஸ் பார் மவுஸ் கீஸ் என்ற கட்டம் கிடைக்கும். இதில் தேவையான மாற்றங்களை மேற்கொண்ட பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இப்போது நம்லாக் கீ பேட் மூலம் மவுஸ் கர்சரை நகர்த்தலாம். 1,2,3,4,5,6,7,8,9 ஆகிய கீகள் மவுஸ் கர்சரை பல்வேறு திசைகளில் நகர்த்த உதவும். 5 என்ற கீ மவுஸ் இடது கிளிக் செயல்பாட்டிற்குப் பயன்படும். இன்ஸெர்ட் கீ மவுஸ் கர்சரை அழுத்திப் பிடிப்பதற்கான செயலை மேற்கொள்ளும். + கீ எந்த பொருளின் மீதும் டபுள் கிளிக்கிற்கு உதவிடும். டெலீட் பட்டனை அழுத்தினால் மவுஸ் அதன் இடத்திலிருந்து ரிலீஸ் ஆகும். நம் லாக் பட்டனில் கிளிக் செய்தால் கீ போர்டு மவுஸ் அமைப்பு விலகிடும்.

இலவசமாய் கிடைக்கும் பயனுள்ள புரோகிராம்கள்
இன்டர்நெட் தளத்தில் இலவசமாக நமக்குப் பல புரோகிராம்கள் கிடைக்கின்றன.
இவற்றின் பயன்பாடுகள் பலவகையாகும். இலவச டிவி, ஆடியோ மற்றும் வீடியோ வசதி,
கம்ப்யூட்டரில் ஆட்டோ ஹாட் கீ அமைப்பு என இவை பல்வேறு வகைகளாகும். அவற்றில்
சிலவற்றை இங்கு பார்ப்போம்.
1. டவுண்லோட் மேனேஜர்: இன்டர்நெட்டினை அடிக்கடி பயன்படுத்துபவர்கள் சராசரியாக நாளொன்றுக்கு ஒரு புரோகிராமையாவது டவுண்லோட் செய்கிறார்கள் என ஓர் ஆய்வு கூறுகிறது. எத்தனை வைரஸ் பயமுறுத்தல் இருந்தாலும் இலவசம் மற்றும் புதிய பயன்பாடு என்று தெரிந்தவுடன் அந்த புரோகிராமினை இறக் கிப் பார்க்கத்தான் மனசு துடிக்கிறது. இவ்வாறு டவுண் லோட் செய்திடும் புரோகிராம் களை பலர் தங்கள் கம்ப்யூட்டர் டிரைவ் களில் அப்படியே சாப்ட்வேர் ஸ்டோர் ரூம் தயார் செய்து வைத்துவிடுகின்றனர். 45 சதவிகிதம் பேரே பயன்படுத்துகின்றனர். இது போல டவுண்லோட் செய்பவர்களுக்கு உதவிடும் வகையில் இலவச டவுண்லோட் மேனேஜர் ஒன்று www.freedownloadma nager.com (FDM) என்ற முகவரியில் கிடைக்கிறது.
இதில் டவுண் லோட் சம்பந்தப்பட்ட அனைத்து வசதிகளும் கிடைக்கின்றன. டவுண்லோட் செய்யப்படும் புரோகிராமினைப் பிரித்து டவுண்லோட் செய்வது, ஒரே பைலுக்கு பல மிர்ரர் பைல்களை உருவாக்குவது, யு–ட்யூப் போன்ற வீடியோ தளங்களிலிருந்து பிளாஷ் வீடியோக்களை டவுண்லோட் செய் வது, இதற்கான பிட் டாரண்ட் சப்போர்ட் என இது தரும் வசதிகள் நீண்டு கொண்டே போகின் றன. டவுண்லோட் செய்யப்படும் புரோகிராம் ஸிப் பைலாக இருந் தால் அதில் என்ன என்ன பைல்கள் உள்ளன என்று பார்த்து நமக்குத் தேவயான பைல்களை மட்டும் டவுண்லோட் செய்திடும் வசதி குறிப்பிட்டுச் சொல்லக் கூடியதாகும். இதனைப் பயன்படுத்தி டவுண்லோட் செய்தவர்கள் அளித்துள்ள கருத்துக்களை இந்த தளத்தின் சமுதாய தளப்பிரிவில் படிக்கலாம். மிகவும் பயனுள்ளவையாகவும் இந்த புரோகிராமினைப் புரிந்து கொள்ளக் கூடியதாகவும் உள்ளன. அண்மையில் தரப்படும் இந்த FDM புரோகிராம் உங்கள் கம்ப்யூட்டரை முழுவதுமாக ஸ்கேன் செய்து நீங்கள் வைத்துள்ள புரோகிராம்கள் அனைத்தும் லேட்டஸ்ட் புரோகிராம்களா என்று சோதனை செய்து அப்படி இல்லை என்றால் அவற்றை அப்டேட் செய்வதற்கான வழிகளையும் தருகிறது. இதைப் போல இன்னொரு புரோகிராமும் இன்டர்நெட்டில் கிடைக்கிறது. அதன் தள முகவரி www.orbitdownloader.com. . ஆனால் FDM போல கூடுதலான வசதிகள் இதில் இல்லை.
2.உங்கள் இஷ்டத்திற்கு ஷார்ட் கட் கீ: கம்ப்யூட்டர் வந்ததிலிருந்து நேரம் மிச்சம் செய்வதற்கும், குறைந்த உழைப்பிற்கும் பல வழிகளை நாம் பெற்று வருகிறோம். அந்த வகையில் கீ போர்டு ஷார்ட் கட் கீகளை அந்த அந்த அப்ளிகேஷன் புரோகிராம்களே தந்து வருகின்றன. எம்.எஸ். ஆபீஸ் மற்றும் பிரவுசர்கள் அனைத்திற்கும் ஹாட் கீகள் உள்ளன.
இருப்பினும் நம் வசதிக்கு நாம் விரும்பும் வகையில் இந்த ஆட்டோ ஹாட் கீகள் அமைந்தால் இன்னும் வசதியாக இருக்கும் என்று நாம் எண்ணுகிறோம், விரும்புகிறோம். அந்த வகையில் நமக்கு உதவிட கிடைப்பது Auto Hotkey என்னும் அப்ளிகேஷன் புரோகிராம். இந்த புரோகிராம் www.autohotkey.com என்ற முகவரியில் உள்ள தளத்தில் கிடைக்கிறது. இதன் மூலம் எந்த கீ இணைப்புகளிலும் நீங்கள் விரும்பும்செயல்பாட்டினை அமைத்துப் பயன்படுத்தலாம். அத்துடன் இந்த புரோகிராம் உங்கள் கீ போர்டு மற்றும் மவுஸ் பயன்பாட்டினை பதிவு செய்து அவற்றை நீங்கள் விரும்பும் எத்தனை முறையும் சுருக்கமாகச் செயல்படுத்த உதவிடுகிறது. இந்த புரோகிராம் தன்னுடைய ஸ்கிரிப்டிங் மொழியைப் பயன்படுத்துகிறது. இதை உணர்ந்து பயன் படுத்துவதும் எளிது. தெரிந்து கொண்டால் மிகவும் ஆச்சரியப்படத்தக்க வகையில் நம்மால் ஆட்டோ ஹாட் கீ களை அமைக்கலாம். இந்த ஸ்கிரிப்டிங் மொழியைக் கட்டாயம் கற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் என்பதில்லை. இந்த புரோகிராம் தரும் ஆட்டோ ஸ்கிரிப்ட் ரைட்டர் உங்களுக்காக மேக்ரோக்களைப் பதிவு செய்கிறது.
ஆட்டோ ஹாட் கீ புரோகிராமினை இன்ஸ்டால் செய்தவுடன் உங்களுக்குப் பிடித்த அப்ளிகேஷன் புரோகிராம்களைத் திறக்க ஆட்டோ ஹாட் கீகளை உருவாக்கலாம். எடுத்துக் காட்டாக Windows + W இணைந்து எம்.எஸ்.வேர்டைத் திறக்குமாறு செய்திடலாம். இப்படியே பல புரோகிராம்களுக்கான ஹாட் கீகளை அமைக்கலாம். ஆனால் இந்த புரோகிராமின் முழு பயனை அடைய இதன் ஸ்கிரிப்டிங் மொழியை புரிந்து கொள்வது நல்லது. இதற்கான வழிகாட்டியும் இந்த தளத்தில் உள்ளது. அதன் முகவரி www.autohotkey.com/docs/scripts.htm. நீங்கள் உருவாக்கும் ஹாட் கீகளை எடுத்துச் சென்று பயன்படுத்தும் வசதியும் உள்ளது. ஒவ்வொரு ஸ்கிரிப்டையும் ஒரு இ.எக்ஸ்.இ. பைலாக உருவாக்கலாம். அதன் மீது ரைட் கிளிக் செய்து Compile script என்பதில் கிளிக் செய்தால் அது ஒரு இ.எக்ஸ்.இ. பைலாக உருவாகும். இந்த பைலை எந்த பெர்சனல் கம்ப்யூட்டரிலும் பயன்படுத்தலாம். இவை அனைத்தும் புதிய கம்ப்யூட்டரில் சிஸ்டம் ட்ரேயில் அமர்ந்து கொண்டு உங்களுக்கு உதவிடும். Exit கொடுத்தால் இவற்றிலிருந்து வெளியேறலாம். புதிய அந்த கம்ப்யூட்டரில் எந்த பாதிப்பையும் ஏற்படுத் தாது. இதே போன்ற இன்னொரு புரோகிராம் http://www.winkeymx.com/ என்ற முகவரியில் உள்ள தளத்தில் உள்ளது. ஆனாலும் ஆட்டோ ஹாட் கீ போல அனைத்து வசதிகளையும் தரும் வேறு புரோகிராம் எதுவும் இல்லை என்றே கூறலாம்.
3.இலவச டிவி புரோகிராம்: இன்டர்நெட் இணைப்பு வசதி குறைந்த கட்டணத்தில் கிடைப்பதால் (மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இங்கு மிக மிக அதிகம்தான்) பலரும் இதன் மூலம் அனைத்து வசதிகளையும் பெற எண்ணுகின்றனர். அவ்வகையில் டிவி மற்றும் திரைப்படங்களையும் பார்க்க துடிக்கின்றனர். உங்களிடம் மத்திய நிலை வேகத்தில் இன்டர்நெட் இணைப்பு வசதி இருந்தால் இது சாத்தியமே. இந்த வகையில் நமக்கு உதவிடுவது Joost என்னும் புரோகிராம் ஆகும்.
இது www.joost.com என்ற முகவரியில் உள்ள தளத்தில் கிடைக்கிறது. முற்றிலும் இலவச டிவி தரும் புரோகிராம் என இதனைக் கூறலாம். மேலே குறிப்பிட்டுள்ள தளத்திலிருந்து Joost புரோகிராமினை டவுண்லோட் செய்து கொள்ளவும். இந்த கிளையண்ட் புரோகிராம் மூலம் உலகெங்கும் உள்ள டிவி நிகழ்ச்சிகளைக் காண முடிகிறது. (ஆனால் எத்தனை நிகழ்ச்சிகளை நாம் பார்த்து புரிந்து ரசிக்க முடியும் என்பது வேறு விஷயம்) இதன் மூலம் கிடைக்கும் வீடியோவின் தன்மை அவ்வளவு சிறப்பாக இருக்குமா என்பது நீங்கள் பயன்படுத்தும் சாதனங்களைப் பொறுத்து உள்ளது. இருந்தாலும் பார்க்க சகிக்க முடியாத அளவில் இது அமைவதில்லை. இது தரும் சேனல்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் அசந்து போவீர்கள். மொத்தம் 480 சேனல்களைத் தருகிறது. இதனை வகை வகையாகப் பிரித்தும் பார்க்கலாம். காமெடி, கார்ட்டூன், டாகுமெண்டரி என வகைகளும் நிறைய இருக்கின்றன. ஒவ்வொரு சேனலிலும் உங்களுக்குப் பிடித்த படக் காட்சிகளைத் தேர்ந்தெடுத்து அவற்றை இணைத்து பார்க்கும் வகையில் அமைத்துக் கொள்ள வசதி தரப்பட்டுள்ளது. இந்த Joost புரோகிராமின் சிறப்பு நாம் கேட்பதை வழங்குவதுதான். நாம் விரும்புவதை நாம் தேர்ந்தெடுக்கும் நேரத்தில் தருகிறது. எப்போது வேண்டுமானாலும் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் அதனை மூடிவிடலாம். ஆனால் ஒரு சின்ன பிரச்னை உள்ளது. விளம்பரங்களையும் நாம் பார்த்தே ஆக வேண்டும். ஏனென்றால் அவை தரும் நிதி பலத்தில் தான் இந்த இலவச டிவி புரோகிராம் இயங்குகிறது. அதனால் என்ன! இங்கு நாம் கேபிளுக்குப் பணம் கட்டிப் பார்க்கையில் எத்தனை விளம்பரங்கள் வருகின்றன என்று நீங்கள் அங்கலாய்ப்பது தெரிகிறது. எனவே குறுக்கிடும் விளம்பரங்களுக்குப் பழகிய நமக்கு Joost தரும் விளம்பரங்கள் ஒரு பொருட்டே அல்ல. இதே போல இன்னொரு தளம் இதுவரை எனக்குத் தென்படவில்லை.
4.சிடிக்களில் எழுத: நம்முடைய கம்ப்யூட்டர்களில் சிடி மற்றும் டிவிடி ரைட்டர்களை நிறுவுகையில் அதனுடன் வரும் நீரோ சிடி ரைட்டிங் புரோகிராமுடன் பழகிப் போன நமக்கு அதே போல மற்ற புரோகிராம்கள் குறித்து எண்ணுவதற்கு நேரம் கிடைப்பதில்லை. இருந்தாலும் நீரோ போலவே, அதன் வசதிகளுக்கு இணையான வசதிகளைத் தரும் இலவச புரோகிராம்களும் இருக்கின்றன என்பதுதான் உண்மை. சிடி மற்றும் டிவிடிக்களில் தகவல்களை எழுத CD Burner XP என்றொரு புரோகிராம் http://cdburnerxp.se என்ற முகவரியில் உள்ள தளத்தில் கிடைக்கிறது. சிடி, டிவிடி மற்றும் புளுரே டிஸ்க்குகளில் நீரோ போலவே அனைத்து வகை தகவல்களையும் எழுதுகிறது. ஐ.எஸ்.ஓ. இமேஜ்களை சிடிக்களில் அமைத்துத் தருகிறது. ஆடியோ சிடிக்களை உருவாக்குகிறது. இப்படி நீரோ நமக்குத் தரும் அனைத்து செயல்பாடுகளையும் தருகிறது. இதனுடைய இன்டர்பேஸும் மிகவும் எளிமையானதாக இருக்கிறது. ஜஸ்ட் ட்ராக் அண்ட் ட்ராப் என்ற முறையில் அமைந்துள்ளது. 2.8 எம்பி அளவிலான இந்த பைல் அநாவசியமாக எந்த தகவலையும் எழுதிவைப்பதில்லை. சிடிக்களின் இடத்தை வேஸ்ட் செய்வதில்லை. இதனைப் பயன்படுத்திப் பார்த்துவிட்டீர்கள் என்றால் நிச்சயம் நீரோ புரோகிராமினை அன் இன்ஸ்டால் செய்வது குறித்து யோசிக்கத் தொடங்கிவிடுவீர்கள் என்பது உறுதி.
5. உங்கள் கம்ப்யூட்டரைத் தூக்கிச் செல்ல: நம் டெஸ்க் டாப் கம்ப்யூட்டரை நாம் செல்லும் இடமெல்லாம் தூக்கிச் செல்ல முடியாது. ஏன், லேப் டாப் கம்ப்யூட்டரைக் கூடத் தூக்கிச் செல்வது எளிதான காரியம் இல்லை. யு.எஸ்.பி. டிரைவைத்தான் எடுத்துக் செல்கிறோம். இதனால் நாம் வேறு ஒருவரின் அல்லது அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டரைப் பயன்படுத்துகையில் அதன் டெஸ்க் டாப், சூழ்நிலை ஆகியவை நமக்கு அந்நியமான ஒரு வேலை தளத்தைத் தருகிறது. அப்படியானால் நாம் பாக்கெட்டில் போட்டுச் செல்லும் யு.எஸ்.பி. டிரைவில் நம் கம்ப்யூட்டரின் சூழ்நிலையை நமக்குத் தரும் வகையில் அமைத்திட முடியுமா? ஆம், முடியும். இதற்கு ஒரு வழியாகத்தான் MojoPac என்னும் புரோகிராம் நமக்குக் கிடைக்கிறது. இதனை www.mojopac.com என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இறக்கிக் கொள்ளலாம். மிக எளிதாக இதனை உங்கள் யு.எஸ்.பி. டிரைவில் பதிந்து கொள்ளலாம். நீங்கள் எந்த கம்ப்யூட்டரில் உங்கள் டிரைவை இணைத்துச் செயல்படுத்தத் தொடங்கினாலும் அது உடனே உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரின் சூழ்நிலையைத் தருகிறது. இதனால் நீங்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டருக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. இந்த MojoPac புரோகிராம் நீங்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டரின் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைப் பயன்படுத்தி ஒரு புதிய சூழ்நிலையை உருவாக்குகிறது. உங்கள் யு.எஸ்.பி. டிரைவ் உங்களின் இ: டிரைவாக மாறுகிறது. இதனால் எந்த கம்ப் யூட்டரில் இதனைப் பயன்படுத்துகிறீர்களோ அதில் உள்ள புரோகிராம்களுக்கு உங்களுக்கு அனுமதி கிடைக்காது. ஆனால் அதே நேரத்தில் உங்களுக்குத் தேவயான புரோகிராம்களை நீங்கள் பதிந்து இயக்கிக் கொள்ளலாம். இந்த புரோகிராம்கள் நீங்கள் எங்கெல்லாம் இந்த டிரைவை இணைத்துப் பயன் படுத்துகிறீர்களோ அங்கெல் லாம் கிடைக்கும்.
இதன் வேகத்தை அதிக பட்சம் பயன் படுத்த வேண்டும் என்றால் நீங்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டரில் மை கம்ப்யூட்டரைத் திறந்து அதில் யு.எஸ்.பி. டிரைவ் ஐகானில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் பிராபர்ட்டீஸ் கிளிக் செய்திடவும். இதில் ஹார்ட்வேர் என்னும் பகுதியில் யு.எஸ்.பி. டிரைவைத் தேர்ந்தெடுத்து அதில் புராபர்ட்டீஸ் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதில் ஒரு டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் ஏற்கனவே “Optimize for quick removal” என்பது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும். இதற்குப் பதிலாக “Optimize for Performance” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். MojoPac போல செயல்படும் புரோகிராம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் நீங்கள் பயன்படுத்தும் புரோகிராம்களை எளிதில் எடுத்துச் சென்று பயன்படுத்த Portable Apps Suite என்னும் புரோகிராம் www.portableapps.com /suite என்ற முகவரியில் உள்ள தளத்தில் கிடைக்கிறது. இலவசமாய் எவ்வளவோ இணையத்தில் கிடைக்கின்றன. ஏற்கனவே வாசகர்களுக்குத் தெரிந்த பல புரோகிராம்களை விட்டுவிட்டு தெரியாத ஆனால் பல பயன்பாடுகளைத் தருகின்ற புரோகிராம்கள் குறித்து மேலே தகவல்கள் தரப்பட்டுள் ளன. தேவைப்பட்டால் மட்டுமே இறக்கி இன்ஸ் டால் செய்து பயன்படுத்தவும். உங்கள் அனுபவத்தினை எங்களுக்கு எழுதவும்.

இணையத்தள மூலமாக உங்கள் வீட்டுக் கணினியை இயக்க
TweetMyPC நீங்கள் உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் உங்கள் வீட்டுக் கணினியை இயக்குவதை சாத்தியமாக்கிறது.
இணையத்தளமூடக உங்கள் வீட்டுக் கணினியை இயக்க இது உதவுகிறது இந்தTweetMyPC .
TweetMyPC வேறு இடத்தில் நீங்கள் இருந்தாலும் Twitter ஊடாக உங்கள் கணினியை இயக்க உதவுகிறது.
TweetMyPC வேறு இடத்தில் நீங்கள் இருந்தாலும் Twitter ஊடாக உங்கள் கணினியை இயக்க உதவுகிறது.
1. இதற்காக வெறுமேனே உங்கள் கணினியில் இந்த செயலியை தறவிறக்கம்( Download) செய்யவும்..
2. பின்னர் www.Twitter.com என்ற தளத்துக்கு சென்று புதிய டியூட்டர் (Twitter) கணக்கு ஒன்றை ஆரம்பிக்கவும். இக் கணக்கு TweetMyPC க்கு மட்டும் பிரத்தியோகமானது
{Go to www.Twitter.com and create a new Twitter account for your PC
(This is optional as TweetMyPC only responds for updates). This account
will be used by TweetMyPC to monitor for new tweets}
3. உங்கள் பயனாளர் கணக்கை பெயர் , கடவுச்சொல் கொடுத்து TweetMyPC
இயக்கவும். சற்று தாமதித்து இரட்டை சொடுக்குகள் மூலம் Twitter ஐ இயக்கி
TweetMyPC ஐ ஆரம்பிக்கவும்.
{Start TweetMyPC and then fill in the login details. Wait for some time
for the application to verify your login details & Double click the
Twitter Icon to start TweetMyPC }
அதே பயனாளர் கணக்குடன் எங்கிருந்தாவது உள் நுளையும்போது உங்கள் கணினியை
நிறுத்தவோ ( Shutdown ) செய்யவோ மீள் ஆரம்பம்(Restart) செய்யவோ முடிகிறது.
சிறுவர் கூட இதை எளிதாக செயல்படுத்தலாம்
சிறுவர் கூட இதை எளிதாக செயல்படுத்தலாம்
http://tweetmypc.en.softonic.com/
http://tweetmypc.codeplex.com/Release/ProjectReleases.aspx?ReleaseId=26541Google Chrome: PDF Reader இல்லாத கணினிகளுக்கான மாற்று
நாம் ஒரு சில சமயங்களில், நண்பர்களுடைய கணினி அல்லது அலுவலக கணினியை
அவசரத்திற்கு பயன்படுத்தும் பொழுது, அவற்றில் PDF Reader நிறுவப்படாமல்
இருக்கலாம். (கூகிள் குரோம் உலாவி நிறுவப்பட்டுள்ளது என்று வைத்துக்
கொள்வோம்) உங்களிடம் உள்ள PDF கோப்பை உடனடியாக திறந்து பார்க்க வேண்டிய
கட்டாயத்தில் உள்ளீர்கள் என்று வைத்துக் கொள்வோம். எனில் இந்த வகை
கோப்புகளை திறப்பதற்கான மாற்று வழியை கூகிள் குரோம் உலாவி நமக்கு
அளிக்கிறது.
தேவையான PDF கோப்பை வலது க்ளிக் செய்து திறக்கும் context menu வில் Open
with ஐ க்ளிக் செய்யுங்கள். ஒருவேளை Open with வசதி வரவில்லையெனில் shift
மற்றும் மெளசின் வலது பொத்தானை க்ளிக் செய்யலாம்.
இந்த Open with பகுதியில் Google Chrome பட்டியலிடப்படவில்லை எனில்,
Choose program ஐ க்ளிக் செய்யுங்கள். இப்பொழுது திறக்கும் Open with
உரையாடல் பெட்டியில் , Browse பொத்தானை அழுத்தி, Google Chrome உலாவி
உங்கள் கணினியில் எங்கு நிறுவப்பட்டுள்ளது என்பது உங்களுக்கு
தெரிந்திருந்தால் அந்த பகுதியை browse செய்து கொடுக்கலாம்.
ஆனால் Google Chrome உலாவி Program Files கோப்புறைக்குள்
நிருவப்படுவதில்லை. எனவே இது நிறுவப்பட்ட பகுதியை தேர்வு செய்ய, Google
Chrome உலாவியின் shortcut ஐ வலது க்ளிக் செய்து, properties க்ளிக்
செய்து, திறக்கும் உரையாடல் பெட்டியில், அதில் Target பகுதிக்கு நேராக உள்ள
லொகேஷனை காப்பி செய்து, பேஸ்ட் செய்தால் போதுமானது.
இனி உங்களுக்கு தேவையான PDF கோப்பு உங்கள் அபிமான குரோம் உலாவியில் திறக்கும்.
9/10/2013
windows 7 activator இலவச பதிவிறக்கம்
நம்மில் பலரும் விண்டோஸ் 7 தான் தற்போது உபயோகப்படுத்துகிறோம் ஆனால் இதை ஆன்லைனில் அப்டேட் செய்ய பயம்..
காரணம் அது உண்மையாகவே உரிமை பெற்ற பதிப்பாக இருக்காது. அதனால் தான் அப்டேட் செய்வது இல்லை
பலரும் பல crack பைல்களை ஆக்டிவேட் செய்திருப்பார்கள் ஆனால் அதில் பல பிரச்சினைகளையும் சந்திக்க நேரிடும் அதனாலேயே ஆன்லைனில் அப்டேட் செய்வதில்லை
அந்த கவலையே தேவைஇல்லை ......
இன்ஸ்டால் செய்த பிறகு நீங்களும் சந்தோசமாக எதுவேணும்னாலும் செய்யலாம் ....
அது எப்படி என்பதை பார்ப்போம்
முதலில் நீங்கள் செய்ய வேண்டியது
கீழேயுள்ள இணைப்பை செடுக்கி பதிவிறக்கவும்
விண்டோஸ் 7 ஆக்டிவேட்டர்
பதிவிறக்கிய பிறகு பைலை திறந்து அதில் ஆக்டிவேட்டர் பைலை கிளிக் செய்யவும்
பிறகென்ன உங்கள் சிஸ்டம் தானாகவே ஆக்டிவேட் ஆகும்
இனி நீங்கள் அப்டேட் செய்யலாம் உங்கள் சிஸ்டம் இப்போது புதிய வேர்சனுடன் ......
9/09/2013
Google Web History என்றால் என்ன?
Google Web History என்றால் என்ன?
நீங்கள் எந்த உலவியை (Browser) பயன்படுத்தினாலும் நீங்கள் எந்தெந்த தளங்கள் சென்றீர்கள் என்பது பற்றிய தகவல்கள் உலவியின் History யில் சேமிக்கப்பட்டு இருக்கும் நீங்கள் வைத்து இருக்கும் settings ஐ பொறுத்து. யாராவது விஷயம் தெரிந்தவர் என்றால் இதை நோண்டினால் நீங்கள் எந்தெந்த தளம் சென்றீர்கள் இணையத்தில் என்னென்ன பார்த்தீர்கள் என்று எளிதாக கண்டு பிடித்து விடுவார்கள்.
இதையே கூகுள் எப்படி செய்கிறது என்றால்…கூகுள் சேவைகளில் நாம் என்னென்ன தளம் போகிறோம் எதை தேடுகிறோம் நம்முடைய விருப்பங்கள் என்னென்ன என்பது அனைத்தையும் சேமித்துக்கொண்டே இருக்கும். எடுத்துக்காட்டாக நீங்கள் கூகுள் தளத்தில் உங்கள் பயனர் கணக்கு கொடுத்து உள்ளே சென்று இருக்கும் போது கூகுள் தேடுதலில் என்னென்ன செய்கிறீர்களோ அனைத்தும் சேமிக்கப்பட்டுக்கொண்டு இருக்கும். நீங்கள் How to remove the google web history என்று தேடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம் பின் அந்தப் பக்கத்தை மூடி விட்டு புதிய பக்கத்தில் திரும்ப இதே வரியை தட்டச்சு செய்தீர்கள் என்றால் நீங்கள் ஏற்கனவே இதை தட்டச்சு செய்து இருந்ததால் அதுவே ஏற்கனவே நீங்கள் தட்டச்சு செய்த பழைய வரியைக் காட்டும். இது போல பல சேவைகளில் நீங்கள் செய்தது எல்லாம் சேமிக்கப்பட்டுக் கொண்டு இருக்கும்.
இதில் என்ன பிரச்சனை என்றால் நீங்கள் ஏதாவது
விவகாரமா தேடி இருந்தால் அதுவும் இதில் இருக்கும். மொத்தத்தில் உங்கள்
ஜாதகமே இதைப் பார்த்தால் தெரியும். நாளை உங்கள் கணக்கை யாராவது ஹேக் செய்து
ஆட்டையப்போட்டு இதில் போய்ப் பார்த்தால் உங்க வண்டவாளம் எல்லாம் தண்டவாளம்
ஏறி விடும். எதை எதை தேடினீர்கள் என்று புட்டு புட்டு வைத்து விடும். கூகுளும் உங்கள் தேடுதலை
அடிப்படையாக வைத்து செய்திகளை
விளம்பரங்களை அனுப்பிக்கொண்டு இருக்கும்.
.
இதை எப்படி நீக்குவது?
https://www.google.com/history/ தளம் செல்லுங்கள் உங்கள் பயனர் கணக்கு கடவுச்சொல்லை (Password) கொடுத்தவுடன் பின்வரும் படம் போல வரும்
இதை செய்ய 2 நிமிடம் கூட ஆகாது வழக்கம் போல
சோம்பேறித்தனப்பட்டு மறந்து விடாதீர்கள். நீங்கள் பல்வேறு கூகுள் கணக்குகளை
வைத்து இருந்தால் அனைத்திற்கும் இது போல தனித்தனியாக செய்ய வேண்டும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)