அன்ராய்டூ பதிப்புகளை பயன்படுத்தும் செல்பேசிகளுக்கு அவ்வப்போது
புதிய பதிப்புகளை பதிப்பித்து வருகிறது. கணிணியை பொருத்தவரை புதிய
இயங்குதளம் வந்தால் அவற்றை நாமாகவே நிருவிக் கொள்ளலாம் . ஆனால் இந்த
செல்பேசிகள் சற்று சிக்கலான முறையில் தான் அவற்றை அப்டேட்
செய்யப்படும். அவைகள் ROM - களில் இயங்குதளங்களை பதிந்து கொண்டு
இயங்குகின்றன. இந்த வகையான செல்பேசிகளையும்சில முறைகளை பயன்படுத்தி
நாம் அவற்றின் இயங்குதளத்தை புதுப்பிக்கலாம்.
இங்கே MICROMAX A110 CANVAS 2 க்கு அப்டேட்
செய்வது பற்றி விளக்கப்பட்டுள்ளது. வேறு வகையான மாடல்கள் அப்டேட்
விவரங்கள் வேண்டும் என்றால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். கைபேசி
நிறுவனம் மற்றும் வகை எண்ணை மறக்காமல் குறிப்பிடவும்.
ஸ்மார்ட் போன் களை பொறுத்தவரை MICROMAX முன்னனியில் இருக்கும் நிறுவனம்
ஆகும். அவர்களுடைய பதிப்பான MICROMAX A110 CANVAS 2 போன் ICE-CREAM
SAN-WITCH பதிப்பை பெற்றது ஆகும் இந்த ஸ்மார்ட் போனின் மென்பொருளை
அப்டேட் செய்வது பற்றி தெளிவாக அறிந்து கொள்ளலாம் .
இந்த MICROMAX A110 CANVAS 2 செல்பேசியானது MTK6577 மைக்ரோசிப்
பொருத்தப்பட்டு உள்ளது. இது ஜெல்லிபீன் பதிப்பிற்கு தேவையான வசதிகளை
அளிப்பதாக உள்ளதால் எளிமையாக அப்டேட் செய்யலாம் . இதற்காக
சர்வீஸ் சென்டர்களை நாடவேண்டியது இல்லை. அன்ராய்டு இயங்குதளத்தை
பதிவிறக்கம் செய்ய அகன்றவரிசை இணைப்பை பயன்படுத்துதல் நலம். அவை
பெரிய அளவிலான கோப்பாக உள்ளது.
கீழ்கண்ட பைல்களை பதிவிறக்கம் செய்ய வேண்டும்
மேற்கண்ட பைல்களை பதிவிறக்கம் செய்து அவற்றை தனியாக ஒரு இடத்தில் வைத்துக்கொள்ளவும்.
1. முதலில் MICROMAX DRIVER ஐ கணிப்பொறியில் நிறுவிக் கொள்ளவும் .
2.. பின்னர் SP tool ல் காணப்படும் Flash_Tool.exe ஐ கிளிக் செய்து ஓப்பன் செய்யவும்.
3. இந்த மென்பொருள் இயங்க தொடங்கியவுடன் scatter-loading கிளிக் செய்து ஓப்பன் செய்யவும்.
4. MICROMAX A110 CANVAS 2 க்கு உண்டான இயங்குதள ஜிப் ஐ வெளி தள்ளி அவற்றில் உள்ள MT6577_android_scatter_emmc என்ற டெக்ஸ்ட் பைலை தெரிவிக்கவும். அவ்வாறு தெரிவித்தவுடன் இயங்குதள பைல்கள் தானாகவே தேர்வாகின்றன.
5. பிறகு Flash_tool ல் உள்ள frimware->upgrade ஐகிளிக் செய்யவும்
அவ்வாறு செய்த பின்னர் இயங்குதளம் போனில் பதிய தொடங்கும் . நீல நிற
ப்ராகரஸ் பட்டை கொண்டு அறிந்து கொள்ளலாம். அவை சரியாக முடிந்தவுடன்
கணிணி திரையில் பச்சைநிற வண்ணம் கொண்ட வட்டம் காணப்படும். பச்சை நிற
வட்டம் தென்பட்ட பிறகு தான் போனை கணிணியில் இருந்து நீக்க வேண்டும். தவறு நேர்ந்தால் போன் ஆன் ஆகாது.
சரியாக செய்து முடிக்கும் பட்சத்தில் சிறப்பான ஜெல்லிபீன் போன் பெறலாம்.
உங்களுடைய சொந்த முயற்சியில் முயற்சிக்கவும். செல்பேசி பழுதுபட வாய்ப்பு உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.