என்னுடைய ஆங்கில வலைப்பக்கத்திற்கு செல்ல இங்கே அழுத்தவும் இப்படிக்கு உங்கள் தோழன் ஷாஜஹான் சார்லஸ்

3/11/2013

கூகிள் தேடல் முடிவுகளை ஜிமெயிலில் இணைக்க


இந்த இடுகை ஜிமெயிலில் உள்ள ஒரு கூடுதல் வசதி பற்றியது. நீங்கள் மின்னஞ்சல் உபயோகிக்கும் போது ஏதாவது தகவலை தேட வேண்டும் என்றால் தனி பக்கத்தில் கூகுளை திறந்து தேவையானவற்றை தேடி கொண்டிருந்திருப்பீர்கள்.

தேடலில் உள்ள குறிப்பிட்ட முடிவை மின்னஞ்சலில் இணைக்க காப்பி செய்து மின்னஞ்சல் உள்ளே பேஸ்ட் செய்ய வேண்டி இருக்க வேண்டும். ஜிமெயிலில் ஒரு வசதி இந்த வேலையை மிகவும் எளிதாக்குகிறது. இந்த வசதியை உயிர்ப்பித்துக் கொள்ள உங்கள் ஜிமெயிலில் வலது மூலையில் உள்ள 'Settings' லிங்கை கிளிக் செய்து 'Labs' பகுதிக்கு சென்று கொள்ளுங்கள்.


லேப்ஸ் பகுதியில் கீழே வாருங்கள். 'Google Search' என்ற வசதியை கண்டுபிடித்து 'Enable' கிளிக் செய்து கொள்ளவும். அடுத்து 'Save Changes' கிளிக் செய்து சேமித்து கொள்ளுங்கள். உங்கள் ஜிமெயில் தானாக மீள் துவக்கப்படும். இப்போது இடது புறத்தில் Chat -க்கு கீழே Google Search வசதி தோன்றி இருக்கும்.


நீங்கள் புதிய மின்னஞ்சலை உருவாக்கும் போது ஈமெயில் டூல்பாரில் புதிதாக ஒரு கூகிள் பட்டனை காணலாம். அதனை கிளிக் செய்து வேண்டியவற்றை ஜிமெயில் உள்ளேயே நீங்கள் தேடிக்கொள்ள முடியும். அதன் முடிவுகளில் உங்களுக்கு தேவையானவற்றை 'Send by email' என்பதனை கிளிக் செய்வதன் மூலம் உங்கள் மின்னஞ்சலில் எளிதாக இணைத்துக் கொள்ள முடியும்.

இனி மேல் உங்களுக்கு தேவையான விசயங்களை ஜிமெயில் உள்ளேயே தேடிக்கொள்ளுங்கள். ஜிமெயிலில் இந்த கூடுதல் வசதி சிலருக்கு பயன்படும்.

"உங்கள் கணினியில் ஹார்ட் டிஸ்க் நிரம்பிவிட்டது" என்ற தகவல் உங்கள் கணினி காட்டுகிறதா?

"உங்கள் கணினியில் ஹார்ட் டிஸ்க் நிரம்பிவிட்டது" என்ற தகவல் உங்கள் கணினி காட்டுகிறதா? அது ஒன்றும் பெரிய பிரச்னையே அல்ல. இதோ  அதற்கான எளிய தீர்வுகளை பார்ப்போம்.

முதலில்,  ஹார்ட் டிஸ்க்கில் உள்ள இடம் குறைந்துவிட்டதாக உங்களுக்கு ஒரு தகவல் வரும். உடனே என்னவோ, ஏதோவென்று பதற வேண்டாம்.

உங்கள் கணினியில் நீங்கள் எப்பொழுதாவது பயன்படுத்தவென பதிந்திருக்கும் மென்பொருள்களை நீக்குங்கள். அடுத்து temp கோப்புகளை நீக்குங்கள்.

அப்படி நீக்கியும் கூட,  உங்களுடைய கணினியில் மீண்டும் 'ஹார்ட் டிஸ்கில் போதுமான இடம் இல்லை. கோப்புகளை நீக்குங்கள்'  என்ற எச்சரிக்கை செய்தியைக் காட்டினால், கீழ்க்கண்ட மென்பொருள்கள் உங்களுக்கு உதவும்.

இம்மென்பொருள் எதற்காக என்றால், உங்கள் கணினியில் உள்ள ஹார்ட் டிஸ்க்கில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு ட்ரைவ்களில் (அதாவது C:, D:, E:, F:, என ஹார்ட் டிஸ்க் பகுதியாக பிரிக்கப்பட்டிருக்கும் இல்லையா? )ஒவ்வொரு டிரைவும் எந்தளவிற்கு கோப்புகளை கொண்டிருக்கிறது.. ஒவ்வொரு டிரைவின் கொள்ளவும் எவ்வளவு இருக்கிறது, அந்த டிரைவில் எந்த கோப்புகள் அதிக இடம் பிடித்துள்ளன என்பதை நமக்கு சரியாக காட்ட இந்த மென்பொருள்கள் பயன்படுகின்றன.

டிரீ சைஸ் ஃபீரீ மென்பொருள் -(TREE SIZE FREE)

இம்மென்பொருள் உங்கள் கணினியில் உள்ள ஹார்ட் டிஸ்க் ஒவ்வொன்றும் எவ்வளவு இடத்தை பெற்றுள்ளது? ஒவ்வொரு டிரைவில் எந்த கோப்புகள் அதிகமான இடத்தை அடைத்துக்கொண்டிருக்கின்றன என்பதை துல்லியமாக ஒரு சில வினாடிகள் உங்களுக்கு காட்டும்.

கிராஃபிக்ஸ் பார் மூலம் ஒவ்வொரு கோப்பும் அந்த டிரைவில் எடுத்துள்ள இடத்தை காட்டும். இந்த கிராஃபிக்ஸ் பார் மற்றும் வரைபட வடிவில் உள்ள இந்த அளவீடுகளில் உள்ள வண்ணங்களை உங்கள் விருப்பம் போல் மாற்றி அமைக்கலாம்.

இதன்  அடிப்படையில் எந்த போல்டரில் உள்ள கோப்புகளை நீக்குவது என்பதை இதன் மூலம் அறிந்துகொள்ள முடியும்.

மென்பொருளைத் தரவிறக்கச் சுட்டி: http://www.jamsoftware.com/treesize_free

இதனை போன்றே ஹார்ட் டிஸ்க்கில் அதிக அளவு இடம்பெற்றுள்ள கோப்புகள் மற்றும் டிரைவ்களை கண்டறிய உதவும் மற்ற மென்பொருள்:

2. WINDIRSTAT
தறவிக்கம் செய்ய: http://windirstat.info/download.html
3.  XINORBIS
தறவிக்கம் செய்ய: http://www.xinorbis.com/
4.  RIDNACS
தறவிக்கம் செய்ய:  http://www.splashsoft.de/Freeware/ridnacs-disk-space-usage-analyzer.html
5. SPACE SNIFFER
தறவிக்கம் செய்ய: http://www.uderzo.it/main_products/space_sniffer/

குறிப்பு: டிஸ்க் ஃபைட்டர் என்ற இந்த மென்பொருளும் உங்கள் கணினியில் உள்ள தேவையில்லாத கோப்புகளை நீக்கி, உங்கள் Hard Disk -ல் உள்ள இடத்தை மீட்டுக்கொடுக்கிறது.

தரவிறக்கம் செய்ய: http://www.spamfighter.com/FULL-DISKfighter/Functions/Download.asp 

வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க

வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி!

தற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சினை. வெவ்வேறான கணனிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும்பைல்களை பாதிக்கிறது.
இப்படி பாதிக்கும் பொழுதுஉங்கள் பென்ட்ரைவில் உள்ளபைல்கள் மறைக்கப்பட்டுவிடும் கணனியில் பென்டிரைவை ஓப்பன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது. வெற்றிடமாக இருக்கும். ஆனால் properties சென்று பார்த்தால் பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும். காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது. பென்டிரைவில் முக்கியமான தவல்கள் ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம். ஆனால் ஏதேனும் முக்கிய மான தகவல்கள் இருந்தால் எப்படி அந்த பைல்களை பத்திரமாக மீண்டும் கொண்டு வருவது என பார்ப்போம்.

இதற்க்கு நீங்கள் எந்த மென்பொருளையும் உங்கள் கணினியில் Install செய்து உபயோகிக்க வேண்டியதில்லை.உங்கள் கணனியிலேயே சுலபமாக செய்து விடலாம். கீழே உள்ள வழிமுறையின் படி கவனமாக செய்து அந்த பைல்களை மீட்டு எடுங்கள்.

1) முதலில் பென்டிரைவை உங்கள் கணினியில் சொருகி கொள்ளுங்கள்.

2) Start ==> Run ==> CMD==> Enter கொடுக்கவும்.

3) இப்பொழுது பென்ட்ரைவ் எந்த ட்ரைவில் உள்ளது என பாருங்கள். My Computer செல்வதன் மூலம் கண்டறியலாம்.

4) உதாரணமாக E: டிரைவில் பென்ட்ரைவ் இருக்கிறது எனவைத்து கொள்வோம் அதற்கு நீங்கள் E: என கொடுத்து Enter அழுத்தவும்.

5) attrib -h -s -r /s /d *.*என டைப் செய்யுங்கள் ஒவ்வொருபகுதிக்கும் Space சரியாககொடுக்கவும்.

◦நீங்கள் சரியாக கொடுத்துஉள்ளீர்கள் என உறுதி செய்து கொண்டு Enter அழுத்துங்கள்.

◦சில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து பாருங்கள் உங்களுடைய பைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும் —

3/10/2013

பேஸ்புக் சாட்டில் மறைந்துள்ள வசதி - மற்றவர்களின் புரோபைல் போட்டோவை சாட்டில் பகிர

பிரபல சமூக இணைய தளமான பேஸ்புக்கில் பல்வேறு வசதிகள் உள்ளது. பேஸ்புக் சாட் வசதி அதில் முக்கிமான ஒரு வசதி இதன் மூலம் நண்பர்களுக்குள் அரட்டை அடித்து மகிலாம். இந்த சாட் வசதியில் ஒரு வசதி மறைந்து உள்ளது. அந்த வசதியின் மூலம் அரட்டை அடிக்கும் நண்பர்களோடு விருப்பமானவர்களின் ப்ரோபைல் புகைப்படத்தை சாட்டில் அனுப்பலாம். Smileys பதில் அந்த நண்பரின் ப்ரோபைல் போட்டோவையே சாட்டில் அனுப்பலாம். இந்த வசதியை எப்படி உபயோகிப்பது என கீழே உள்ள வழிமுறையை பாருங்கள். உதாரணத்திற்கு கீழே உள்ள படத்தை பாருங்கள்.


Step 1:
முதலில் உங்கள் பேஸ்புக் அக்கௌண்டை திறந்து எவருடைய சாட் விண்டோவையாவது திறந்து கொள்ளுங்கள். அதில் நீங்கள் ப்ரோபைல் போட்டவை பகிர நினைக்கும் நபரின் Profile ஐடியை குறித்து கொள்ளுங்கள்.

உதாரணமாக 
  • Profile ID = https://www.facebook.com/profile.php?id=000000000000000
  • User Name =  https://www.facebook.com/masilamani.charles

கடைசியாக சிவப்பு நிறத்தில் கொடுத்துள்ளது தான் அவர்களுக்கான ஐடி இதை குறித்து கொள்ளவும். (பேஸ்புக் பக்கத்திற்கும்(Page) இதே முறை தான்).

Step 2:
அடுத்து உங்கள் சாட் விண்டோவில் செய்தி டைப் செய்யும் பகுதியில் இந்த ஐடியை அடைப்பு குறிக்குள் கொடுத்து என்டர் அழுத்தினால் போதும் புரொபைல் போட்டோ தெரியும்.
உதாரணமாக:
[[௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦000000000000]] அல்லது [[masilamani.charles]]



இது போன்று கொடுத்து Enter அழுத்தினால் போதும் நீங்கள் கொடுத்த ஐடியின் போட்டோ வந்திருக்கும்.

3/09/2013

ஆன்ராய்ட் மொபைல்களுக்கு பல்வேறு வசதிகளுடன் கூடிய புதிய இலவச Avast Anti Virus மென்பொருள்


அவாஸ்ட் ஆண்டிவைரஸ் மென்பொருளை பற்றி பெரும்பாலானவர்கள் அறிந்திருப்பீர்கள். கணினிகளை வைரஸ் மற்றும் மால்வேர்களில் இருந்து கணினியை பாதுகாக்க உதவும் மிகச்சிறந்த இலவச ஆன்டிவைரஸ் மென்பொருளாகும். கணினி உலகில் சிறந்த இடத்தை தக்க வைத்துள்ள இந்த ஆன்டிவைரஸ் மென்பொருள் இப்பொழுது மொபைல் உலகிலும் கால் வைத்துள்ளது. முதலாவதாக பல்வேறு வசதிகளுடன் கூடிய இலவச ஆன்டிவைரஸ் மென்பொருளை ஆன்ராய்ட் மொபைல்களுக்காக வெளியிட்டுள்ளது அவாஸ்ட் நிறுவனம். இந்த புதிய ஆன்ராய்ட் ஆன்டிவைரஸ் மென்பொருளில் பல்வேறு வசதிகள் உள்ளது.


மென்பொருளில் உள்ள வசதிகள்:
  • Antivirus Production- Real time Production, Custom Updates
  • Web Shield
  • Call / SMS filter
  • Anti-Theft Features - Remote Lock, Remote memory wipe, sim card change notification, Remote siren
  • Firewall
  • Application Manager
இது போன்ற மேலும் பல வசதிகள் உள்ளது அனைத்தும் இலவசமாகவே உபயோகித்து கொள்ளலாம். 
கீழே மற்ற மென்பொருட்களுக்கும் அவாஸ்ட் மென்பொருளுக்கும் உள்ள வித்தியாசத்தை பாருங்கள்.
பணம் கொடுத்து வாங்கும் மென்பொருளில் இல்லாத வசதிகள் கூட இந்த ஆன்ராய்ட் அவாஸ்ட் ஆன்ட்டி வைரஸ் மென்பொருளில் உள்ளது. இந்த மென்பொருள் செயல் படும் விதத்தை விளக்கும் கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.

இந்த மென்பொருளை Avast for android இந்த லிங்கில் சென்று டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். கணினியில் இந்த மென்பொருளை டவுன்லோட் செய்யும் பொழுது உங்கள் கணினியோடு உங்கள் ஆன்ராய்ட் மொபைல் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
அல்லது உங்கள் மொபைலில் www.avast.com/android என்ற தளத்திற்கு சென்று டவுன்லோட் செய்து பயன்படுத்தி கொள்ளலாம். 

3/08/2013

ஜாவா புரோகிராமிங் எளிய நிரல்கள்





ஜாவாவில் எளிய முறையில் சில கணிதங்களை பயன்படுத்த நிரல்களை கீழேதந்துள்ளேன். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு உதவியாக இருக்கும். 


1.ஒரு முழு எண்ணில் உள்ள எண்களின் கூடுதல் கண்டறிய...


import java.io.*;
public class sum
{
public static void main(String[] args)throws IOException
{
DataInputStream in= new DataInputStream(System.in);
int n=0,n1,n2=0,i,x;
System.out.Println(“Enter the number”);
n=Integer.parseInt(in.readLine());
for(i=0;i<n;i++)
{
x=n/10;
n1=n%10;
n2=n2+n1;
n=x;
}
System.out.Println(“Sum of the given Number is :” + n2);
}
}


2.கொடுக்கப்பட்ட முழு எண்ணின் தலைகீழ் எண் ( Reverse No ) கண்டறிய...


import java.io.*;
public class reverse
{
public static void main(String[] args)throws IOException
{
DataInputStream in= new DataInputStream(System.in);
int n,n1,i,x;
System.out.Println(“Enter the number”);
n=Integer.parseInt(in.readLine());
for(i=0;i<n;i++)
{
x=n/10;
n1=n%10;
n=x;
}
System.out.Println(“Reverse of the given Number is :” + n1);
}
}




3.ஒரு முழு எண் ஆம்ஸ்ட்ராங் எண்ணா (Armstrong) என்று கண்டறிய...

ஆம்ஸ்ட்ராங் என்றால் ஒரு எண்ணின் ஒவ்வொரு இலக்கத்தையும் கணமாக மாற்றி வரும் அதன் கூட்டுத்தொகையும் அந்த எண்ணும் சமமாக இருக்க வேண்டும்.
(எ.கா) - 153 = 13+53+33=153

import java.io.*;
public class Armstrong
{
public static void main(String[] args)throws IOException
{
DataInputStream in= new DataInputStream(System.in);
int n,n1,i,q=0,sum=0;
System.out.Println(“Enter the number”);
n=Integer.parseInt(in.readLine());
n1=n;
while(n!=0)
{
q=n%10;
sum=sum+(q*q*q);
n=n/10;
}
if (n1==sum)
{
System.out.Println(“the given Number is Armstrong”);
}
else
{
System.out.Println(“the given Number is not Armstrong”);
}
}
}

4.பத்தடிமான எண்ணிலிருந்து ஈரடிமான எண்ணாக மாற்ற ( Decimal to Binary )

import java.io.*;
public class sum
{
public static void main(String[] args)throws IOException
{
DataInputStream in= new DataInputStream(System.in);
int n,n1,n2,i,x[50];
System.out.Println(“Enter the Decimal number”);
n=Integer.parseInt(in.readLine());
for(i=0;i<n;i++)
{
n1=n/2;
n2=n%2;
x[i]=n2;
n=n1;
}
for(i=n;i>0;i--)
{
System.out.Println(+ x[i]);
}
}
}

5.ஒரு எண்ணின் Factorial மதிப்பு காண...


import java.io.*;
public class sum
{
public static void main(String[] args)throws IOException
{
DataInputStream in= new DataInputStream(System.in);
int n,i,fac=1;
System.out.Println(“Enter the number”);
n=Integer.parseInt(in.readLine());
for(i=1;i<=n;i++)
{
fac=fac*i;
}
System.out.Println(“The factorial of given Number is :” + fac);
}
}

6.Fibonacci தொடர்வரிசை காண...

import java.io.*;
public class sum
{
public static void main(String[] args)throws IOException
{
DataInputStream in= new DataInputStream(System.in);
int f1=1,f2=1,f3,i,n;
System.out.Println(“Enter the number”);
n=Integer.parseInt(in.readLine());
for(i=2;i<n;i++)
{
System.out.Println(+f1 , +f2);
f3=f1+f2;
f1=f2;
f2=f3;
}
}
}

விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டத்தை எவ்வாறு உங்கள் கணணியில் நிறுவுதல்

கணணி உலகத்தில் புதிதாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டத்தை எவ்வாறு உங்கள் கணணியில் நிறுவுதல் என்று பார்ப்போம். .
விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டம் நிறுவுதல் செயல்முறைகள்
முதலில் உங்கள் கணணியில் விண்டோஸ் 8 நிறுவுததற்கு தேவையான இறுவட்டு (DVD disk) அல்லதுVirtual machine, அல்லது ISO கோப்பில் இருந்து கணணியை பூட் செய்து கொள்ளுங்கள்.
பின்னர் விண்டோஸ் 8 Setup கோப்புக்களை லோட் (Load) செய்வதற்காக சில வினாடிகள் எடுத்துக்கொள்ளும்.

அவசியமான கோப்புக்களை நகல் எடுத்த பின்னர், நீங்கள் பயன்படுத்த வேண்டிய மொழி (Language), நேரம் (Time), Keyboard input settings என்ற தகவலை கேட்டு Setup ஆரம்பிக்கும்.

நிறுவதல் செய்முறையை ஆரம்பிப்பதற்கு “Install Now ” என்ற பொத்தனை அழுத்தி தொடருங்கள்.

அடுத்து தோன்றும் திரையில் நீங்கள் நிறுவும் விண்டோஸ் 8 யை அக்டிவேட் (Activate) செய்யத்தேவையான Product Key யை குறிக்க சொல்லிக்கேட்கும். விண்டோஸ் 8 க்கான Product Key யை நீங்கள் வாங்கிய இறுவட்டில் காணலாம். சரியான Product Key யை குறித்த பின்னர் “Next ” யை கிளிக் செய்து தொடருங்கள். நிறுவுதல் முடிந்த பிற்பாடு அதே Product Key யை கொண்டு விண்டோஸ் 8 அக்டிவேட் பண்ணவேண்டும்.

அடுத்து விண்டோஸ் 8 க்கான licence ஒப்பந்தத்துக்கான திரை விரியும், அதை தெளிவாக வாசித்து “I accept the licence and terms ” என்ற பெட்டியை கிளிக் செய்து தொடருங்கள்.

அடுத்து தோன்றும் திரையில் “Custom install windows only (Advanced )” என்ற தெரிவை தெரிவு செய்யுங்கள்.

அதை தொடர்ந்து குறித்த விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டத்தை எங்கே நிறுவ போகின்றீர்கள் என்பதை தெரிவு செய்யுங்கள். நீங்கள் விரும்பும் ஒரு பகிர்வை (Partition) தெரிவு செய்து “Next ” யை அழுத்துங்கள். நீங்கள் நிறுவும் விண்டோஸ் 8 யை Virtual machine லிலோ அல்லது புதிய கணணியிலோ நிறுவும் பொழுது முதலில் பகிர்வை (Partition) உருவாக்குதல் வேண்டும். அதற்கு கிழே காணப்படும் “Drive Options” என்பதை தெரிவு செய்க.

“New ” பொத்தானை அழுத்துவதன் மூலம் புதிய பகிர்வை (Partition) உருவாக்கி கொள்ளலாம்.

பகிர்வின் (Partition) உடைய அளவை குறிப்பிட்டு “New ” பொத்தானை அழுத்துங்கள். விண்டோஸ் 8 யை நிறுவதற்கு கிட்டத்தட்ட 10 GB வரை குறித்த நிலைவட்டில் (Hard Disk ) இட வசதி தேவைப்படும். எனது வேண்டுகோல் தயவுசெய்து குறைந்தபட்சம் 20-25 GB வரை விண்டோஸ் 8 யை நிறுவ நிலைவட்டில் ஒதுக்குங்கள்.

அதை தொடர்ந்து தோன்றும் திரையில், விண்டோஸ் 8 பூட் செய்வதற்கு தேவையாக மேலதிகமாக உருவாக்கிய பகிர்வை (Partition) உறுதிபடுத்த OK கொடுத்து தொடருங்கள்.

விண்டோஸ் 8 நிறுவதற்கு சரியான பகிர்வை (Partition) தெரிவு செயுங்கள்.
குறிப்பு : இந்த படிமுறையிலேயே விண்டோஸ் 8 நிறுவும் பகிர்வினை formatசெய்துகொண்டு, “Next ” யை அழுத்துங்கள்.

இறுதியாக விண்டோஸ் 8 நிறுவுதல் ஆரம்பிக்கும். ஒபெரடிங் சிஸ்டத்தை நிறுவுவதற்கும், அவசியமான கோப்புக்களை நகல் எடுத்துக்கொள்ள setup சில வினாடிகள் எடுத்துக்கொள்ளும்.

நிறுவுதல் செயற்பாடு முடிந்த பின்னர், விண்டோஸ் 8 Setup தானாக கணணியைreboot செய்யும். பின்னர் முதல் login னுக்கு தேவையான செயற்பாடுகள் ஆரம்பிப்பதை அவதானிப்பீர்கள்.
விண்டோஸ் 8 நிறுவுதலை தனிப்பயனாக்குதல் (Personalizing)
Reboot செயற்பாடு முடிந்த பிற்பாடு, விண்டோஸ் 8 தயாராகுவற்க்கு சில வினாடிகள் எடுத்துக்கொள்ளும்.

அதை தொடர்ந்து விண்டோஸ் 8 நிறுவுதலை தனிப்பயனாக்குதல் (Personalizing) அமைக்க முதலில் குறித்த கணணிக்கு பெயர் குறிக்க கேட்கும். அதை தொடர்ந்து “Next” யை கிளிக் செய்யுங்கள்.

நீங்கள் விண்டோஸ் 8 யை Wireless Network card உடன் மடிக்கணணியிலோ அல்லது சாதனங்களிலோ நிறுவும் பொழுது Wireless Network கை இணைப்பதற்கு Password குறிக்க கேட்கும். உங்களது கணணிக்கு வடக்கயிறு (கேபிள் ) மூலம் நெட்வொர்க் இணைப்பது என்றால் இந்த படிமுறையை செய்ய வேண்டியது இல்லை. தொடர்வதற்கு “Customize” யை கிளிக் செய்யுங்கள்.

அதை தொடர்ந்து, கோப்புக்களை பகிர்ந்து கொள்ள விரும்பினால் குறித்த “Yes, Turn on files sharing and connect to device ” என்ற படிவத்தை தெரிவு செய்து தொடருங்கள்.

அடுத்து செக்யூரிட்டி அம்சங்களை பற்றி கேட்கும், மாற்றங்கள் தேவையான பட்சத்தில் மாற்றங்கள் செய்து”Next” யை கிளிக் செய்து தொடருங்கள்.

அடுத்து தோன்றும் திரையில் நீங்கள் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு வித்தியாசமான் தகவல் அனுப்ப விரும்புகின்றீர்களா என்று தெரிவித்து, “Next” யை கிளிக் செய்து தொடருங்கள்.

அடுத்து troubleshot படிமுறை பற்றி கேட்கும், உங்களுக்கு தேவையான மாற்றங்கள் செய்து “Next” யை கிளிக் செய்து தொடருங்கள்.

பின்னர் “Sign into your PC ” என்ற திரை தோன்றும், விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டத்துக்கூரிய முழு அனுபவத்தையும் பெற விரும்பினால் Microsoft Account (Windows Live ID) யை பயன்படுத்தி கணனியினுள் நுழைந்து கொள்ளுங்கள் அதோடு “Next” யை கிளிக் செய்து தொடருங்கள்.
குறிப்பு : Microsoft Account (Windows Live ID) யை பயன்படுத்த விருப்பம் இல்லை என்றால் “Sign in without Microsoft Account ” என்ற படிவத்தை தெரிவு செய்து தொடருங்கள்.

பின்னர் தோன்றும் திரையில் Microsoft Account Password யை குறித்து “Next” யை கிளிக் செய்யுங்கள்.

பின்னர் தோன்றும் திரையில், ஒரு வேளை நீங்கள் பயன்படுத்தும் Microsoft Account Password யை மறந்தால் மீள password யை பெற்றுக்கொள்ள தேவையான வேறு ஒரு ஈமெயில் அட்ரஸ் அதோடு கைத்தொலைபேசி நம்பர் தகவல் கொடுக்க கேட்கும். அதோடு “Next” யை கிளிக் செய்யுங்கள்.

அதை தொடர்ந்து விண்டோஸ் 8 உங்கள் கணணியையும் எல்லா அமைப்புக்களையும் தயார்செய்து கொள்ள சில வினாடிகள் எடுத்துக்கொள்ளும்.

அடுத்து விண்டோஸ் 8 புதிய charms bar பயபடுத்துவதற்க்கான சில டுடோரியல்ஸ் மூலம் விளக்கும்.

அதை தொடர்ந்து கிழே காணப்படும் புகைப்படத்தில் காட்டப்பட்டவாறு செயல்முறை ஆரம்பிக்கும்.

எல்லாம் சரியாக முடிந்த பின்னர், விண்டோஸ் 8 க்கான Start Screen காட்டப்படும்

இறுதியாக நீங்கள் விரும்பினால் WIN + D அழுத்தியோ அல்லது Desktop title லில் கிளிக் செய்தோ Classic View யை பெற்றுக்கொள்ள முடியும்.

முடிந்தது, இனி விண்டோஸ் 8 க்கான முழு அனுபவத்தையும் பெறுங்கள்.

3/05/2013

மைக்ரோசாப்ட் வேர்டு 2007

மைக்ரோசாப்ட் வேர்டு 2007 பயன்பாட்டில் ஒரு சில அத்தியாவசியமான கட்டளைகளை, ரிப்பன் மெனுவில் எந்த டேபில் உள்ளது என்று தேடி எடுத்து பயன்படுத்துவது நமது அவசரத்திற்கு  ஆகாத விஷயம். இதனை எளிதாக்க, மைக்ரோசாப்ட் வேர்டு 2007 தொகுப்பில் தரப்பட்டுள்ள Quick access toolbar எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.


வேர்டில் ஆஃபீஸ் பட்டனுக்கு அடுத்துள்ள மெனுவையே Quick Access Toolbar என்றழைக்கிறோம். இந்த டூல்பாரில் உள்ள சிறிய கீழ்நோக்கிய அம்பு குறியை (Customize Quick Access Toolbar) க்ளிக் செய்து, 
திறக்கும் லிஸ்ட் பாக்ஸில், New, Open, Print Preview போன்ற வசதிகளை இந்த Quick Access Toolbar -இல் இணைத்துக் கொள்ளலாம்.


மேலும் இந்த லிஸ்டில் தரப்படாத கட்டளைகளை இந்த டூல்பாரில் இணைக்க, இந்த லிஸ்ட் பாக்ஸில் கீழே உள்ள, More Commands வசதியை க்ளிக் செய்யுங்கள்.


அடுத்து திறக்கும் Word Options திரையில், Choose Commands From க்கு கீழே உள்ள லிஸ்ட் பாக்ஸில், எந்த ரிப்பன் டேபில் உள்ள கட்டளைகளை இணைக்க வேண்டுமோ, அந்த ரிப்பன் டேபின் பெயரில் க்ளிக் செய்யுங்கள்.


அடுத்து அந்த குறிப்பிட்ட ரிப்பன் டேபில் உள்ள கட்டளைகள் அனைத்தும் பட்டியலிடப்படும். அவற்றில் உங்களுக்கு தேவையான, அடிக்கடி உபயோகப்படுத்தும் கட்டளைகளை ஒவ்வொன்றாக தேர்வு செய்து, Add பொத்தானை அழுத்துங்கள்.

இப்படி தேவையான அனைத்து கட்டளைகளையும் இணைத்த பிறகு, கீழே உள்ள OK பொத்தானை அழுத்துங்கள். 





இந்த வழிமுறையை பின்பற்றி தேவையான கட்டளைகள் அனைத்தையும் இந்த Quick Access Toolbar இல் இணைத்து பயன்பெறலாம்.

மவுஸ் பயன்படுத்திச் சிறப்பான வேலை

எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில் உள்ள அனைத்து புரோகிராம்களின் இயக்கத்திலும் மவுஸ் பயன்படுத்திச் சிறப்பான வேலைகளை மேற்கொள்ளலாம். மவுஸினால் மட்டுமே சில வேலைகளை எளிதாகச் செய்ய முடியும் என்ற அளவிற்கு பல பார்மட்டிங் பணிகள், டெக்ஸ்ட் எடிட்டிங் வேலைகள் நிறைய உண்டு.

இங்கு எம்.எஸ். வேர்ட் தொகுப்பில் சில மவுஸ் பயன்பாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இவை பொதுவாகக் கீ போர்டின் உதவியுடன் பல நிலைகள் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகளாகவும் மவுஸ் மூலம் சில கிளிக்குகளில் மேற்கொள்ளக் கூடிய வேலையாகவும் இருப்பதனைக் காணலாம்.

வேர்ட் தொகுப்பில் உருவாக்கப்பட்ட டாகுமெண்ட் முழுவதையும் ஒரே மவுஸ் கிளிக்கில் தேர்ந்தெடுக்கலாம். இதற்கு மவுஸ் பாய்ண்ட்டரை இடது பக்கம் உள்ள மார்ஜின் ஓரத்திற்குக் கொண்டு செல்லவும்.

அது வலது பக்கம் சற்று சாய்ந்த மேல் நோக்கிய அம்புக் குறியாக மாறும். உடன் கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொள்ளுங்கள். பின் இடது மவுஸ் பட்டனை அழுத்துங்கள். டாகுமெண்ட் முழுவதும், அது எத்தனை பக்கங்களாக இருந்தாலும் உடனே செலக்ட் செய்யப்படும்.


இதனை இன்னொரு வழியிலும் நிறைவேற்றலாம். அம்புக் குறியை இடது ஓரத்திற்குக் கொண்டு சென்றவுடன் மூன்று முறை இடது மவுஸ் கிளிக் செய்திடவும். டாகுமெண்ட் முழுவதும் செலக்ட் ஆகி நிற்கும்.


வேர்டில் சில வகை டேட்டாக்களை அமைக்கையில் அவற்றில் சிலவற்றை மட்டும் நெட்டு வாக்கில் தேர்ந்தெடுக்க வேண்டியதிருக்கும். எடுத்துக் காட்டாக ஐந்து வரிகளில் எட்டாவது கேரக்டரிலிருந்து பன்னிரெண்டாம் கேரக்டர் வரை தேர்ந்தெடுக்க வேண்டியதிருக்கும்.


மற்றவை எல்லாம் நாம் மேற்கொள்ள இருக்கும் வேலைக்குத் தேவையற்றவையாக இருக்கும். இதனைத் தேர்ந்தெடுக்க கீ போர்டு அல்லது மவுஸ் மூலம் மேற்கொள்ள வேர்ட் தொகுப்பில் வசதி உள்ளது.


1. எந்த டேட்டா தொகுப்பினை (Block) ங்கள் தனியே எடுத்துக் கொள்ள முயற்சிக்கிறீர்களோ அந்தத் தொகுப்பின் இடது மூலைக்கு மவுஸின் கர்சரைக் கொண்டு செல்லவும்.


2. உடன் Ctrl+Shft+F8 என்ற கீகளை அழுத்தவும்.கீழாக ஸ்டேட்டஸ் பாரில் COL என்ற எழுத்துக்கள் காட்டப்படும்.


இனி மவுஸ் கர்சரை இழுத்து எந்த பிளாக்கினை நீங்கள் தனியே செலக்ட் செய்திட வேண்டுமோ அதனை அமைக்கலாம். நெட்டு வாக்கில் டெக்ஸ்ட் செலக்ட் செய்யப்படும். இவ்வாறு செலக்ட் செய்யப் பட்ட டெக்ஸ்ட்டை வழக்கமாக செலக்ட் செய்யப்பட்ட டெக்ஸ்ட் டினை எப்படியெல்லாம் மாற்றுகிறோமோ அதே போல மாற்றலாம்.

டெலீட் கீ அழுத்தினால் அந்த பிளாக் டெக்ஸ்ட் மட்டும் அழிந்து போகும். மேலே சொன்ன வழிக்கு மாற்று வழி ஒன்றும் உள்ளது. ஆல்ட் கீயினை அழுத்திக் கொண்டு மவுஸ் கர்சரை பிளாக் தொடங்கும் இடத்தில் வைத்து தேவையான டெக்ஸ்ட்டை நெட்டு வாக்கில் தேர்ந்தெடுக்கலாம்.

மவுஸ் ஒரு சொல்லைத் தேர்ந்தெடுக்கவும், தொடர்ந்து பல சொற்களைத் தேர்ந்தெடுக்கவும் உதவுகிறது. எந்த சொல்லைத் தேர்ந்தெடுக்க வேண்டுமோ அந்த சொல்லில் கர்சரைக் கொண்டு சென்று பின் டபுள் கிளிக் செய்தால் அந்த சொல் தேர்ந்தெடுக்கப்படும்.

தொடர்ந்து இன்னும் கூடுதலாகச் சொற்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால் டபுள் கிளிக் செய்தவுடன் அப்படியே தொடர்ந்து மவுஸை இழுத்தால் டெக்ஸ்ட் காப்பி ஆகும்.


ஒரு டெக்ஸ்ட் பகுதியை மவுஸ் கர்சர் கொண்டு இழுத்துச் சென்று எப்படி தேர்ந்தெடுப்பது என்று உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும். டாகுமெண்ட்டில் டெக்ஸ்ட் தேர்ந்தெடுக்க வேண்டிய இடத்தில் கர்சரை வைத்து இடது மவுஸ் கிளிக் செய்து அப்படியே இழுத்தால் டெக்ஸ்ட் செலக்ட் ஆகும்.


இதைக் காட்டிலும் வேகமாக டெக்ஸ்ட் செலக்ட் ஆகும் வழி ஒன்று உள்ளது. எந்த இடத்திலிருந்து டெக்ஸ்ட் செலக்ஷன் ஆக வேண்டுமோ அந்த இடத்தில் கர்சரைக் கொண்டு சென்று அமைக்கவும். அதன்பின் எதனையும் அழுத்தாமல் கர்சரை நகர்த்தவும்.

எங்கு இந்த செலக்ஷன் முடிய வேண்டுமோ அங்கு சென்று கர்சரை மீண்டும் அமைக்கவும். பின் ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு மவுஸின் இடது பட்டனில் கிளிக் செய்திடவும். டெக்ஸ்ட் செலக்ட் ஆகிவிடும்.


டாகுமெண்ட் தயார் செய்து பின் எடிட் செய்கையில் குறிப்பிட்ட சில சொற்கள் அல்லது வாக்கியங்கள் அதன் இடத்தில் இல்லாமல் இன்னொரு இடத்தில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுவோம்.

இதற்கு அந்த டெக்ஸ்ட்டைத் தேர்ந்தெடுத்து பின் கட் (இtணூடூ+ஙீ) செய்து அதன்பின் எந்த இடத்தில் அமைய வேண்டுமோ அந்த இடத்தில் கர்சரை அமைத்து பேஸ்ட் (Ctrl +V) செய்திடலாம். இந்த வேலையினை வேறு எளிதான வழியில் மவுஸ் கர்சரைக் கொண்டு செய்திடலாம்.

முதலில் எந்த சொற்களை எடுத்து அமைக்க வேண்டுமோ அந்த சொற்களை ஹைலைட் செய்திடவும். பின் இவ்வாறு ஹைலைட் செய்து செலக்ட் செய்த டெக்ஸ்ட்டில் மவுஸ் கர்சரைக் கொண்டு சென்று மவுஸ் பட்டனைக் கிளிக் செய்தவாறு பிடித்துக் கொள்ளவும்.

இப்போது புள்ளிகளால் ஆன ஒரு கோடு தெரியும். இதனை இப்போது அப்படியே மவுஸ் கர்சரால் இழுத்துச் சென்று எந்த இடத்தில் செருக வேண்டுமோ அந்த இடத்தில் சென்று மவுஸ் பட்டனை விட்டுவிடவும். ஹைலைட் செய்யப்பட்ட டெக்ஸ்ட் நீங்கள் இலக்கு வைத்த இடத்தில் செருகப்பட்டு இடம் பிடித்திருக்கும்.


டாகுமெண்ட் வழக்கமாக 100% அளவில் திரையில் காட்டப்படும். சில காரணங்களுக்காக அதனைச் சுருக்கிப் பார்க்க விரும்புவோம். அப்போது மேலே மெனு பாரில் உள்ள கட்டத்தில் 100% என்பதனை 75% என மாற்றலாம். பெரிதாகத் தெரிய, ஸூம் இன் செய்திட வேண்டும் என்றால் இதனை 100க்கு மேலாக அதிகப்படுத்தலாம்.

இந்த ஸூம் செய்வதற்கு மவுஸ் மூலமாக இன்னொரு வழியும் உள்ளது. கர்சரை டாகுமெண்ட்டில் வைத்துக் கொண்டு கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு அதில் உள்ள சிறிய வீலை முன்னே பின்னே நகர்த்தவும். ஒரு சிறிய நகர்த்தலுக்கு அது நகர்த்தப்படும் திசையைப் பொறுத்து 10% அதிகமாகும் அல்லது குறையும்.


டேப்ஸ் டயலாக் பாக்ஸ் வேண்டுமா? மேலே உள்ள ரூலர் அருகே கர்சரைக் கொண்டு சென்று ரூலரின் கீழாக கர்சரை அமைத்து டபுள் கிளிக் செய்தால் டேப் டயலாக் பாக்ஸ் கிடைக்கும். அப்போது ஒரு டேப் மார்க் ஒன்று உண்டாகும். இதனை நீக்க வேண்டும் என எண்ணினால் டேப் டயலாக் பாக்ஸில் அதனைச் செய்யலாம்; அல்லது அதன் மீது கர்சரை வைத்து மேலே இழுத்துச் சென்று விடலாம்.


உடனே இடது பக்கம் ரூலரில் இது போல செய்தால் என்ன நடக்கும் என்று பார்க்க ஆசையாய் இருக்குமே! இடது பக்கம் ரூலரில் மேலே சுட்டிக் காட்டியது போல் செய்தால் பேஜ் செட் அப் பாக்ஸ் கிடைக்கும்.


மேலே தரப்பட்ட எதனையும் என் மவுஸ் மூலம் செய்ய முடியவில்லையே என்று யாரும் கவலைப் பட வேண்டாம். அப்படிப்பட்டவர்களின் கம்ப்யூட்டரில் மவுஸின் இந்த செயல்பாடு செயல்படுத்தப்பட்டிருக்காது.

மவுஸ் மூலம் உங்கள் டெக்ஸ்ட்டை நகர்த்துவது,செலக்ட் செய்வது போன்ற செயல்களுக்கு அதனை அவ்வாறு இயக்கும் வகையில் செட் செய்திட வேண்டும். இதற்கு Tools மெனுவிலிருந்து Options தேர்ந்தெடுக்கவும். வேர்ட் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸினைத் திறக்கும்.

பின் Edit டேப்பில் கிளிக் செய்திடவும்.பின் Drag and Drop Text Editing என்று இருக்கும் இடத்தில் உள்ள சிறிய கட்டத்தில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். பின் இந்த டயலாக் பாக்ஸினை மூட ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி மவுஸ் டெக்ஸ்ட்டுடன் எளிதாக இயங்கும்.


வேர்ட் டிப்ஸ்


* சில வேளைகளில் நாம் உருவாக்கும் வேர்ட் டாகுமெண்ட்டில் ஏதேனும் ஒரு முழு பாராவை டாகுமெண்ட்டின் வேறு இடத்தில் அமைக்க விரும்புவோம். இதற்கு காப்பி அல்லது கட் மற்றும் பேஸ்ட் கட்டளை எல்லாம் வேண்டாம்.

எந்த பாராவினை நகர்த்த வேண்டுமோ அதனுள்ளாக கர்சரைக் கொண்டு சென்று வைக்கவும். பின் ஷிப்ட் மற்றும் ஆல்ட் கீகளை அழுத்தியவாறு அப் ஆரோ அல்லது டவுண் ஆரோவினை அழுத்தினால் பாரா மேலே கீழே முழுதாகச் செல்லும்.


*வேர்ட் தொகுப்பில் சொற்கள் எங்குள்ளது என்று கண்டறிய பைண்ட் அண்ட் ரீபிளேஸ் (Find and Replace) கட்டளை நமக்கு நன்றாக உதவுகிறது. சொல் மட்டுமின்றி எந்த கேரக்டரையும் எங்குள்ளது என்று மிக எளிமையான வழியில் தேடி அதன் இடத்தில் இன்னொன்றை அமைக்கவும் வசதி தருகிறது.

ஆனால் இதில் என்ன பிரச்னை என்றால் இந்த பைண்ட் அன்ட் ரீபிளேஸ் டயலாக் பாக்ஸ் டாகுமெண்ட் மேலாக அமர்ந்து கொண்டு நம்மை டாகுமெண்ட்டை முழுமையாகப் பார்க்க விடாமல் தடுக்கிறது. இவ்வாறு டயலாக் பாக்ஸ் நம் டாகுமெண்ட்டை மறைப்பதனை நீக்க ஒரு சுற்று வழி உள்ளது.

1. முதலில் வழக்கம் போல பைண்ட் அண்ட் ரீ பிளேஸ் டயலாக் பாக்ஸை கண்ட்ரோல்+எப் (Ctrl+F) அழுத்தியோ அல்லது Edit மெனுவில் Find தேர்ந்தெடுத்தோ பெறவும். கண்டறிய வேண்டிய சொல்லை அமைத்து என்டர் தட்டினால் அந்த சொல் இருக்கும் முதல் இடத்தினை டாகுமெண்ட் காட்டும்.

2. இப்போது சொல் இருக்கும் இடத்தைக் காட்டிய பிறகும் அடுத்த இடங்களைக் காட்ட டயலாக் பாக்ஸ் டாகுமெண்ட்டை மறைத்தபடி நிற்கும். இப்போது கேன்சல் பட்டன் அழுத்தி அல்லது எஸ்கேப் பட்டனை அழுத்தி டயலாக் பாக்ஸினை மறையச் செய்திடவும்.

நீங்கள் தேடிய சொல் உள்ள அடுத்த அடுத்த இடத்தினை அறிய ஜஸ்ட் Shft+F4 அழுத்தவும். டயலாக் பாக்ஸ் இல்லாமலேயே நீங்கள் காண விரும்பும் சொல் எங்கிருக்கிறது என்று காட்டப்படும். Find Next அழுத்தினால் என்ன நடக்குமோ அதுவே நடத்தப்படும்.

* வேர்டில் ஒரு மெனுவினைக் கிளிக் செய்து திறந்துவிட்டீர்கள். பின்னர் அது வேண்டாம் என்று எண்ணி அதனைக் கேன்சல் செய்து மீண்டும் டாகுமெண்ட்டில் கர்சர் இருந்த இடத்திற்கு வர எண்ணுகிறீர்கள். என்ன செய்யலாம்? இதற்கு மூன்று வழிகள் உள்ளன.


1. எஸ்கேப் கீயை இரண்டு முறை தட்டவும். முதல் முறையில் மெனு மறையும். ஆனால் கர்சர், மெனு மீதாக இருக்கும். இரண்டாவது முறை தட்டுகையில் கர்சர் டாகுமெண்ட்டில் விட்ட இடத்தில் நிற்கும்.


2.மெனுமீது மீண்டும் ஒரு முறை கிளிக் செய்தால் மெனு மறையும்.


3. மெனுவிற்கு வெளியே டாகுமெண்ட்டில் எங்கு கிளிக் செய்தாலும் மெனு உடனே மறைந்துவிடும்.


* அண்மையில் ஒரு வாசகர் தான் வேர்ட் டாகுமெண்ட்களில் பெயர்களை டைப் செய்து டேபிள் தயாரிப்பதாகவும், அதனை சார்ட் செய்திட அவற்றை அப்படியே காப்பி செய்து எக்ஸெல் கொண்டு சென்று,

பின் வரிசையாக்கிய பின் மீண்டும் வேர்டில் ஒட்டுவதாகவும் எழுதி உள்ளார். இந்த பழக்கம் தேவையே இல்லை. வேர்ட் தொகுப்பிலேயே இந்த தகவல் வரிசைப்படுத்தும் வசதி உள்ளது.


வேர்ட் டேபிளில் அமைந்துள்ளவற்றில் எந்த கட்டத்தில் உள்ள தகவல்களை வரிசைப்படி அமைக்க வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பின் டேபிள் மெனுவில் சார்ட் என்று உள்ளதைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்தால் தகவல்கள் வரிசைப்படுத்தப்படும். டெக்ஸ்ட், எண்கள் மற்றும் நாள்களை இதன் மூலம் வரிசைப்படுத்தலாம்.


வேர்ட் டாகுமெண்ட்டில் சொற்களை மற்றவற்றிலிருந்து வேறுபடுத்திக் காட்ட அவற்றிற்கு அடிக்கோடு இடப்படும் வசதி தரப்பட்டுள்ளது. இதில் இரண்டு வகை உள்ளது.

தேர்ந்தெடுக்கப்படும் அனைத்து சொற்களின் அடியிலும் முழுமையான கோடு வேண்டும் என்றால் கண்ட்ரோல் + யு (Ctrl + U) கீகளை அழுத்த வேண்டும். சொற்களுக்கு இடையே உள்ள இடைவெளியிலும் கோடு வரையப்படும்.

ஆனால் சொற்களின் அடியில் மட்டும் கோடு வேண்டும் என விரும்புபவர்கள் வேறு கீகளைக் கையாள வேண்டும். அவை (Ctrl + Shft + W) கண்ட்ரோல்+ஷிப்ட்+டபிள்யு. வேர்ட் டாகுமெண்ட் ஒன்றைத் தயாரித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

உங்கள் கர்சரை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் திரையின் தொடக்கத்திற்குக் கொண்டு செல்ல எண்ணுகிறீர்கள். அதாவது திரையில் தெரியும் டெக்ஸ்ட் ஸ்கிரீன் நகரக் கூடாது. தெரிகின்ற வாக்கியங்களில் முதல் வாக்கியத்திற்குச் செல்ல வேண்டும்.

என்ன செய்திடலாம்? Home அழுத்தினால் வரியின் தொடக்கத் திற்கு மட்டுமே செல்லும். Ctrl + Home அழுத்தினால் அந்த ஆவணத்தின் தொடக்கத்திற்குச் செல்லும். திரையில் தெரியும் முதல் வாக்கியத்தின் தொடக்கத்திற்குச் செல்ல Alt + Ctrl + Page Up அழுத்திப் பாருங்கள்.

அதே போல் திரையில் தெரியும் பக்கத்தின் கீழ்ப்பாகத்திற்குச் செல்ல Alt + Ctrl + Page Down அழுத்தவும். வேர்ட் டாகுமெண்ட்டில் வேகமாக நினைத்த இடத்திற்கு நீந்திச் செல்ல விரல் நுனியில் உள்ள சூட்சுமத்தைத் தெரிந்து கொண்டீர்களா!

Command Prompt கட்டளைகளை

உங்கள் கணணியின் விண்டோஸ் XP-யில் Command Prompt கட்டளைகளை நீங்கள் நேரடியாக Start --> Run மூலம் கட்டளைகளை கொடுக்கலாம் என்று உங்களுக்கு தெரிந்திருக்கும்.

உதாரணமாக, Start பட்டனை அழுத்தி துவக்க மெனுவை வரவழையுங்கள் அதன் வலது புறத்திலுள்ள Run-ஐ தேர்வு செய்யுங்கள், அதில் ஒரு சிறிய பெட்டி திறக்கும் அதில் open என்ற பகுதியில், calc என்று தட்டச்சு செய்து சோதனை செய்யுங்கள், உங்கள் திரையில் Calculator தோன்றும்.

இது போன்று Run மூலம் நான் cmd, msconfig, ipconfig, iexplore, notepad, calc போன்ற 5-6 கட்டளைகளை தான் அடிக்கடி உபயோகிப்பேன், இதில் மொத்தம் 100-க்கு மேல் கட்டளைகள் இருப்பதாக அறிந்தவுடன் அவை உங்களுக்கும் உபயோகமாக இருக்கட்டும் என்று இங்கே கொடுக்கிறேன்.

Accessibility Controls
access.cpl

Add Hardware Wizard
hdwwiz.cpl

Add/Remove Programs
appwiz.cpl

Administrative Tools
control admintools

Automatic Updates
wuaucpl.cpl

Bluetooth Transfer Wizard
fsquirt

Calculator
calc

Certificate Manager
certmgr.msc

Character Map
charmap

Check Disk Utility
chkdsk

Clipboard Viewer
clipbrd

Command Prompt
cmd

Component Services
dcomcnfg

Computer Management
compmgmt.msc

Date and Time Properties
timedate.cpl

DDE Shares
ddeshare

Device Manager
devmgmt.msc

Direct X Control Panel (If Installed)*
directx.cpl

Direct X Troubleshooter
dxdiag

Disk Cleanup Utility
cleanmgr

Disk Defragment
dfrg.msc

Disk Management
diskmgmt.msc

Disk Partition Manager
diskpart

Display Properties
control desktop

Display Properties
desk.cpl

Display Properties (w/Appearance Tab Preselected)
control color

Dr. Watson System Troubleshooting Utility
drwtsn32

Driver Verifier Utility
verifier

Event Viewer
eventvwr.msc

File Signature Verification Tool
sigverif

Findfast
findfast.cpl

Folders Properties
control folders

Fonts
control fonts

Fonts Folder
fonts

Free Cell Card Game
freecell

Game Controllers
joy.cpl

Group Policy Editor (XP Prof)
gpedit.msc

Hearts Card Game
mshearts

Iexpress Wizard
iexpress

Indexing Service
ciadv.msc

Internet Properties
inetcpl.cpl

Internet Explorer
iexplore

IP Configuration (Display Connection Configuration)
ipconfig /all

IP Configuration (Display DNS Cache Contents)
ipconfig /displaydns

IP Configuration (Delete DNS Cache Contents)
ipconfig /flushdns

IP Configuration (Release All Connections)
ipconfig /release

IP Configuration (Renew All Connections)
ipconfig /renew

IP Configuration (Refreshes DHCP & Re-Registers DNS)
ipconfig /registerdns

IP Configuration (Display DHCP Class ID)
ipconfig /showclassid

IP Configuration (Modifies DHCP Class ID)
ipconfig /setclassid

Java Control Panel (If Installed)
jpicpl32.cpl

Java Control Panel (If Installed)
javaws

Keyboard Properties
control keyboard

Local Security Settings
secpol.msc

Local Users and Groups
lusrmgr.msc

Logs You Out Of Windows
logoff

Mcft Chat
winchat

Minesweeper Game
winmine

Mouse Properties
control mouse

Mouse Properties
main.cpl

Network Connections
control netconnections

Network Connections
ncpa.cpl

Network Setup Wizard
netsetup.cpl

Notepad
notepad

Nview Desktop Manager (If Installed)
nvtuicpl.cpl

Object Packager
packager

ODBC Data Source Administrator
odbccp32.cpl

On Screen Keyboard
osk

Opens AC3 Filter (If Installed)
ac3filter.cpl

Password Properties
password.cpl

Performance Monitor
perfmon.msc

Performance Monitor
perfmon

Phone and Modem Options
telephon.cpl

Power Configuration
powercfg.cpl

Printers and Faxes
control printers

Printers Folder
printers

Private Character Editor
eudcedit

Quicktime (If Installed)
QuickTime.cpl

Regional Settings
intl.cpl

Registry Editor
regedit

Registry Editor
regedit32

Remote Desktop
mstsc

Removable Storage
ntmsmgr.msc

Removable Storage Operator Requests
ntmsoprq.msc

Resultant Set of Policy (XP Prof)
rsop.msc

Scanners and Cameras
sticpl.cpl

Scheduled Tasks
control schedtasks

Security Center
wscui.cpl

Services
services.msc

Shared Folders
fsmgmt.msc

Shuts Down Windows
shutdown

Sounds and Audio
mmsys.cpl

Spider Solitare Card Game
spider

SQL Client Configuration
cliconfg

System Configuration Editor
sysedit

System Configuration Utility
msconfig

System File Checker Utility (Scan Immediately)
sfc /scannow

System File Checker Utility (Scan Once At Next Boot)
sfc /scanonce

System File Checker Utility (Scan On Every Boot)
sfc /scanboot

System File Checker Utility (Return to Default Setting)
sfc /revert

System File Checker Utility (Purge File Cache)
sfc /purgecache

System File Checker Utility (Set Cache Size to size x)
sfc /cachesize=x

System Properties
sysdm.cpl

Task Manager
taskmgr

Telnet Client
telnet

User Account Management
nusrmgr.cpl

Utility Manager
utilman

Windows Firewall
firewall.cpl

Windows Magnifier
magnify

Windows Management Infrastructure
wmimgmt.msc

Windows System Security Tool
syskey

Windows Update Launches
wupdmgr

Windows XP Tour Wizard
tourstart

Wordpad
write

3/03/2013

உங்கள் ஆன்ட்ராய்ட் மொபைல்களுக்கான சிறந்த வெப் பிரௌசர்கள்..!

நண்பர்களுக்கு வணக்கம். இன்று பெரும்பாலும் இளைஞர்கள் பயன்படுத்தப்படும் மொபைல்கள் ஆன்ட்ராய்ட் மொபைல்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆன்ட்ராய்ட்.. ஆன்ட்ராய்ட் என்கிறார்களே.. அப்படி என்றால் என்ன என கேட்கிறீர்களா? ரொம்ப சுலபங்க.. இது மொபைல்களுக்கான ஒரு இயங்குதளம்.. அவ்வளவுதான். இதில் அடங்கியிருக்கும் வசதிகள் பல.. இந்த வகை மொபைகளில் பயன்படுத்தப்படும் வலை உலவிகளில் ஒரு சிலவற்றை இங்கு குறிப்பிட்டுள்ளேன். அவற்றிற்கான தரவிறக்க இணைப்புடன் இங்கு கொடுத்துள்ளேன். பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

ஆன்ட்ராய் மொபைலுக்கான UC Browser

இது உலக அளவில் அதிகமானோரால் பயன்படுத்தப் படும் மொபைல் பிரௌசர்.. இது ஆன்ட்ராய்ட் தளங்களில் சிறப்பாக இயங்குகிறது


இதைத் தரவிறக்க: https://play.google.com/store/apps/details?id=com.UCMobile.intl

ஆன்ட்ராய்ட் மொபைலுக்கான Firefox Browser

உங்கள் கணினிக்கான சிறந்த இணைய உலாவியை(Internet browser) வழங்கிவந்த Mozilla நிறுவனத்தின் Android cellphone ற்கான பதிப்பு இது. இது வேகமாக இயங்கக்கூடியது. பயன்படுத்த எளிதானது. இந்த உலவியின் செக்யூரிட்டி(Security) மற்றும் பிரைவசி சிறப்புகள் (Privacy Feature) சிறந்த இணையப்(Online)பாதுகாப்பை தருகிறது.
ஆன்டார்ய்ட் மொபைலுக்கான ஃபையர் ஃபாக்ஸ் பிரௌசர் தரவிறக்க: Download Firefox Browser 

ஆன்ட்ராய் மொபைலுக்கான Skyfire Web Browser

Flash Support செய்வதுதான் இந்த இணைய உலவியின் சிறப்பம்சம். வேகமாகவும் செயல்படக் கூடியது. இந்த பிரௌசரில் சிறந்த்தொரு இணைய அனுபவத்தை இந்த உலாவியில் பெற்று மகிழலாம். தரவிறக்கிப் பயன்படுத்திப் பாருங்கள்.

தரவிறக்கச் சுட்டி: Download Skyfire Web Browser

https://play.google.com/store/apps/details?id=com.skyfire.browser

ஆன்ட்ராய்ட் மொபைலுக்கான Dolphin Browser HD


Dolphin Mini, Dolphin, Dolphin HD என மூன்று பதிப்புகளில் வெளிவந்திருக்கும் இந்த இணைய உலவி உங்கள் ஆன்ட்ராய்ட் மொபைல்களுக்கு ஏற்றதாகும். இதன் வேகம் மற்ற இணைய உலவிகளுக்கு ஒரு சவால் விடுக்கும் அளவுக்கு உள்ளது. மிள எளிதாக கையாளும் விதமான கட்டமைப்பைக் கொண்டது.

இந்த Dolphin Browser HD Web Browser தரவிறக்க: Download Dolphin Browser HD Web Browser

https://play.google.com/store/apps/details?id=mobi.mgeek.TunnyBrowser

ஆன்ட்ராய் மொபைலுக்கான Opera Mini Browser

அனைத்து வகை மொபைல்களிலும் இயங்கும் இந்த Opera Mini Browser  தான் இப்போது ஆல் அன் ஆல் அழகுராஜா... உண்மையாகவே அனைத்துவிட மொபைல்களில் நன்றாக இயங்குகிறது. ஆன்ட்ராய்ட் மொபைலுக்கான Browser ஆகவும் சூப்பராக இயங்கக் கூடியது. பயன்படுத்த எளிதாக இருக்கும் இந்த Opera Mini Browser தரவிறக்கிப் பயனடையுங்கள்.

Opera Mini Browser தரவிறக்கச் சுட்டி: Download Opera Mini Browser