என்னுடைய ஆங்கில வலைப்பக்கத்திற்கு செல்ல இங்கே அழுத்தவும் இப்படிக்கு உங்கள் தோழன் ஷாஜஹான் சார்லஸ்

3/02/2013

விண்டோஸ் 7 ஷார்ட் கட் கீகள்

 இதுவரை வெளிவந்துள்ள மைக்ரோசாப்டின் தயாரிப்புகளிலேயே மிகவும் தரமானது விண்டோஸ் 7 தான் என்பதில் மாற்றுக்கருத்து எதுவும் இருக்க முடியாது.
விண்டோஸ் 7 ல் இல்லாத வசதிகளே இல்லை எனலாம். விண்டோஸ் 7ன் கீபோர்டு இயங்கமைவானது உங்களால் மவுஸ் இல்லாமலே அனைத்து பணிகளையும் செய்திடும் அளவுக்கு மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் சில குறுக்குவிசைகளை (shortcut keys) இந்த பதிவில் பார்ப்போம். இதில் பல குறுக்கு விசைகளை அனைவரும் அறிந்திருந்தாலும் சில மிகவும் புதியனவாக இருக்கும்.

1)Ctrl + Shift + Click- ஏதேனும் ஒரு புரோகிராமை அட்மினிஸ்ட்ரேட்டராக ஓப்பன் செய்ய:

நாம் பலநேரங்களில் சில புரோகிராம்களை அட்மினிஸ்ட்ரேட்டராக திறக்க வேண்டியிருக்கும் அதற்கு அந்த புரோகிராமின் மீது right click செய்து தேர்வு செய்வதற்கு Ctrl + Shiftஅழுத்திக்கொண்டு அந்த புரோகிராமின் மீது அழுத்தினால் அது தானாக அட்மினிஸ்ட்ரேட்டர்(Administrator) அதிகாரத்துடன் திறக்கும்.

2)Shift + Right-Click-ரைட் க்ளிக்கில் வரும் ஆப்ஷன்களை அதிகரிக்க செய்ய:

நீங்கள் ஷிப்ட் பட்டனை அழுத்திக்கொண்டு ஏதேனும் ஒரு கோப்பின் மீது ரைட் க்ளிக் செய்தால் தோன்றும் மெனுவானது சாதாரண மெனுவில் உள்ளதை விட சில அதிக ஆப்ஷன்களை கொண்டிருக்கும்.
இதில் சிகப்பு நிறத்தில் குறிக்கப்பட்டுள்ளவை புதிதாக வந்த ஆப்ஷன்கள்.

3)Windows-button + Number-டாஸ்க்பாரில் உள்ள புரோகிராம்களை திறக்க:

நாம் டாஸ்க்பாரில் உள்ள புரோகிராம்களை திறக்க அவற்றின் மீது க்ளிக் செய்வதை விட நமது விண்டோவ் கீயை அழுத்திக்கொண்டு அந்த புரோகிராம் டாஸ்க்பாரில் உள்ள வரிசை எண்ணை அழுத்தினால் அது தானாக திறந்து கொள்ளும். 1ல் ஆரம்பித்து 0 இறுதியாக வரும்.

4. Ctrl + Shift + N-ஆக்டிவ் விண்டோவில் புதிதாக ஒரு ஃபோல்டரை உருவாக்க:

நாம் ஒரு புதிய folder (ஃபோல்டரை) ஏதேனும் ஒரு இடத்தில் உருவாக்குவதற்கு மவுசை ரைட் க்ளிக் செய்து புதிய ஃபோல்டரை தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக மேலே குறிப்பிட்டுள்ள விசைகளை அழுத்தினால் ஒரு புதிய ஃபோல்டர் திறக்கப்படும்.

5. Shift + Right-Click-ரைட் க்ளிக்கில் வரும் SEND TOமெனுவில் வரும் ஆப்ஷன்களை அதிகரிக்க:

நாம் ஏதேனும் ஒரு கோப்பின் மீது ரைட் க்ளிக் செய்யும்போது அதில் send to என்ற ஒரு வசதி இருக்கும் அதில் குறிப்பிட்ட சில ஃபோல்டர்கள் மட்டுமே காட்டப்படும். மற்ற இடங்களுக்கு நகர்த்த நாம் கட் அல்லது copy ஆப்ஷனை உபயோகிக்க வேண்டும். ஆனால் ஷிப்ட் கீயை அழுத்திக்கொண்டு அந்த ஆப்ஷனின் மீது ரைட் க்ளிக் செய்வதன் மூலம் சென்ட் டூ ஆப்ஷனில் வரும் இடங்கள் அதிகரிக்கும், இதனால் அந்த கோப்பினை வேறு இடத்திற்கு மாற்றுவது எளிதாக இருக்கும்.

6. Ctrl + Shift + Escape-விண்டோஸ் டாஸ்க் மேனேஜரை திறக்க:

வழக்கமாக நாம் டாஸ்க் மேனேஜரை திறக்க CTRL+ALT+DELETE விசைகளை உபயோகிப்போம், அதற்கு பதிலாக மேலே உள்ள விசைகளையும் உபயோகிக்கலாம்.

7. Windows-botton + Pause-உங்கள் கணினியின் System Propertiesவிண்டோவை திறக்க:

நாம் பல நேரங்களில் சிஸ்டம் புராபர்டீஸ் விண்டோவை திறக்க வேண்டியிருக்கும், ஏனெனில் இங்குதான் நமது கணினியின் பல்வேறு அளவீடுகள் இருக்கும் மற்றும் டிவைஸ் மேனேஜருக்கும் இங்கிருந்துதான் செல்வோம். இதனை திறக்க My Computer ஐகான் மீது ரைட் க்ளிக் செய்வதற்கு பதிலாக மேலே உள்ள விசைகளை அழுத்தினால் போதுமானது, இந்த Pause பட்டனானது பிரிண்ட் ஸ்கிரீன் பட்டன் வரிசையில், ஸ்க்ரோல் லாக் பட்டனுக்கு பக்கத்தில் இருக்கும்.

8. Windows-button+B- வேறு இடங்களில் இருந்து சிஸ்டம் ட்ரேவிற்கு வருவதற்கு:

நாம் பல நேரங்களில் கணினியில் வேலை செய்து கொண்டிருக்கும்போது சிஸ்டம் ட்ரேவில் உள்ள ஐகான்களில் ஏதேனும் ஒன்றினை பயன்படுத்த வேண்டியிருக்கும், இதற்கு மவுசினை பயன்படுத்துவதை விட மேலே குறிப்பிட்டுள்ள விசைகளை அழுத்தினால் சிஸ்டம் ட்ரே ஆக்டிவ்வாக இருக்கும் இப்போது அம்புக்குறி விசைகளின் மூலம் உங்களுக்கு தேவையான ஐகானை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

9. Shift+Click on Taskbar Item-இரண்டாவது முறை அதே புரோகிராமினை திறக்க:

நாம் ஏதேனும் ஒரு புரோகிராம் உதாரணத்திற்கு கூகுள் க்ரோமில் வேலை செய்து கொண்டிருக்கும்போது அதில் இன்னொரு விண்டோவை திறக்க விரும்பினால் மவுசில் ரைட் க்ளிக் செய்து புது விண்டோவை திறப்பதற்கு பதிலாக ஷிப்ட் கீயினை அழுத்திக்கொண்டு அந்த புரோகிராமின் மீது க்ளிக் செய்தால் இன்னொரு விண்டோவ் ஓப்பன் ஆகிவிடும்.

10. Windows-button+D-எல்லா விண்டோக்களையும் மினிமைஸ் செய்து டெஸ்க்டாப்பினை காட்ட:

நாம் டெஸ்க்டாப்பிற்கு செல்வதற்கு எல்லா புரோகிராம்களையும் மினிமைஸ் செய்வதோ அல்லது அதற்கு பதில் டாஸ்க்பாரின் இறுதியில் உள்ள டெஸ்க்டாப் பட்டனை அழுத்துவோம். அதற்கு பதிலாக மேலே குறிப்பிட்டுள்ள பட்டன்களை அழுத்தினால் டெஸ்க்டாப் காட்டப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.