முறை (Hard Disk Drive Partition)
நமக்கு வேண்டிய அளவிற்கு டிரைவ்களை பிரித்து வைத்துகொண்டால் மிக மிக பயனுள்ளதாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும். இதற்கு எந்த மென்பொருட்களும் தேவையில்லை. மிக எளிதாக இரண்டே நிமிடத்தில் பிரித்து விடலாம்.
- கம்ப்யூட்டர் என்று ஷார்ட்கட்டில் வலது பக்க மௌஸ் கிளிக் செய்யுங்கள்.
- மேனேஜ் என்று இருக்கும் இடத்தை கிளிக் செய்யுங்கள்.
- My Computer --> Right Click --> Manage
- (Control Panel --> Administrative Tools --> Computer Management --> Disk Management)
- கம்ப்யூட்டர் மேலான்மை என்று அழைக்கப்படும் Computer Management ஓபன் ஆகும்.
- Disk Management என்பதை கிளிக் செய்யுங்கள்.
- Computer Management --> Disk Management
- Disk Management கிளிக் செய்தவுடன் உங்கள் கம்ப்யூட்டரில் இருக்கும் டிரைவ்கள் அனைத்தும் காண்பிக்கும்.
(ஏற்கனவே நான் பிரித்து வைத்து இருப்பதால் E: என்று காண்பிக்கிறது)
- ஒரே ஒரு டிரைவ் இருக்கும் பட்சத்தில் C: என்று காண்பிக்கும்.
- C : மேல் ரைட் கிளிக் செய்யுங்கள்.
- அதில் வரும் ஆப்சன்களில் Shrink Volume என்பதை கிளிக் செய்யவும்.
C : --> Right Click --> Shrink Volume
- கிளிக் செய்தவுடன் பிரிக்க கூடிய அளவினை தானாகவே காண்பிக்கும்.
- காண்பிக்கப்படும் அளவை விட அதிகரிக்க முடியாது. வேண்டுமேயானால் குறைத்து கொள்ளலாம்.
- Shrink என்பதை கிளிக் செய்யுங்கள்.
- புதிதாக ஒரு டிரைவ் C : அருகில் சேர்ந்து இருக்கும். புதிய டிரைவில் ரைட் கிளிக் செய்து வரும் ஆப்சனில் New Simple Volume என்பதை கிளிக் செய்யுங்கள்.
- அடுத்து வரும் ஆப்சன்ஸ் அனைத்திற்கும் Next என்றே கொடுத்துவிடுங்கள். கடைசியாக Finish என்பதை கிளிக் செய்யுங்கள்.
- Right Click --> New Simple Volume --> Next --> Finish
- அவ்வளவு தான் புதியதாக ஒரு டிரைவ் கம்ப்யூட்டரில் சேர்ந்துவிட்டது.
- புதிய டிரைவில் ரைட் கிளிக் செய்து பார்மட் செய்து கொள்ளுங்கள்.
- New Drive --> Right Click --> Format
இரண்டே நிமிடத்தில் புதிய டிரைவ் தயாராகிவிட்டது. (ஆனால் இந்த பதிவை எழுத தான் ஒரு மணி நேரம் ஆயுடுச்சி...?) இப்போ உங்கள் கம்ப்யூட்டரில் புதிய டிரைவ் இருக்கும். இதில் தங்களுக்கு வேண்டியவற்றை சேமித்து வைத்து கொள்ளுங்கள்.
பிரித்த டிரைவ்களை அழிக்கும் முறை
- நீங்கள் பிரித்து வைத்து இருக்கும் டிரைவை திரும்ப இணைக்கவும் முடியும்.
- பிரித்து வைத்து இருக்கும் டிரைவை இணைக்கும் முன் அதில் இருக்கும் பைல்களை வேறொரு டிரைவில் காப்பி செய்துகொள்ளுங்கள்.
- இணைக்க அல்லது அழிக்க நினைக்கும் டிரைவை ரைட் கிளிக் செய்யுங்கள்.
- அதில் வரும் ஆப்சனில் Delete Volume என்பதை கிளிக் செய்யவும். Next என்று கிளிக் செய்து Finish என்பதை கிளிக் செய்யவும்.
- New Drive --> Right Click --> Delete Volume
- எந்த டிரைவில் இருந்து பிரித்தீர்களோ அந்த டிரைவில் ரைட் கிளிக் செய்யுங்கள். (Delete செய்த டிரைவை அல்ல)
(C : என்ற டிரைவில் இருந்து பிரித்தால் C : ரைட் கிளிக் செய்யவும்)
(புகைப்படத்தில் நான் E: டிரைவில் இருந்து பிரித்து இருக்கிறேன்)
- ரைட் கிளிக் செய்து வரும் ஆப்சனில் Extend Volume என்பதை கிளிக் செய்யவும். Next கொடுத்து Finish செய்து கொள்ளுங்கள்.
- C : --> Right Click --> Extend Volume --> Next --> Finish
பிரித்து வைத்து இருந்த டிரைவ் ஏற்கனவே இருக்கும் ட்ரைவோடு சேர்ந்து இருக்கும்.
குறிப்பு : C : டிரைவை ஒரு தடவை மட்டுமே பிரிக்க முடியும். பிரித்த ட்ரைவ்களில் வேண்டுமானால் மேற்கொண்டு டிரைவ்களை பிரித்துகொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.