என்னுடைய ஆங்கில வலைப்பக்கத்திற்கு செல்ல இங்கே அழுத்தவும் இப்படிக்கு உங்கள் தோழன் ஷாஜஹான் சார்லஸ்

3/02/2013

Android மொபைல்களில் தமிழில் டைப் செய்ய சிறந்த மென்பொருள் (Updated Plugin)


Android மொபைல்களில் தமிழில் டைப் செய்வதில் பல சிரமம் உண்டு. அதுவும் Ice Cream Sandwich, Jelly Bean இயங்குதளம் மொபைல்களில் பல மென்பொருட்கள் ஒழுங்காக இயங்கவில்லை. இதற்க்கு முன் பல மென்பொருட்கள் அருமையாக இயங்கின. ஆனால் அந்த மென்பொருட்கள் Ice Cream Sandwich, Jelly Bean  இயங்குதளத்தில் தமிழில் டைப் செய்ய முடியவில்லை.

Ice Cream Sandwich, Jelly Bean அல்லாத மொபைல்களில் தமிழில் சுலபமாக டைப் செய்ய முடிந்தது. ஆனால் இப்பொழுது இயக்கமுடியவில்லை.





இதற்க்கு தீர்வு தான் இந்த மென்பொருள். MultiLing Keyboard. பல முறை முயற்சித்தும் எந்த மென்பொருளை கொண்டும் என்னால் தமிழில் டைப் செய்ய முடியவில்லை. நான் இன்னும் Ice Cream Sandwich, Jelly Bean மொபைல்களுக்கு வரவில்லை என்று தான் நினைத்திருந்தேன். எனது நண்பர் கார்த்திக் அவர்கள் தான் இந்த மென்பொருளை எனக்கு தெரிவித்தார்கள். பதிவு போட ஒரு மேட்டரும் கிடைச்சிடுச்சு..?







  • முதலில் Play Store சென்று  Multiling Keyboard தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
  • டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.








  • இன்ஸ்டால் செய்து முடிந்ததும் Settings சென்று Language and Input இல் MultiLing Keyboard Default செய்து கொள்ளுங்கள். 

Setting --> Language and Input --> Default --> MultiLing Keyboard

  • Default செய்துகொள்வது நல்லது, இல்லையென்றால் ஒவ்வொரு முறையும் தேவைப்படும்போது Keyboard மாற்ற வேண்டி வரும். 

  • Default செய்து முடித்ததும் Language and Input  சென்று MultiLing Keyboard டிக் செய்து உள்ளதா என்று பார்த்து கொள்ளுங்கள்.
  • இல்லையென்றால் டிக் செய்து கொள்ளுங்கள்.


  • MultiLing Keyboard மென்பொருளை ஓபன் செய்து கொள்ளுங்கள்.


  • Enable MultiLing என்பதை கிளிக் செய்தால் நாம் ஏற்கனவே செய்ததுபோல் Language and Input ஓபன் ஆகும். 
  • மேலே செய்ததுபோல் செய்யாமல் இது போலவும் டிக் செய்யலாம்.











  • Enable Languages சென்று English மற்றும் தமிழ் தேர்வு செய்து கொள்ளுங்கள்.
  • English கண்டிப்பாக தேர்வு செய்ய வேண்டும், இல்லையென்றால் ஒவ்வொரு முறையும் நீங்கள் Keyboard மாற்ற வேண்டி வரும்.





  • தமிழிற்கும் English க்கும் மாற்ற வேண்டும்யேன்றால் Space Bar இல் எந்த மொழி தேர்வு செய்யப்பட்டுள்ளதோ அது காண்பிக்கும்.

  • Space Bar ஐ அழுத்தி இடது அல்லது வலது பக்கம் நகர்த்தினால் மொழி மாறிவிடும். 

           
  • அல்லது Space Bar ஐ அழுத்தி பிடித்து கொண்டும் மாற்றலாம். இது கொஞ்சம் சிரமம். 

  • எத்தனை மொழி வேண்டுமென்றாலும் வைத்து கொள்ளலாம். 



எப்படி டைப் செய்ய வேண்டும்?
  • தமிழில் டைப் செய்யும்போ து  ஒவ்வொரு எழுத்தாக டைப் செய்ய வேண்டும். (கொலப்புறேன்ல!!!)
  • அதாவது? தமிழ் என டைப் செய்யும்போது தனி தனியாக 
(த + ம + சிறிய சுழி + ழ + புள்ளி) 

  • முடியலையா ?? தயவுசெய்து படத்த பாருங்க என்னாலையும் முடியல?? 


                                             
நேரத்தை  சேமிக்க சிறந்த வழி
தமிழில் டைப் செய்யும் போதே English இல் வருவது போல Suggestion வருவதால் டைப் செய்யும் நேரம் குறைகிறது. இதற்கு இந்த Plugin இன்ஸ்டால் செய்தால் போதும் எந்தவித சிரமமுமின்றி விரைவாக டைப் செய்யலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.