விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கான இலவச ஆன்டி வைரஸ் புரோகிராம்கள் கொடுக்கப்பட்டுள்ளன.Microsoft Security Essentials: விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கான வைரசுக்கு எதிரான பாதுகாப்பினை மைக்ரோசொப்ட் நிறுவனம் தன் வலைத்தளத்தில் தந்துள்ளது. இதனை செயல்படுத்தினால் உங்களது பெர்சனல் கணனியின் செயல்திறன் பாதிக்காது. இது தானாகவே அப்டேட் ஆகி விடும். http://windows.microsoft.com/en-IN/windows/security-essentials-download AVG: அனைவருக்கும் நன்றாகத் தெரிந்த ஓர் ஆண்ட்டி வைரஸ் சாப்ட்வேர் ஏவிஜி. விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு இலவசமாகக் கிடைக்கும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளில் இது மிகச் சிறந்ததாகும். இது வைரஸ்கள், பயமுறுத்தும் சாப்ட்வேர் தொகுப்புகள், மால்வேர் தொகுப்புகள் ஆகியவற்றைக் கண்டறிந்து நீக்குகிறது. பாதுகாப்பில்லாத, சந்தேகத்திற்கு இடமான கோப்புகளை தடுத்து நிறுத்துகிறது. தகவல்கள் திருடப்படும் முயற்சிகளை முறியடிக்கிறது. http://free.avg.com/in-en/download Avast: இதனைப் பெரும்பாலானவர்கள் முன்பே பயன்படுத்தி இதன் செயல்திறனை அறிந்திருப்பார்கள். மிகச்சிறந்த விண்டோஸ் 8 ஆண்ட்டிவைரஸ் புரோகிராம்களில் இதுவும் ஒன்று. வைரஸ் மற்றும் ஸ்பைவேர் புரோகிராம்களிலிருந்து முற்றிலும் பாதுகாக்கிறது. http://www.avast.com/en-in/index Avira: அவிரா ஆண்ட்டி வைரஸ் புரோகிராமும், விண்டோஸ் 8க்கு ஏற்றபடி வடிவமைக்கப்பட்டு இலவசமாக வழங்கப்படுகிறது. வைரஸ் மற்றும் ஸ்பைவேர் புரோகிராம்கள் மட்டுமின்றி விளம்பரங்களாக வரும் ஆட்வேர் புரோகிராம்களையும் தடுக்கிறது. நம் இணையதளச் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் நிறுவனங்களின் முயற்சிகளை முறியடிக்கிறது. தொடர்ந்து பாதுகாப்பு தருவதுடன் தேடலில் நாம் பெறும் இணையதளங்களின் பாதுகாப்பு தன்மை குறித்தும், கண்டறிந்து அறிவிக்கிறது. http://www.avira.com/en/avira-free-antivirus Kaspersky Antivirus: விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கென முதலில் வெளி வந்த ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளில் இதுவும் ஒன்று. பெரும்பாலானவர்களால் விரும்பப்படும் இந்த புரோகிராம் ட்ரோஜன் வைரஸ், கெடுதல் விளைவிக்கும் இணைய தளங்களுக்கான லிங்க் ஆகியவை குறித்து மிகச் சரியாக எச்சரிக்கிறது. வைரஸ்களை ஸ்கேன் செய்வதில் இதன் அசாத்திய வேகம் குறிப்பிடத்தக்கது. http://www.windows8downloads.com/win8-kaspersky-anti-virus.html |
8/31/2013
விண்டோஸ் 8க்கான இலவச ஆன்டி வைரஸ் புரோகிராம்கள்
ஜிமெயிலை பாதுகாப்பாக பயன்படுத்த ஏழு வழிகள்
மின்னஞ்சல்களைப்
பயன்படுத்தும் பலரும் அதன் பாதுகாப்பு விடயங்களில் கவனமாக இருப்பதில்லை.
ஒன்றுக்கு இரண்டாக மின்னஞ்சல் இல்லாதவர்கள் எவரும் உலகில் இல்லை.நமது
மின்னஞ்சல்களில் தான் முக்கியமான விவரங்கள் எல்லாம் வைத்திருப்போம். பல
தளங்களில் Registration செய்த தகவல்கள், சமுக வலைத்தள விவரங்கள் மேலும் பல
முக்கியமான மின்னஞ்சல்களும் வைத்திருப்போம். திடீரென்று உங்கள் மின்னஞ்சல் கணக்கை எவராவது சில சமயம் நண்பர்கள் கூட களவாடலாம்(hacking gmail). சரியான கடவுச்சொல் தானே வைத்திருக்கிறோம் என்று நினைத்து விட்டு விட்டால் களவாடப்பட்ட பின் புலம்ப வேண்டியது தான். ஜிமெயில் சேவைக்கு சரியான கடவுச்சொல் வைத்தால் மட்டும் போதாது. மேலும் சில விடயங்களைச் செய்தும் சரியாக கவனித்தும் வந்தால் தான் பாதுகாப்பாக இருக்க முடியும். 1. இணையதள முகவரியை சரிபாருங்கள்: இணையத்திருடர்கள் ஜிமெயிலின் முகப்புப்பக்கம் போலவே செய்து வைத்திருப்பார்கள். நீங்கள் லொகின் செய்தவுடன் வேறொரு தளத்திற்கு இழுத்துச் சென்று உங்கள் தகவல்கள் திருடப்படலாம். எனவே https://gmail.com என்ற முகவரியில் தான் செல்கிறீர்களா என உறுதிப்படுத்திக் கொள்ளவும். 2. பொது இடங்களில் பயன்படுத்துவதைத் தவிருங்கள்: Keyloggers எனச் சொல்லப்படும் மென்பொருள்கள் நீங்கள் தட்டச்சிடும் போது எல்லாவற்றையும் கிரகித்துக் கொண்டு அதன் சர்வருக்கு உங்கள் தகவல்களை அனுப்பி விடும். எனவே உங்களுக்குத் தெரியாமல் இணைய செண்டர்களில் நிறுவப்பட்டிருந்தால் போயிற்று. எனவே முடிந்தவரை பொது இடங்களில் பயன்படுத்தாதீர்கள். 3. இன்னொரு மின்னஞ்சல் முகவரிக்கு Forward செய்தல்: ஜிமெயில் பயன்படுத்துபவர்கள் உங்கள் மின்னஞ்சல்களை இன்னொரு மின்னஞ்சல் முகவரிக்கு திருப்பி விட முடியும்(Forwarding mails). எனவே இரண்டாவது ஜிமெயில் ஒன்றை உருவாக்கி அதில் முதன்மை மின்னஞ்சல்கள் எல்லாமே வருகிற மாதிரி அமைக்கலாம். பொது இடங்களில் பயன்படுத்துகிற போது இரண்டாவது ஜிமெயில் கணக்கை உபயோகிக்கலாம். Settings -> Forwading and Pop/Imap. 4. நாள்தோறும் ஜிமெயிலின் Account Activity கவனித்தல்: Account Activity ஜிமெயிலின் சிறப்பான சேவை. இதன் மூலம் எந்தெந்த உலவியில் எந்த நேரத்தில் எந்தெந்த ஐ.பி அட்ரஸ்களில் பயன்படுத்தியுள்ளார்கள் என்று தெரியும். ஒரே இடத்தில் பயன்படுத்தினால் ஒரே IP Address தான் இருக்கும். சந்தேகப்படுமாறு பயன்படுத்தப்பட்டிருந்தால் Sign out All other Sessions என்பதைக் கொடுத்து முறையாக வெளியேறுங்கள். 5. தேவையில்லாத Filter இருக்கிறதா எனப் பாருங்கள்: Filter மூலம் குறிப்பிட்ட மின்னஞ்சல்களையோ அல்லது அனைத்து மின்னஞ்சல்களையோ Forward செய்தல், அழித்தல் போன்ற வேலைகளைச் செய்யலாம். நீங்கள் ஜிமெயில் கணக்கிலிருந்து சரியாக வெளியேறாமல் இருந்திருக்கலாம். நண்பர்களே உங்களின் கடவுச்சொல்லை அறிய முயற்சிக்காமல் Filter என்பதைக் கொடுத்து விடலாம். இப்போது உங்களுக்கு வரும் எல்லா மின்னஞ்சல்களும் உங்கள் நண்பருக்கும் போகும். இது புது வகை. அதனால் தேவையில்லாத Filter இருக்கிறதா எனச் சரிபாருங்கள். Settings -> Filters. 6. சந்தேகமான சுட்டிகளைக் கிளிக் செய்யாதீர்கள்: சில நேரம் உங்களுக்கு gmailteam@google.com இலிருந்து மெயில் வந்துள்ளது. உங்கள் கடவுச்சொல்லை மாற்ற வேண்டுமானால் கீழே கிளிக் செய்து மாற்றிக்கொள்ளலாம் என அறிவிப்பு வரலாம். உங்கள் கடவுச்சொல்லை கேட்கும் எந்த இணைப்பையும் கிளிக் செய்யாதீர்கள். ஏனெனில் ஜிமெயில் இதுமாதிரி உங்களிடம் கேட்பதில்லை. பலவகையான ஏமாற்று மின்னஞ்சல்கள் இதைப் போல செயல்படுகின்றன. 7. உங்கள் கடவுச்சொல்லை வலிமையாக்குங்கள்: உங்கள் கடவுச்சொல் குறைந்தது 8 எழுத்துகளாவது இருக்கவேண்டும். கட்டாயம் எழுத்துகளில் எண்களையும் பயன்படுத்துங்கள். உங்கள் மொபைல் எண், பெற்றொர் பெயர், உறவினர் பெயர் போன்றவற்றை வைக்காதீர்கள். கடவுச்சொல்லை எங்கேயும் எழுதவோ கணணியில் குறித்தோ வைக்காதீர்கள். |
கணணிக்கு தீங்கு இழைக்கும் மென்பொருட்களை கண்டு அழிப்பதற்கு
கணணிக்கு
மிகவும் அவசியமானது மென்பொருள்கள் ஆகும். கணணியில் நம்முடைய வேலைகளை
குறைக்கவும், சில அதிகப்படியான வசதிகளுக்கும் மென்பொருட்களை
உபயோகிக்கிறோம்.மென்பொருட்கள் இல்லாமல் கணணி இருப்பது வீண் தான். மென்பொருட்களை பிரபல கணிப்பொறி நிறுவனங்கள் தயாரித்து நமக்கு விலைக்கு தருகிறது. இந்த மென்பொருட்களை உபயோகித்தால் நம்முடைய எந்த பிரச்சினையுமின்றி பாதுகாப்பாக இருக்கும். ஆனால் நாம் பெரும்பாலும் மென்பொருட்களை காசு கொடுத்து வாங்காமல் கிராக் பதிப்பையோ அல்லது இணையத்தில் கொட்டி கிடக்கும் இலவச மென்பொருட்களை தரவிறக்கி உபயோகிக்கிறோம். இப்படி இலவச மென்பொருட்களை உபயோகிக்கும் போது சில மால்சியஸ் மென்பொருட்களால் நம்முடைய கணணி பாதிக்கப்படும். ஆன்ட்டி வைரஸ் மென்பொருட்களும் இந்த மென்பொருட்களை கண்டறிய முடியாததால் கணணி மேலும் மேலும் பாதிக்கப்பட்டு நாளடைவில் முற்றிலுமாக செயலிழக்கும் அபாயம் உள்ளது. இந்த பிரச்சினைகளை தவிர்க்க மைக்ரோசாப்ட் நிறுவனம் மால்சியஸ் மென்பொருட்களை கண்டறிந்து அளிக்க ஒரு மென்பொருளை வெளியிட்டு உள்ளது. இந்த மென்பொருளை Malcious Software Removal தரவிறக்கம் செய்து கணணியில் நிறுவச் செய்யும் போதே உங்கள் கணணியை ஸ்கேன் செய்ய ஆரம்பித்து விடும். உங்கள் கணணியில் உள்ள அனைத்து மென்பொருட்களும், எக்ஸ்கியுட்டபில் கோப்புக்கள் அனைத்தும் ஸ்கேன் செய்யும். இதில் ஏதேனும் தீங்கு இழைக்க கூடிய மென்பொருட்கள் கணணியில் இருந்தால் அதை கண்டறிந்து அழித்து விடும். அப்படி உங்கள் கணணியில் எந்த மால்சியஸ் மென்பொருளும் இல்லை. அனைத்து மென்பொருட்களும் நல்ல நிலையில் இருந்தால் உங்களுக்கு எந்த மென்பொருளும் பாதிக்கபடவில்லை என்ற செய்தி வரும். இணையதள முகவரி |
பென்டிரைவில் உள்ள சிக்கல்களை சரிசெய்வதற்கு
நாம் அன்றாடம் பல கணணிகளில் பலதரப்பட்ட காரணங்களுக்காக பென்டிரைவ்களை பயன்படுத்துகின்றோம்.இதனால்
வைரஸ், மால்வேர்கள் உங்களது பென்டிரைவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
உங்களது முக்கியமான கோப்புக்களை அழித்து விடுவதுடன், கோப்புறை
குறுக்குவழிகளை(folder shortcuts) உருவாக்கிவிடும். சில சமயங்களில் எப்படி உங்களது கோப்புக்களை மீள பெறுவது என தெரியாமல் இருக்கும். பின்வரும் வழிமுறையை பின்பற்றி இந்த பிரச்சனையை சரிசெய்து கொள்ளுங்கள். முதலில் Command Prompt யை திறப்பதற்க்கு Run�> சென்று அங்கே �cmd� என டைப் செய்யுங்கள். பின்னர் திறக்கும் திரையில் attrib -h -r -s /s /d h:*.* என டைப் செய்யுங்கள். மேலே காணப்படும் h என்பதற்கு பதிலாக உங்களது சரியான பென்டிரைவின் Drive Letter-ஐ கொடுங்கள்(இதை உங்களது My Computer யில் கிளிக் செய்து பார்க்கலாம்). இனி உங்களது பென்டிரைவில் சென்று அங்கு உள்ள தேவையற்ற shortcutsகளை அழித்து விடுங்கள். இவ்வாறு செய்தால் உங்களது பென்டிரைவின் கோப்புறை குறுக்குவழி(Folder Shortcut) சிக்கலை சரிசெய்து விடலாம். |
பாதுகாப்பான பென்டிரைவை உருவாக்க
தனிப்பட்ட தகவல்களை சேகரிப்பதற்கும், தகவல்களை இலகுவாக எடுத்துச் செல்வதற்கும் பென்டிரைவ்கள் பயன்படுத்தப்படுகின்றன.இருந்தும்
அத்தகவல்களை கணணி வைரஸ்களிடமிருந்து பாதுகாப்பது மிகவும் கடினமான ஒன்றாக
காணப்படுகின்றது. இத்தொல்லையிலிருந்து விடுபடுவதற்கு USB Write Protecter
என்ற ஒரு மென்பொருள் பயன்டுகின்றது. பயன்படுத்தும் முறை: 1. குறித்த பென்டரைவை கணணியுடன் இணைக்கவும். 2. தரப்பட்டுள்ள தரவிறக்க சுட்டிக்கு சென்று மென்பொருளை தரவிறக்கம் செய்யவும். 3. பின் அம்மென்பொருளை இயக்கவும். அவ்வாறு இயக்கும் போது கீழே காட்டப்பட்டுள்ளவாறு ஒரு சாளரம்(Image) தோன்றும். இப்பொழுது குறித்த பென்டிரைவில் காணப்படும் கோப்புக்களை அழிக்கவோ அல்லது பிரதிசெய்யவோ(copy) முடியாது. அவ்வாறு செய்ய வேண்டுமெனில் மீண்டும் மென்பொருளை இயக்கி USB write protection OFF என்பதை தெரிவு செய்ய வேண்டும். தரவிறக்க சுட்டி |
பென்டிரைவை சோதிப்பதற்கு
இன்றைய கணணி உலகத்தில் USB கருவிகளான பென்டிரைவ், மெமரி கார்டு போன்றவை தகவல்களை சேமித்து வைத்துக் கொள்ள பயன்படுத்தப்படுகின்றன.இவை குறிப்பிட்ட காலம் செயல்பட்ட பின் தானாகவே இயக்கத்தை நிறுத்திக் கொள்கின்றன. சிலருக்கோ தாங்கள் வாங்கிய பென்டிரைவ் தரமானதா அல்லது போலியானதா என்று கூட கண்டறியத் தெரியாது. அதே போல தற்போது நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் பென்டிரைவ் பழுதாயிருக்கிறதா என்றும் கண்டுபிடிக்க முடியாது. பென்டிரைவ் மற்றும் ஏனைய USB கருவிகளின் தரத்தைச் சோதிக்க ChkFlsh என்ற இலவச மென்பொருள் இணையத்தில் கிடைக்கிறது. இதன் மூலம் Read Speed, Write Speed, Sector wise Errors போன்ற விடயங்களை சோதித்து அறியலாம். இதனால் நமது பென்டிரைவ் தரமாக உள்ளதா என்றும் தெரிந்து கொள்ளலாம். இதற்கு முதலில் இந்த மென்பொருளைத் தரவிறக்கியவுடன் ChkFlsh என்ற கோப்பை கிளிக் செய்யவும். பின்னர் உங்கள் பென்டிரைவை கணணியில் செருகவும். பென்டிரைவில் உள்ள தகவல்களை அழித்து விட்டு சோதிக்கப் பயன்படுத்துவது நலமானது. இதில் 3 வகையான Access Type கள் இருக்கின்றன. Use Temporary file என்பதைக் கிளிக் செய்தால் Write and Read சோதனையைச் செய்ய முடியும். உங்கள் பென்டிரைவில் ஏதேனும் தகவல்கள் இருந்து Read Test மட்டுமே மேற்கொள்ள வேண்டும் எனில் As Logical Drive என்பதைக் கிளிக் செய்து கொள்ளவும். Test Length என்பதில் One Full Cycle என்பதைத் தெரிவு செய்யவும். பின்னர் Start கொடுத்தால் பென்டிரைவ் சோதிக்கப்படும். ஒவ்வொரு கோப்பு செக்டார்களாக(File Sector)களாக சோதிக்கப்பட்டு வரும். இறுதியில் ஒவ்வொரு செக்டாரும் பச்சை வண்ணத்தில் காண்பிக்கப்பட்டால் உங்கள் பென்டிரைவில் எந்த பிரச்னையும் இல்லை என்று அர்த்தம். இத்துடன் இந்த பென் டிரைவின் வேகம் மற்றும் பிழைகள் இருந்தாலும் காண்பிக்கப்படும். தரவிறக்க சுட்டி |
பென்டிரைவில் பாதுகாப்பான Safely Remove வசதி
பென்டிரைவில் பாதுகாப்பான Safely Remove வசதி |
யு.எஸ்.பி டிரைவ்களை பயன்படுத்தும் போது, அவசரத்தில் Safely Remove கொடுக்காமல் மறந்து விடுகிறோம். இதனால்
பென்டிரைவ் போன்ற யு.எஸ்.பி டிரைவ்கள் பழுதடைய வாய்ப்பு அதிகம். Safely
Remove கொடுக்காமல், அதே நேரம் பென்டிரைவிற்கு எந்தவித பிரச்னையும் வராமல்
தடுக்கலாம். இதற்கு, 1. முதலில் உங்கள் பென்டிரைவ் அல்லது வேறு ஏதேனும் USB Device ஒன்றை உங்கள் கணணியில் செருகவும். 2. இப்போது My Computer மீது ரைட் கிளிக் செய்து Manage என்பதை கிளிக் செய்யவும். இப்போது புதிய விண்டோ ஒன்று வரும், அதில் இடது புறத்தில் Device Manager என்பதை தெரிவு செய்யவும். 3. இப்போது உங்கள் கணணியில் உள்ள Device கள் அனைத்தும் அதில் காண்பிக்கப்படும். அதில் Disk Drives -இல் உங்கள் Pen Drive/ USB Device பெயரை கண்டுபிடிக்கவும். அதன் மீது Double Click செய்யவும். 4. இப்போது வரும் புதிய விண்டோவில் Policies என்ற Tab-ல் "Quick removal (default)" என்பதை தெரிவு செய்யவும். அவ்வளவு தான், இனிமேல் நீங்கள் Safely Remove என்பதை கொடுக்க தேவையில்லை. |
8/29/2013
அன்ராய்டு போன்களை ஜெல்லிபீன் க்கு மாற்றும் வழிமுறை
அன்ராய்டூ பதிப்புகளை பயன்படுத்தும் செல்பேசிகளுக்கு அவ்வப்போது
புதிய பதிப்புகளை பதிப்பித்து வருகிறது. கணிணியை பொருத்தவரை புதிய
இயங்குதளம் வந்தால் அவற்றை நாமாகவே நிருவிக் கொள்ளலாம் . ஆனால் இந்த
செல்பேசிகள் சற்று சிக்கலான முறையில் தான் அவற்றை அப்டேட்
செய்யப்படும். அவைகள் ROM - களில் இயங்குதளங்களை பதிந்து கொண்டு
இயங்குகின்றன. இந்த வகையான செல்பேசிகளையும்சில முறைகளை பயன்படுத்தி
நாம் அவற்றின் இயங்குதளத்தை புதுப்பிக்கலாம்.
இங்கே MICROMAX A110 CANVAS 2 க்கு அப்டேட்
செய்வது பற்றி விளக்கப்பட்டுள்ளது. வேறு வகையான மாடல்கள் அப்டேட்
விவரங்கள் வேண்டும் என்றால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். கைபேசி
நிறுவனம் மற்றும் வகை எண்ணை மறக்காமல் குறிப்பிடவும்.
ஸ்மார்ட் போன் களை பொறுத்தவரை MICROMAX முன்னனியில் இருக்கும் நிறுவனம்
ஆகும். அவர்களுடைய பதிப்பான MICROMAX A110 CANVAS 2 போன் ICE-CREAM
SAN-WITCH பதிப்பை பெற்றது ஆகும் இந்த ஸ்மார்ட் போனின் மென்பொருளை
அப்டேட் செய்வது பற்றி தெளிவாக அறிந்து கொள்ளலாம் .
இந்த MICROMAX A110 CANVAS 2 செல்பேசியானது MTK6577 மைக்ரோசிப்
பொருத்தப்பட்டு உள்ளது. இது ஜெல்லிபீன் பதிப்பிற்கு தேவையான வசதிகளை
அளிப்பதாக உள்ளதால் எளிமையாக அப்டேட் செய்யலாம் . இதற்காக
சர்வீஸ் சென்டர்களை நாடவேண்டியது இல்லை. அன்ராய்டு இயங்குதளத்தை
பதிவிறக்கம் செய்ய அகன்றவரிசை இணைப்பை பயன்படுத்துதல் நலம். அவை
பெரிய அளவிலான கோப்பாக உள்ளது.
கீழ்கண்ட பைல்களை பதிவிறக்கம் செய்ய வேண்டும்
மேற்கண்ட பைல்களை பதிவிறக்கம் செய்து அவற்றை தனியாக ஒரு இடத்தில் வைத்துக்கொள்ளவும்.
1. முதலில் MICROMAX DRIVER ஐ கணிப்பொறியில் நிறுவிக் கொள்ளவும் .
2.. பின்னர் SP tool ல் காணப்படும் Flash_Tool.exe ஐ கிளிக் செய்து ஓப்பன் செய்யவும்.
3. இந்த மென்பொருள் இயங்க தொடங்கியவுடன் scatter-loading கிளிக் செய்து ஓப்பன் செய்யவும்.
4. MICROMAX A110 CANVAS 2 க்கு உண்டான இயங்குதள ஜிப் ஐ வெளி தள்ளி அவற்றில் உள்ள MT6577_android_scatter_emmc என்ற டெக்ஸ்ட் பைலை தெரிவிக்கவும். அவ்வாறு தெரிவித்தவுடன் இயங்குதள பைல்கள் தானாகவே தேர்வாகின்றன.
5. பிறகு Flash_tool ல் உள்ள frimware->upgrade ஐகிளிக் செய்யவும்
அவ்வாறு செய்த பின்னர் இயங்குதளம் போனில் பதிய தொடங்கும் . நீல நிற
ப்ராகரஸ் பட்டை கொண்டு அறிந்து கொள்ளலாம். அவை சரியாக முடிந்தவுடன்
கணிணி திரையில் பச்சைநிற வண்ணம் கொண்ட வட்டம் காணப்படும். பச்சை நிற
வட்டம் தென்பட்ட பிறகு தான் போனை கணிணியில் இருந்து நீக்க வேண்டும். தவறு நேர்ந்தால் போன் ஆன் ஆகாது.
சரியாக செய்து முடிக்கும் பட்சத்தில் சிறப்பான ஜெல்லிபீன் போன் பெறலாம்.
உங்களுடைய சொந்த முயற்சியில் முயற்சிக்கவும். செல்பேசி பழுதுபட வாய்ப்பு உள்ளது.
கம்ப்யூட்டர் வேகமாக இயங்க msconfig
யதேச்சையாக நேற்று பழைய பாட புத்தகத்தை
திரும்ப பார்த்துக் கொண்டு இருந்தேன் அதில் இருந்த msconfig விஷயம்
ஆச்சர்யப்பட வைத்தது. நம் கம்ப்யூட்டரில் தேவை இல்லாமல் ஸ்டார்ட் ஆகும்
ப்ரோக்ராம்களை நிறுத்த இது உதவுகிறது. வாருங்கள் என்ன விஷயம் என்று
பார்க்கலாம்.
எதற்கு இந்த msconfig?
உங்கள் கணினியில் நிறைய சாஃப்ட்வேர்கள்
நீங்கள் இன்ஸ்டால் செய்து இருப்பீர்கள். அவற்றில் சில கம்ப்யூட்டர் ON ஆன
உடன் உங்கள் விண்டோவில் வந்து நிற்கும். சில உங்களுக்கு தெரியமாலயே
ஸ்டார்ட் ஆகி இருக்கும். ஒவ்வொரு முறையும் இவற்றை நாம் close செய்வதற்க்கு
பதிலாக அவை automatic ஆக ஸ்டார்ட் ஆவதை நிறுத்தி தேவையான போது மட்டும்
எடுத்து பயன்படுத்த இது உதவும்.
இதனால் கம்ப்யூட்டர் ஸ்பீட் ஆனது அதிகரிக்கும். RAM ஆனது இடைஞ்சல் எதுவும் இன்றி வேலை செய்யும்.
இது XP, Vista, Windows 7 வேறு விதமாக உள்ளதால் மூன்றையும் தருகிறேன்.
XP பயனர்களுக்கு
இதில் Run–> msconfig
இப்போது கீழே உள்ள விண்டோ வரும். அதில் Start Up என்பதை தெரிவு செய்யவும்
இதில் உங்கள் கம்ப்யூட்டர் ON ஆனவுடன்
என்ன ப்ரோக்ராம்கள் ஸ்டார்ட் ஆகின்றன என்பது கொடுக்கப்பட்டு இருக்கும்.
இதில் உங்களுக்கு அடிக்கடி தேவை இல்லாத ப்ரோக்ராம் இருந்தால் அதனை Uncheck
செய்து இப்போது OK கொடுத்து விடவும்.
இப்போது restart செய்ய சொல்லி வரும். செய்து விட்டு பாருங்கள் அவை இப்போது Automatic ஆக ஸ்டார்ட் ஆகாது.
Vista பயனர்களுக்கு
இது இப்போது கைவசம் இல்லாத காரணத்தால் run
இல் கொடுத்து முயற்சி செய்யவும். அல்லது start menu வில் search செய்யும்
இடத்தில் முழுவதுமாக msconfig என டைப் செய்தால் இந்த விண்டோ கிடைக்கும்.
அதற்கு பின் செய்முறையில் Windows 7 க்கும் இதற்கும் ஏதேனும் வித்தியாசம்
இருப்பின் கீழே comment இல் சொல்லவும்.
Windows 7 பயனர்களுக்கு
இதிலும் Run–> msconfig
இதில் வரும் புதிய விண்டோவில் Start up
என்பது கடைசிக்கு முந்தையதாகவே இருப்பதை கவனிக்கவும். இனி மேலே XP க்கு
உள்ளது போல அடிக்கடி பயன்படுத்தாத ப்ரோக்ராம்களை Uncheck செய்து விடவும்.
பின்னர் OK கொடுத்து விட்டு ரீஸ்டார்ட் செய்யவும்.
எந்த அளவுக்கு நீங்கள் Uncheck
செய்கிறீர்களோ அது உங்கள் கம்ப்யூட்டரின் RAM வேகத்தை அதிகமாக்கும்.
முயற்சி செய்து விட்டு சொல்லுங்கள்.
பேட்டரி நிற்காத அன்ராய்டு போன்களை என்ன செய்யலாம்?
அன்ராய்டு போன்களை பொறுத்தவரை அவற்றுக்கு பேட்டரி நீடித்து நிற்பது
தான் தலையாய பிரச்சனை ஆகிறது. காலை பேட்டரி
முழுவதும் நிரப்பிக்கொண்டு சென்றால் மாலைக்குள் தீர்ந்து நின்று
விடுகிறது. அதற்கு பிறகு வீட்டிற்கு வரும் வரை தொல்லைதான் சாதாரண எம்டிகே
6217, 6215 போன்கள் கூட 3 நாளைக்கு பேட்டரி தாங்கும் போது 10000
மதிப்புள்ள ஜெல்லிபீன் போன்கள் சார்ஜ் நிற்காமல் போவதற்கான காரணத்தை
ஆராய்ந்த போது எளிமையான சில விஷயங்களே இவ்வாறு பேட்டரியை காலி செய்கின்றன.
அவற்றை விரிவாக காணலாம்
1. முதலில் பேட்டரி பயன்படுத்தும் மென் பொருட்களை கண்டறிந்து அவற்றை நிறுத்தி வைக்கும் மென் பொருட்களை
அன்ராய்டில் நிறுவ வேண்டும். எடுத்துக்காட்டாக Battery Booster மென்
பொருளை நிறுவலாம்.இவ்வகை மென்பொருட்கள் பேட்டரி குறைக்கும்
அப்ளிகேசன்களை அவற்றை பயன்படுத்தாத போது நிறுத்தி வைக்கும். வைபை,
புளூடுத் ஆகிய அப்ளிகேசன்களை அவற்றை பயன்படுத்தாத போது நிறுத்தி
வைக்கிறது.
2. மார்கெட்டில் அப்ளிகேசன்களை பதிவிறக்கம் செய்யும் போது அவற்றுக்கு கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை முழுமையாக
படித்து அதனுடைய மெமரி கொள்ளளவு, பேட்டரி பயன்படுத்தும் விதம் ஆகியவற்றினை அறிந்து கொள்ள வேண்டும்.
அன்ராய்டு பயனீட்டார்கள் கவனிக்க! போன் கால்களை பதிவு செய்யும் டார்சன் மென்பொருள்
சிறிய பதிவு ஆயினும் மதிப்பு பெற்றது.
அன்ராய்டு வைரஸ் எதர்ப்பு மென்பொருள் - Android Free Virus
அன்ராய்டு வைரஸ் எதர்ப்பு மென்பொருள் - Android Free Virus
Smart Phone களின் ஆதிக்கமும், தொழில்நுட்பத்தின் வளர்ச்சியும் இன்றைய
சூழ்நிலையில் அதிகமாக காணப்படுகிறது. நன்மைகள் அதிகரித்து காணப்படும்
அதே வேளையில் தான் தொழில் நுட்பத்தை பயன்படுத்தும் தீய முறைகளும்
வளர்ந்து கொண்டே வருகின்றன. முன்பெல்லாம் கணிப்பொறியை
குறிவைத்து warm களும் Virus களும் உருவாக்கப்பட்டன. ஏறக்குறைய 60
சதவீததினர் (பெரும்பாலும் என்பதே சரியானது) இன்றைக்கு கணிப்பொறி
வைரஸ்கள் எதிர்த்து கணிணியை பயன்படுத்தும் அறிவினை பெற்றுவிட்டனர்.
அடிப்படையாக கணிணியில் வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் பதியப்பட்டு இருக்க
வேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாக ஆகிவிட்டது.
இத்தகைய சூழலில் வைரஸ் நிரலர்கள் Smart phone களையே குறிவைக்க
தொடங்கி உளளனர்.பெரும்பாலும் இன்றைக்கு செல்பேசியிலேயே தான்
அதிகமான இணைய பயன்பாட்டை பயன்படுத்துகிறோம். Android உள் புகுந்தபின்
இன்றைக்கு இது அதிகமாக ஆகி வருகிறது. கணிணியின் கீலாகர் மென்
பொருளை வைத்து கீபேர்டில் அடிக்கும் கடவுசொல்லை திருடுவது
பொன்று அன்ராய்டிலும் Key logger வைரஸ்கள் பரவுவதாக கேள்விபட்டபோது
கொஞ்சம் புளியை கரைத்தது.
Android Linux கர்னர் (karnal) என்பதால் வைரஸ் தாக்கம் குறைவாக இருக்கும்
. ஆனால் எத்தனுக்கு எத்தன் உலகில் உண்டல்லவா? எந்த செக்யூரிட்டி
மென்பொருள் அன்ராய்டுக்கு சரியாக வரும் என ஆராய்ச்சி செய்தபோது
கிடைத்த முடிவுகள். மற்றவர்களும் பயன் பெறட்டும் என பார்வைக்கு
வைக்கப்படுகிறது. அன்ராய்டு மட்டுமல்லாமல் மற்ற ஸ்மார் போன்களுக்கும்
சிறப்பான மென்பெருட்கள் வைக்கப்படுகின்றன.
(எனக்கு சிறப்பாக தோன்றிய பொருட்கள், உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு பயன்படுத்தவும்)
டிரையல் மென்பொருட்கள்
1. ESET Mobile Security
2. Kaspersky Mobile Security 9
3. McAfee Mobile Security
4. Norton Smartphone Security
5. Bitdefender Mobile Security (Android Only)
6. Trend Micro Mobile Security 7.0
7. F-Secure Mobile Security
8. BullGuard Mobile Security 10
9. AhnLab V3 Mobile 2.0
10. Dr.Web Mobile Security Suite
இலவச மென்பொருட்கள்
1. AVG Mobilation
2. NetQin Mobile Security
3. Lookout Mobile Security
4. SmrtGuard Mobile Security (BlackBerry Only)
கட்டாயம் வைத்திருக்க வேண்டிய ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷன்கள்
இங்கே சொல்லி உள்ள அனைத்து அப்ளிகேஷன்களும் இலவசமானவை.
1. Barcode Scanner
ஒரு sample கோட் கீழே உள்ளது.
2. Android Lost
அந்தத் தளத்தில் கேட்கப்படும் SMS notification number என்ற எண்ணுக்கு
உங்கள் என்னை தராமல், மொபைல் தொலைந்து போனால் அதற்கு SMS வரும்படியாக
உங்கள் நண்பர், வீட்டில் உள்ளோரின் எண் தரலாம்.
அல்லது இந்த கோடை Bar Code Scanner மூலம் Scan செய்யவும்.
3.APP 2 SD FREE
சில சமயங்களில் ஃபோன் மெமரி குறைவாக உள்ள Android மொபைல் வாங்கும் போது
நிறைய அப்ளிகேஷன்களை உங்களால் இயக்க முடியாது. அதை தவிர்க்க, சில
அப்ளிகேஷன்களை மெமரி கார்டுக்கு மாற்ற வேண்டும். அதற்கு இது உதவுகிறது.
இதை தரவிறக்கம் செய்ய. இங்கே கிளிக் செய்யவும்
அல்லது இந்த கோடை Bar Code Scanner மூலம் Scan செய்யவும்.
4. App Backup & Restoreஇதை தரவிறக்கம் செய்ய. இங்கே கிளிக் செய்யவும்
அல்லது இந்த கோடை Bar Code Scanner மூலம் Scan செய்யவும்.
நீங்கள் உங்கள் போனில் பயன்படுத்தும் Android அப்ளிகேஷன்களை Backup எடுத்து வைக்க இது பயன்படுகிறது.
அல்லது இந்த கோடை Bar Code Scanner மூலம் Scan செய்யவும்.
5. Android System CleanerAndroid போனும் உங்கள் கணினி போலவே, தேவை இல்லாத அப்ளிகேஷன்கள் ரன் ஆகிக் கொண்டு இருந்தாலோ அல்லது, நாம் எதையும் குளோஸ் செய்யா விட்டாலோ மெதுவாக இயங்கும். இதை தவிர்த்து தேவை இல்லாமல் இயங்கும் வசதிகளை நிறுத்த இது பயன்படுகிறது.
அல்லது இந்த கோடை Bar Code Scanner மூலம் Scan செய்யவும். 6. Opera Mini Browser
எத்தனையோ உலவிகள் இருந்தாலும் opera வுக்கு இன்னும் மவுசு போகவில்லை. சிற்சில குறைபாடுகள் இருந்தாலும். Android மூலம் இணையத்தை பயன்படுத்த சிறந்த உலவி இதுதான்.
அல்லது இந்த கோடை Bar Code Scanner மூலம் Scan செய்யவும். மற்றபடி இணையத்தில் தான் நீங்கள் விழிப்பவர் என்றால் உங்களுக்காகவே 1. Facebook
2. Twitter
3. Blogger
போன்றவையும் இலவசமாகவே கிடைக்கிறது. மேலும் பல வசதிகளை வரும் பதிவுகளில் அறிமுகம் செய்கிறேன்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)